Maruti Suzuki Offers: ரூ. 1.36 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு நவராத்திரி தள்ளுபடியை அறிவித்த Maruti Suzuki - எந்தெந்த வண்டி?
மாருதி சுசுகி நிறுவனம் தனது நெக்ஸா கார்களுக்கு அக்டோபர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கார் நிறுவனமும் தன்னுடைய கார்களுக்கு மாதாந்திர தள்ளுபடி அளிப்பது வழக்கம். அக்டோபர் மாத தள்ளுபடியாக மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக நெக்ஸா கார்களுக்கான தள்ளுபடியை மாருதி சுசுகி அறிவித்துள்ளது.
தள்ளுபடி:
எந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே விரிவாக காணலாம்.
| கார் | வேரியண்ட் | தள்ளுபடி |
| Fronx | 1.2L Petrol Sigma MT / MT / AGS | ரூபாய் 22,100
|
| Fronx | Turbo | ரூபாய் 27,100 |
| Fronx | CNG | ரூபாய் 15,000 |
| Grand Vitara | Sigma Petrol MT | ரூபாய் 1.36 லட்சம்
|
| Grand Vitara | Delta Petrol MT/AT | ரூபாய் 1.26 லட்சம்
|
| Grand Vitara | Zeta/Alpha MT/AT | ரூபாய் 1.15 லட்சம் + 5 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி
|
| Grand Vitara | AWD | ரூபாய் 1.15 லட்சம் + 5 வருட நீட்டிக்கப்பட்ட வாரண்டி
|
| Grand Vitara | Strong Hybrid | ரூபாய் 1.20 லட்சம் + 5 வருடம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி + சாலை வரி சலுகை |
| Grand Vitara | Delta CNG | ரூபாய் 1 லட்சம் |
| Grand Vitara | Zeta CNG | ரூபாய் 90 ஆயிரம் |
| XL6 | Petrol MT/AT | ரூபாய் 61 ஆயிரம் |
| XL6 | CNG | ரூபாய் 50 ஆயிரம் |
| Jimny | அனைத்து வேரியண்ட் | ரூபாய் 35 ஆயிரம் |
| e Vitara | அனைத்து வேரியண்ட் | இலவச சார்ஜர் + ஹோம் இன்ஸ்டாலேஷன் + அப்ளிகேபிள் சலுகை |
| Invicto | அனைத்து வேரியண்ட் | ரூபாய் 95 ஆயிரம் |
நவராத்திரி:
மாருதி சுசுகி அறிவித்துள்ள இந்த சலுகை வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நவராத்திரி பண்டிகை சலுகையாக முன்பதிவு செய்யும் சில கார்களுக்கும் சில பிரத்யேக சலுகை அளிக்கப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி நுகர்வோர் சலுகை, எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், ஸ்க்ரேப்பேஜ் தள்ளுபடி, லாயல்டி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபரான்க்ஸ் காரில் டர்போ பெட்ரோல் வேரியண்ட் காருக்கு ரூபாய் 27 ஆயிரத்து 100 தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1.2 லிட்டர் பெட்ரோல் வேரியண்டிற்கு ரூபாய் 22 ஆயிரத்து 100 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியண்டிற்கு ரூபாய் 15 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















