மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் இந்தியாவில் வெற்றிகரமாக விற்பனையாகி வருகிறது. மாருதி சுசுகி நிறுவனம் தங்களது ஒவ்வொரு கார்களுக்கும் சலுகை அளிப்பது வழக்கம் ஆகும்.
ரூ.80 ஆயிரம் சலுகை:
அந்த வகையில், மாருதி நிறுவனம் அவர்களது Maruti Ignis மாடலுக்கு டிசம்பர் மாதம் சலுகை அறிவித்துள்ளது. வருடத்தின் கடைசி மாதமான இந்த மாதம் மட்டும் ரூபாய் 80 ஆயிரம் சலுகை அறிவித்துள்ளது.
இந்த கார் ஒரு காம்பேக்ட் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 6.45 லட்சம் ஆகும். டிசம்பர் மாதம் 80 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டிருப்பதால் இந்த மாதம் Maruti Ignis காரின் விலை ரூபாய் 5.65 லட்சமாக இருக்கும்.
11 வேரியண்ட்கள்:
இந்த கார் ஒரு நடுத்தர குடும்பத்தினர் பயணிக்க ஏற்ற கார் ஆகும். இந்த காரில் மொத்தம் 11 வேரியண்ட்கள் உள்ளது. இந்த கார் முழுவதும் பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக்கில் ஓடும் திறன் கொண்டது.
இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இந்த கார் 20.89 கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது. 82 பிஎச்பி ஆற்றல் கொண்டது. இந்த காரில் என்னென்ன வேரியண்ட் உள்ளது? என்பதை கீழே காணலாம்.
Ignis Sigma 1.2 MT - ரூ.6.45 லட்சம்
Ignis Delta 1.2 MT - ரூ.7.03 லட்சம்
Ignis Delta 1.2 AGS - ரூ.7.56 லட்சம்
Ignis Zeta 1.2 MT - ரூ.7.65 லட்சம்
Ignis Zeta 1.2 MT Dual Tone - ரூ.7.80 லட்சம்
Ignis Zeta 1.2 AGS Dual Tone - ரூ.8.32 லட்சம்
Ignis Alpha 1.2 MT - ரூ.8.34 லட்சம்
Ignis Alpha 1.2 MT Dual Tone - ரூ.8.49 லட்சம்
Ignis Alpha 1.2 AGS - ரூ.8.87 லட்சம்
Ignis Alpha 1.2 AGS Dual Tone - ரூ.9.02 லட்சம்
நகர்ப்புறத்திற்கு ஏற்ற கார்:
மேலே கூறப்பட்ட விலை இந்த கார்களின் நிரந்தர விலை ஆகும். இந்த விலையில் இருந்து தள்ளுபடி பொருந்தும். ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு 50 ஆயிரம் முதல் ரூபாய் 71 ஆயிரம் வரை விலை குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு ஏற்ற கார் இந்த கார் ஆகும். எஞ்ஜின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். 113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 100 கி.மீட்டர் வேகத்தை 12.93 நொடிகளில் எட்டும் ஆற்றல் கொண்டது. ஆட்டோமெட்டிக் காரில் 14.21 நொடிகளில் இந்த வேகத்தை எட்டும். இந்த காருக்கு பயனாளிகள் 5க்கு 4.6 ஸ்டார் அளித்துள்ளனர்.
கிளான்சா, மாருதி செலேரியோ, மாருதி வேகன்ஆர் ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI