இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. மாருதி ஃபிரான்க்ஸ், டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் ஆகியவை, இந்த பிரிவில் பிரபலமான கார்களாக உள்ளன. இந்த வாகனங்கள் சிறந்த தோற்றத்தை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நல்ல அம்சங்களையும் வழங்குகின்றன. இந்த 3 வாகனங்களில் ஒன்றை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், அவற்றை முழு பணம் செலுத்தி வாங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அவற்றுக்கு வங்கிக் கடனும் பெறலாம். எந்த வாகனம் உங்களுக்கு மிகக் குறைந்த மாதாந்திர தவணையை (EMI) வழங்கும் என்று இப்போது தெரிந்து கொள்வோம்.

3 கார்களின் விலைகளும் என்ன.?

முதலில், மாருதி ஃபிரான்க்ஸின் விலையைப் பற்றிப் பார்ப்போம். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் 7.5 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. அதே சமயம், டாடா நெக்ஸானின் விலை சுமார் 8 லட்சம் ரூபாயில் தொடங்குகிறது. அதோடு, ஹூண்டாய் எக்ஸ்டரின் அடிப்படை மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை 5.79 லட்சம் ரூபாய் ஆகும். மற்ற வாகனங்களை விட டாடா நெக்ஸானின் விலை அதிகமாக இருப்பதால், அதன் மாதாந்திர தவணைகளும் (EMI) அதிகமாக இருக்கலாம்.

எவ்வளவு முன்பணம் செலுத்தினால் கார் கிடைக்கும்.?

நீங்கள் ஒரு கார் வாங்கும்போது 1 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி, மீதமுள்ள தொகையை வங்கியில் கடன் வாங்கினால், கடன் காலம் 5 ஆண்டுகள் மற்றும் வட்டி விகிதம் 9 சதவீதமாக இருக்கும் பட்சத்தில், மாதாந்திர தவணைகளில் உள்ள வித்தியாசம் தெளிவாகத் தெரியும். இதன் விளைவாக, மாருதி ஃபிரான்க்ஸின் அடிப்படை மாடலுக்கான மாதாந்திர தவணை சுமார் 13,000 ரூபாய் முதல் 14,000 ரூபாய் வரை இருக்கலாம்.

ஒவ்வொரு மாதமும் EMI கணக்கீடு என்னவாக இருக்கும்.?

அதே சமயம், டாடா நெக்ஸானுக்கு நீங்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 14,500 ரூபாய் முதல் 15,500 ரூபாய் வரை EMI செலுத்த வேண்டியிருக்கும். இரண்டு கார்களுக்கும் இடையிலான வித்தியாசம் மாதத்திற்கு தோராயமாக 1,000  ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை ஆகும்.

நீங்கள் மூன்றாவது காரான ஹூண்டாய் எக்ஸ்டரை 1 லட்சம் முன்பணம் செலுத்தி வாங்கினால், 9 சதவீத வட்டி விகிதத்தில், 5 ஆண்டுகளுக்கு மாதம் 11,380 ரூபாய் EMI செலுத்த வேண்டும். எனவே, இந்த மூன்று கார்களில், ஹூண்டாய் எக்ஸ்டரைத்தான் நீங்கள் மிகக் குறைந்த EMI-ல் வாங்கலாம். 

எத்தனை ஆண்டுகளில் எவ்வளவு மாதத் தவணை செலுத்த வேண்டும்.?

உங்கள் பட்ஜெட் குறைவாக இருந்தால், ஹூண்டாய் எக்ஸ்டர் காரை வாங்குவதை பரிசீலிக்கலாம். நீங்கள் கடன் காலத்தைக் குறைத்தால், மாதத் தவணை (EMI) சற்று அதிகரிக்கும். உதாரணமாக, நீங்கள் 4 ஆண்டுகளுக்கு கடன் வாங்கினால், மாதத்திற்கு சுமார் 13,600 ரூபாய் மாதத் தவணையாக செலுத்த வேண்டும். அதையே, 3 வருடக் கடனில் வாங்கினால், மாதத் தவணை சுமார் 17,400 ரூபாயாக இருக்கும்.

மேலும், நீங்கள் செலுத்தும் முன்பணத்தை பொறுத்து எத்தனை வருட கடனை பெறலாம் என்பதை முடிவு செய்யுங்கள். ஒருவேளை அதிக முன்பணம் செலுத்தினால், வாங்கும் கடன் அளவு குறையும். அப்படி செய்து, வருடங்களை அதிகமாக போடும் பட்சத்தில், மாதத் தவணை வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. எனவே, உங்கள் பட்ஜெட்டை பொறுத்து, உங்களக்கு விருப்பமான காரை தேர்வு செய்யுங்கள்.

 

 


Car loan Information:

Calculate Car Loan EMI