Maruti e Vitara Launch: மாருதி சுசூகியின் முதல் மின்சார காரான, e விட்டாராவின் ரேஞ்ச் மற்றும் அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement


மாருதி சுசூகி e விட்டாரா லாஞ்ச்:


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாருதி சுசூகி நிறுவனத்தின் முதல் மின்சார காரான e விட்டாரா வரும் நவம்பர் 2ம் தேதி சந்தைப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதன்முறையாக கடந்த 2023ம் ஆண்டு eVX என்ற பெயரில் இந்த காரின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த பாரத் மொபிலிட்டி ஷோவில் காரின் உற்பத்தி மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. உள்நாட்டில் e விட்டாரா மின்சார காரானது, ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மஹிந்த்ரா BE 6, MG ZS EV மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டாடா சியாரா மின்சார எடிஷனுடன் நேரடியாக போட்டியிட உள்ளது. 



e விட்டாரா - பேட்டரி, ரேஞ்ச்


இந்திய சந்தைக்கான விட்டாரா மாடலிலும், வெளிநாடுகளுக்கான எடிஷனில் இருக்கும் அதே பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, இந்த காரில் 49KWh மற்றும் 61KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். முன்புற ஆக்சிலில் இணைக்கப்பட்ட மோட்டாரை கொண்டிருக்கும்.  பெரிய 61KWh பேட்டரி செட்-அப் கொண்ட வெர்ஷன் ஆனது, டூயல் மோட்டார் செட்-அப் மற்றும் ஆல்-வீல் ட்ரைவ் அம்சங்களை கொண்டிருக்கலாம்.


49KWh பேட்டரியுடன் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட வெர்ஷனானது அதிகபட்சமாக 144bhp ஆற்றலை உற்பத்தி செய்து, 344 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது. 61KWh பேட்டரியுடன் ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் அம்சம் கொண்ட வெர்ஷனானது அதிகபட்சமாக 174bhp ஆற்றலை உற்பத்தி செய்து 428 கிலோ மீட்டர் ரேஞ்சும், ஆல்வீல் ட்ரைவ் செட்-அப் கொண்ட வெர்ஷனானது 184bhp ஆற்றலை உற்பத்தி செய்து 394 கிலோ மீட்டர் ரேஞ்சும் அளிக்கக் கூடும். ஆரம்பத்தில் இது ஒற்றை மோட்டார் கான்ஃபிகரேஷனில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்படும். சிறிய இடைவெளிக்கு பிறகு டூயல் மோட்டார் வேரியண்டும் அறிமுகப்படுத்தப்படும்.


e விட்டாரா - வடிவமைப்பு


உற்பத்திக்கு தயாரான e விட்டாரா காரானது, eVX  கான்செப்டிலிருந்த பெரும்பாலான வடிவமைப்பு அம்சங்களை அப்படியே தக்கவைத்துள்ளது. அதன்படி முன் மற்றும் பின்பக்கத்தில் ட்ரை-ஸ்லாஷ் பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி, ஸ்போர்ட்டி 225/50 R19 டயர் (AWD வேரியண்ட்களுக்கு மட்டுமே), முன்புற ஃப்ளாங்குகளில் சார்ஜிங் போர்ட் மற்றும் C-சி-பில்லர் பொருத்தப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகள் ஆகியவை அப்படியே பின்பற்றப்பட்டுள்ளன. புதிய மின்சார எஸ்யுவி ஆனது 4,275மிமீ நீளம், 1,800மிமீ அகலம் மற்றும் 1,635மிமீ உயரம் மற்றும் 2,700மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது.  இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180மிமீ மற்றும் 1,702கிலோ முதல் 1,899கிலோ வரை (வேரியண்டை பொறுத்து) கர்ப் எடையைக் கொண்டுள்ளது.


e விட்டாரா - முக்கிய அம்சங்கள்



  • ஃப்ளோட்டிங் டூயல் ஸ்க்ரீன்ஸ்

  • ட்வி-ஸ்போக் ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல்

  • ரெக்டேங்குலர் ஏசி வென்ட்கள்

  • வயர்லெஸ் மொபைல் சார்ஜர்

  • சிங்கிள் ஜோன் ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல்

  • ஹீடட் மிரர்ஸ்

  • ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ

  • ADAS சூட்

  • ஐசோஃபிக்ஸ் குழந்தைகளுக்கான இருக்கை மவுண்ட்கள்

  • அனைத்து பயணிகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்


e விட்டாரா - விலை விவரம்


வெகுஜன மக்களை ஈர்க்கும் விதமாகவும், போட்டித்தன்மையை சமாளிக்கும் வகையிலேயே e விட்டாராவிற்கான விலையை நிர்ணயிக்க மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, இந்த காரின் விலை 17 லட்சத்தில் தொடங்கி 22.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 


Car loan Information:

Calculate Car Loan EMI