இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் மாருதி சுசுகி நிறுவனம். பட்ஜெட் விலையில் இந்தியாவில் ஏராளமான கார்களை மாருதி சுசுகி நிறுவனம் அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக விற்பனை செய்து வருகிறது.
Maruti Ciaz கார்:
அந்த வகையில் மாருதி சுசுகியின் வெற்றிகரமான கார் Maruti Ciaz ஆகும். 1.5 லிட்டர் 4 சிலிண்டர் எஞ்ஜின் கொண்டது இந்த கார். 5 சீட்டர் காரான இந்த காரில் ஒரு நடுத்தர குடும்பத்தினர் மகிழ்ச்சிகரமாக பயணிக்கலாம். மொத்தம் 9 வேரியண்ட் கொண்ட இந்த கார் பெட்ரோலில் மட்டும் ஓடும் ஆற்றல் கொண்டது.
விலை என்ன?
இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.85 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 15.01 லட்சம் ஆகும். இந்த காரின் அனைத்து வேரியண்ட்களும் 1462 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் கொண்டது ஆகும். இந்த காரின் 4 வேரியண்ட்கள் ஆட்டோமெட்டிக் கார் ஆகும். அதிகபட்சமாக 20.65 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 103 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது.
வேரியண்ட்களும், விலைகளும்:
Ciaz Sigma 1.5 - ரூபாய் 10.85 லட்சம்
Ciaz Delta 1.5 - ரூ.11.50 லட்சம்
Ciaz Zeta 1.5 - ரூ.12.58 லட்சம்
Ciaz Delta 1.5 AT - ரூ.13.40 லட்சம்
Ciaz Alpha 1.5 - ரூ.13.52 லட்சம்
Ciaz Alpha 1.5 Dual Tone - ரூ.13.71 லட்சம்
Ciaz Zeta 1.5 AT - ரூ.13.88 லட்சம்
Ciaz Alpha 1.5 AT - ரூ.14.82 லட்சம்
Ciaz Alpha 1.5 AT Dual Tone - ரூ.15.01 லட்சம்
சிறப்புகள்:
3 ஆயிரம் ஆர்பிஎம் கொண்டது. 4 கியர்களை கொண்டது. கியர்கள் மாற்றுவதற்கு ஏற்ற கார் ஆகும். ஆட்டோமெட்டிக் வெர்சன் போக்குவரத்து நெரிசலில் ஓட்டுவதற்கு மிகவும் எளிதான காராக இருக்கும். ஓட்டுவதற்கு மிகவும் இலகுவான காராக இந்த கார் உள்ளது. 138 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
இந்த காரின் முன்பக்க இருக்கைகள் மிகவும் வசதிகரமானதாக இருக்கும். இந்த காரின் விளக்குகள் மிகவும் வெளிச்சம் கொண்டதாக உள்ளது. இதில் ADAS வசதி இல்லாதது ஒரு குறையாக உள்ளது. இதில் இரண்டு ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ்/ இபிடி வசதி உள்ளது. அதிவேக அலர்ட் எச்சரிக்கை வசதி உள்ளது. இருக்கை பெல்ட் அலர்ட் வசதி உள்ளது. டாப் வேரியண்டில் 16 இன்ச் கட் அலாய் சக்கரங்கள் உள்ளது.
இதன் உட்கட்டமைப்பு வசதிகள் பழைய மாடலிலே அமைந்துள்ளது. பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் ஹோண்டா சிட்டி, ஹுண்டாய் வெர்னா, ஹோண்டா அமேஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது. இந்த காருக்கு பயனாளிகள் 5 ஸ்டாரில் 4.4 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI