மாருதி சுசுகி நிறுவனம் தனது 2026ம் ஆண்டுக்கான பிரெஸ்ஸா காரை நாளை (ஜூலை 24) அறிமுகம் செய்கிறது. இந்த காரை ஏன் வாங்க வேண்டும் என்பது பற்றிக் காணலாம். 

Continues below advertisement

கார் வாங்குவது பலரின் கனவாக இருக்கும். சந்தையில் பல நிறுவனங்களின் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி, மின்சார வாகனங்கள் விற்பனையில் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான சிறப்பைக் கொண்டுள்ளது. இப்படியான நிலையில் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற பிரெஸ்ஸா காரின் 2026 மாடல் அறிமுகமாகிறது. 

இந்த கார் ஏற்கனவே 5 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. மோதல் சோதனைகளில் பாதுகாப்பிலும் சிறப்பான மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் பிரெஸ்ஸா விற்பனைக்கு வந்ததிலிருந்து முதல் முறையாக  புதிய கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்ட டர்போ-பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.  

Continues below advertisement

இந்த காரின் 3 சிறப்பம்சங்கள்

1. டர்போ பெட்ரோல் 

மாருதி பிரெஸ்ஸா காரில் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின் சேர்க்கப்பட்டிருப்பதுதான் இதில் உள்ள முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த 3 சிலிண்டர் இன்ஜின் ஏற்கனவே ஃபிரான்க்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் , பிரெஸ்ஸா காரில் இது இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இது 110 bhp மற்றும் 170 Nm ஆற்றலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2. 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் 

புதிய டர்போ இன்ஜின் மாருதி இதுவரை வழங்காத ஒன்றான 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் வழங்குகிறது. இதுவரை, மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒவ்வொரு மேனுவல் காரும் ஐந்து கியர்களுடனேயே இயங்கி வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தினாலும்,  ஃபிரான்க்ஸ் மாடல் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் தான் விற்பனையாகிறது. இதன் மூலம், இந்த புதிய டிரான்ஸ்மிஷனைப் பெறும் முதல் மாருதி பயணிகள் வாகனம் என்ற பெருமையை பிரெஸ்ஸா பெறுகிறது.

3.  இன்ஜின் ஆப்ஷன்

இன்ஜின் தேர்வுகள் இந்த மாடலுக்கு மற்றொரு புதுமையாக அமைந்துள்ளது. பிரெஸ்ஸா 2025 மாடல் 1.3-லிட்டர் டீசல் இன்ஜினுடன் மட்டுமே அறிமுகமானது. மாருதியின் டீசல் கார்கள் சந்தையிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில் அது பிரத்தியேகமாக 1.5-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுக்கு மாறியது. ஆனால் பிரெஸ்ஸா கார் 1.5-லிட்டர் இன்ஜின் அல்லது டர்போ சார்ஜ் செய்யப்பட்ட இன்ஜின் என தேர்வை நமக்கு வழங்குகிகிறது. 

6-ஸ்பீடு மேனுவல் கொண்ட 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், LXi, VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம்களில் கிடைக்கும். அதே சமயம், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் VXi, ZXi மற்றும் ZXi+ டிரிம்களில் வழங்கப்படும்.

புதிய 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இன்ஜின், பிரத்தியேகமாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைந்து, LXi, VXi, ZXi மற்றும் ZXi+ கிரேடுகளிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI