Mahindra Hybrid SUV: லிட்டருக்கு 25KM மைலேஜுடன் 7 சீட்டர் ஹைப்ரிட் ஆன் தி வே..! மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆதிக்கம்
Mahindra XUV 7XO Hybrid: மஹிந்த்ராவின் XUV 7XO ஹைப்ரிட் எடிஷன் லிட்டருக்கு 22 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mahindra XUV 7XO Hybrid: மஹிந்த்ராவின் முதல் ஹைப்ரிட் கார் மாடலாக XUV 7XO விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது.
மஹிந்த்ராவின் முதல் ஹைப்ரிட் எஸ்யுவி
வலுவான ஆற்றல், அம்சங்கள் மற்றும் பாதுகாப்பில் தலைசிறந்த ஒரு எஸ்யுவியை தேடும் உங்களுக்கு, மைலேஜ் முக்கிய சிக்கலாக இருந்தால், மஹிந்திராவின் XUV 7XO ஹைப்ரிட் எடிஷன் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கலாம். உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமானது தனது மிகவும் பிரபலமான பிரீமியம் SUV-ஐ ஒரு ஹைப்ரிட் அவதாரத்தில் சந்தைப்படுத்த தயாராகி வருகிறது. இது கரடுமுரடான சாலைகளில் பயணத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், 25 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மைலேஜை வழங்குவதன் மூலம் உங்கள் பணத்தையும் மிச்சப்படுத்தும். 7 சீட்டர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் XUV 7XO, சிக்கனமாகவும், உயர் தொழில்நுட்பத்துடனும் மாறவிருக்கிறது. இதுதொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மஹிந்த்ராவின் XUV 7XO ஹைப்ரிட்..!
மஹிந்திரா XUV 7XO அதன் இணையற்ற செயல்திறன் மற்றும் சொகுசான கேபினுக்காக வாடிக்கையாளர்களால் கொண்டாடப்படுகிறது. அதன் பெரிய இன்ஜின் எரிபொருள் சிக்கனத்தை எப்போதுமே ஒரு விவாதப் பொருளாக மாற்றுகிறது. தற்போது, இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக அந்நிறுவனம் ஒரு புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்னை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. வெளியாகியுள்ள தகவல்களின்படி, மஹிந்திரா நிறுவனம் 1.5-லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் ஒரு சக்திவாய்ந்த பேட்டரி பேக்கை ஒருங்கிணைக்க உள்ளது. இந்தத் தொழில்நுட்பம் மாசுபாட்டைக் குறைப்பது மட்டுமல்லாமல், நகரப் போக்குவரத்தில் ஒரு மென்மையான மற்றும் சிக்கனமான ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்கும். இந்த ஹைப்ரிட் அமைப்பின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது குறைந்த வேகத்தில் மின்சார மோட்டாரைப் பயன்படுத்துவதால், பெட்ரோல் நுகர்வு மிகக் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
XUV 7XO ஹைப்ரிட் - லிட்டருக்கு 25கிமீ மைலேஜ்?
மைலேஜை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினாலும், வாகனத்தின் சக்தி குறைக்கப்படாதாம். புதிய 1.5-லிட்டர் ஹைப்ரிட் இன்ஜின் தோராயமாக 180 bhp சக்தியையும் 300 Nm டார்க்கையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹைப்ரிட்டின் செயல்திறன் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினின் வேகம் ஆகிய இரண்டையும் விரும்புபவர்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். புதிய இன்ஜினான் ஆப்ஷனானது, தற்போதுள்ள 2.0-லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் 2.2-லிட்டர் டீசல் இன்ஜின் எடிஷன்களுடன் சேர்த்து விற்கப்படும். இது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.
மைலேஜ் பவிவரங்களைப் பொறுத்தவரை, ஒரு ஹைப்ரிட் காராக இது சுமார் 30 கி.மீ மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால் நிஜ உலக பயன்பாட்டில் குறைந்தது 22 முதல் 25 கிலோ மீட்டர் மைலேஜ் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பெரிய அளவிலான எஸ்யூவி-க்கு இந்த மைலேஜ் விவகாரம் மிகவும் அதிகமாகும்.

XUV 7XO ஹைப்ரிட் - உட்புறம் & அம்சங்கள்
மஹிந்திரா XUV 7XO ஹைப்ரிட்டின் கேபின் ஒரு ஃபைவ்-ஸ்டார் லவுஞ்ச் போல இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஸ்டாண்டர்ட் மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக, நிறுவனம் இதை பிரத்யேக வண்ணங்கள் மற்றும் புதிய பேட்ஜிங்குடன் வழங்கக்கூடும். பிரிவில் முன்னணி இடத்தைப் பிடிக்க தேவையான அனைத்து அதிநவீன அம்சங்களையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. டேஷ்போர்டில் உள்ள பெரிய மூன்று டச்ஸ்க்ரீன் அமைப்பு, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஓட்டுநர் தகவல்களை வெளிப்படுத்துகிறடு. நீண்ட பயணங்களின் போது ஏற்படும் சோர்வைக் குறைப்பதற்காக, வெண்டிலேடட் வசதி மற்றும் பவர் வசதியுடன் கூடிய முன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன.
கேபினுக்கு விசாலமான மற்றும் காற்றோட்டமான உணர்வைத் தருவதற்காக ஒரு பெரிய பனோரமிக் சன்ரூஃபும் உள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை,லெவல் 2 ADAS, ஆட்டோபார்க் மற்றும் 540-டிகிரி கேமரா ஆகியவற்றைக் கொண்டு, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்கிறது. கூடுதலாக, மஹிந்திரா இந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் e-AWD (எலக்ட்ரிக் ஆல்-வீல் டிரைவ்) தொழில்நுட்பத்தையும் வழங்கக்கூடும். இது ஆஃப்-ரோடிங்கின் போது வாகனத்தை இன்னும் அதிக செயல்பாட்டுத்திறன் மிக்கதாக மாற்றும்.

XUV 7XO ஹைப்ரிட் - வெளியீடு, விலை?
ப்ராண்டின் அடுத்த முக்கியமான வெளியீடாக கருதப்படும் XUV 7XO எஸ்யூவியை, 2027-க்குள் அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. ஹைப்ரிட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், இதன் விலை சாதாரண மாடலை விட சற்றே அதிகமாக இருக்கலாம். இதன் ஆன்-ரோடு விலை ரூ.27 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு மாதமும் எரிபொருளுக்காக அதிகம் செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, நீண்ட கால அடிப்படையில் இந்த வாகனம் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது.
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















