XUV 3XO: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் XUV 3XO என்ற காரை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் அடிப்படை விலை 7.4 லட்சம் ரூபாயாகும். XUV 300 காரில் சில மாற்றங்களை மேற்கொண்டு, புதிய காரை மஹிந்திரா நிறுவனம் வடிவமைத்துள்ளது.


இந்த கார்ல அப்படி என்ன ஸ்பெஷல்?


காரின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது. MX, AX, AX3, AX5 and AX7 போன்ற அம்சங்களுடன் பெரிய வகை எஸ்யூவி கார்களுக்கு இணையாக XUV 3XO மஹிந்திரா காரின் வசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.




XUV 3XO வடிவமைப்பை பொறுத்தவரையில், காரின் முன்பகுதி செம்ம ஸ்டைலாக உள்ளது. பலவகை பம்ப்ர் டிசைன்களுடன் பிரண்ட் கிரில்லும் ஹெட் லைட்டின் டிசைனும் (எல்இடி டிஆர்எல்) அசத்தலாக உள்ளன. காரின் இரண்டு பக்கங்களிலும் புதிய அலாய் வீல்கள் 17 இன்சில் பொருத்தப்பட்டுள்ளன.


காரின் பின்பகுதியிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எல்இடி லைட் பார், சி வடிவ லைட் டிசைன் என பார்க்கவே சூப்பராக உள்ளது. XUV400 EV கார் போன்று XUV 3XO உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.


டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வந்துள்ள மிரட்டல் கார்: 


உயர் தரத்துடன் 10.25 அங்குல பெரிய திரை காரின் உட்பறத்தில் பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, காரின் தொழில்நுட்ப வசதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கூடுதல் அம்சங்களுடன் செம்ம லுக்காக 10.25-இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் டிஸ்ப்ளே அமைக்கப்பட்டுள்ளது.


360 டிகிரி கேமராவுடன் முதல் தர பனோரமிக் சன்ரூஃப், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் என பல வசதிகளை சொல்லி கொண்டே போகலாம்.


XUV 3XO காரில் பல பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த ரக கார்களில் இடம்பெறாத அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம், XUV 3XO காரில் இடம்பெற்றது கூடுதல் ப்ளஸ்-ஆக பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என பல வகை எஞ்சின் ஆப்ஷன்களும் உள்ளன.


1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் 6 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. XUV700 போன்றே XUV 3XO பெட்ரோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மஹிந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் கார்களுக்கு போட்டியாக XUV 3XO கார் சந்தைக்கு வந்துள்ளது.


இதையும் படிக்க: Family Cars: 4 பேர் கொண்ட குட்டி குடும்பமா? சொகுசா பயணிக்க குறைந்த பட்ஜெட்டில் உங்களுக்கான கார்களின் லிஸ்ட்..!


Car loan Information:

Calculate Car Loan EMI