Mahindra XUV 3XO: மஹிந்த்ராவின் XUV 3XO காரில் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சங்களால், அதன் விலையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்ற விவரங்களை இங்கே அறியலாம்.
மஹிந்த்ராவின் XUV 3XO அப்க்ரேட்:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் 12 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் டால்பி அட்மாஸ் ஆடியோ தொழில்நுட்பத்தை கொண்ட முதல் கார் மாடல் என்ற பெருமையை மஹிந்த்ராவின் XUV 3XO பெற்றுள்ளது. இந்த அம்சமானது அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட காரின் REVX A, AX5L, AX7 மற்றும் AX7L ஆகிய வேரியண்ட்களில் மட்டும் எக்ஸ்க்ளூசிவ் ஆக வழங்கப்படுகிறது. இந்த செட்-அப்பில் 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டத்துடன் கூடுதலாக சப்வூஃபர் இடம்பெறுகிறது. இதன் மூலம், ”உண்மையான சினிமாடிக் சவுண்ட்ஸ்கேப்பை உருவாக்க ஆழமான பேஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஒலி தெளிவை” பெற முடியும் என கூறப்படுகிறது.
புதிய XUV 3XO வேரியண்ட்களின் விநியோகம்:
டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் கொண்ட புதிய வேரியண்ட்களின் விநியோகம் செப்டம்பர் மாத மத்தியில் தொடங்கும் என கூறப்படுகிறது. XUV 3XO பட்டியலில் இணைந்ததன் மூலம் மஹிந்த்ரா சார்பில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தை கொண்ட கார் மாடல்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக BE 6, XEV 9e மற்றும் தார் ராக்ஸ் ஆகிய கார்களில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இந்த மூன்றுமே நிறுவனத்தின் டாப் மாடல்களாக திகழ்வது குறிப்பிடத்தக்கது.
XUV 3XO - விலை, வேரியண்ட்கள்
மஹிந்த்ராவின் XUV 3XO காம்பேக்ட் எஸ்யுவின் வேரியண்ட்களானது தற்போது, 7.99 லட்சத்தில் தொடங்கி 15.80 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய REVX A, AX5L, AX7 மற்றும் AX7L வேரியண்ட்களின் விலையானது, 8.94 லட்சத்தில் தொடங்கி ரூ.12.62 லட்சம் வரையில் நீள்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் இந்த காருக்கு 44 ஆயிரம் தொடங்கி 89 ஆயிரம் ரூபாய் வரை சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இந்த காரானது டாடா நெக்ஸான், ஹுண்டாய் வென்யு, கியா சோனெட் மற்றும் மாருதி சுசூகி ப்ரேஸ்ஸா ஆகிய கார் மாடல்களிடமிருந்து XUV 3XO போட்டியை எதிர்கொள்கிறது.
XUV 3XO - இன்ஜின் விவரங்கள்
XUV 3XO காம்பேக்ட் எஸ்யுவியில் மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 117bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் டீசல், 131bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் டைரக்ட் இன்ஜெக்சன் டர்போ பெட்ரோல் மற்றும் 111bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் 6 ஸ்பீட் டார்க் கன்வெர்டர் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. எரிபொருள், இன்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் இந்த காரானது லிட்டருக்கு சுமார் 17 முதல் 20 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.
XUV 3XO - அம்சங்கள், வசதிகள்
இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளேக்களாக இரண்டு 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, பனோரமிக் சன்ரூஃப். டூயல் ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், ரியர் ஏசி வெண்ட்கள், டைப்-C ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட், வயர்லெஸ் சார்ஜிங் பேட், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் கூல்ட் க்ளோவ் பாக்ஸ் ஆகிய அம்சங்கள் XUV 3XO கார் மாடலில் நிறைந்துள்ளன. மேலும் பயணத்தை சொகுசாக மாற்றுவதற்காக டேஷ்போர்ட் மற்றும் டோர் பேட்ஸில் சாஃப்ட் டச் மெட்டீரியல்ஸ், விசாலமான இடவசதி மற்றும் வசதியான இருக்கைகள், மூன்று பயணிகள் இருக்கைகளுக்கும் அட்ஜெஸ்டபள் ஹெட்-ரெஸ்ட், ரியர் செண்டர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் கப் ஹோல்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக ரூஃப் ரெயில்ஸ், 17 இன்ச் டூயல் டோன் அலாய் வீல்கள், எல்இடி ப்ரொஜெக்டர் முகப்பு மற்றும் டெயில் விளக்குகள் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.
XUV 3XO - பாதுகாப்பு அம்சங்கள்
பாரத் பாதுகாப்பு பரிசோதனையில் XUV 3XO கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்காக அந்த காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்படுகின்றன. டாப் வேரியண்ட்களில் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், அடானமஸ் எமர்ஜென்சி ப்ரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ஹைபீம் அசிஸ்ட் வசதிகள் அடங்கிய லெவல் 2 ADAS தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது. இதுபோக 360 டிகிரி கேமரா, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் உடன் கூடிய எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், நான்கு வீல்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், ப்ளைன்ட் ஸ்பாட் டிடெக்சன் மற்றும் மானிட்டர் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
Car loan Information:
Calculate Car Loan EMI