Mahindra: மனுஷனே இல்லயா நீ..! எகிறும் வெயிட்டிங் பீரியட், ஒரு வருஷத்துக்கும் மேல, எந்தெந்த கார்களுக்கு?
Mahindra XEV 9S XUV 7XO Waiting Period: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் XEV 9S மற்றும் XUV 7XO கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் 9 முதல் 12 மாதங்கள் வரை நிலவுவதாக அறிவித்துள்ளாது.

Mahindra XEV 9S XUV 7XO Waiting Period: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின் கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ராவின் வெயிட்டிங் பீரியட்:
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் எஸ்யுவி மோகத்தை தீர்ப்பதில், உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் விளைவாக கடந்த ஆண்டின் ஒட்டுமொத்த கார் விற்பனையில், முதல்முறையாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியது. அதேநேரம், ப்ராண்டின் கார்களுக்கான காத்திருப்பு காலம் என்பது வாடிக்கையாளர்களை சற்றே தயங்க செய்கிறது. எண்ட்ரி லெவல் மாடல்கள் ஓரளவிற்கு உடனடியாக டெலிவெரி செய்யப்பட்டாலும், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் சில ப்ரீமியம் கார் மாடல்களுக்கான காத்திருப்பு காலம் என்பது ஓராண்டையும் கடந்து நீள்கிறது. அந்த வகையில் மஹிந்த்ராவின் எந்த கார் மாடலுக்கு, எவ்வளவு காத்திருப்பு காலம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ரா XUV 7XO மாடலுக்கான வெயிட்டிங் பீரியட்
மஹிந்த்ராவின் XUV 700 கார் மாடலானது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்டு XUV 7XO கார் மாடலாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி இந்த காருக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், ஜனவரி 14ம் தேதி முதல் விநியோகம் நடைபெற்று வருகிறது. டாடா சஃபாரி, ஹுண்டாய் அல்கசார் மற்றும் எம்ஜி ஹெக்டருக்கு போட்டியாக, ரூ.13.66 லட்சத்தில் தொடங்கி ரூ.24.92 லட்சம்வரை இதன் விலை நீள்கிறது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இந்த காருக்கான காத்திருப்பு கால விவரங்கள் வெளியாகியுள்ளன.

AX, AX3, AX5, AX7, AX7 Tech மற்றும் AX7 லக்சரி என மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் AX7 வேரியண்ட் கிட்டத்தட்ட அனைத்து ட்ரிம்களிலும் ஒன்று முதல் ஒன்றரை மாதங்களில் உடனடியாக விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், சில வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 12 மாதங்கள் வரை நீடிக்கிறது.
XUV 7XO மாடலுக்கான காத்திருப்பு பட்டியல் (மாதம்)
| வேரியண்ட் | டர்போ பெட்ரோல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் FWD | டர்போ பெட்ரோல் ஆட்டோ ட்ரான்ஸ்மிஷன் FWD | டீசல் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் FWD | டீசல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் FWD | டீசல் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் AWD |
| AX | 12 மாதங்கள் | - | 12 மாதங்கள் | - | - |
| AX3 | 5 மாதங்கள் | 5 மாதங்கள் | 5 மாதங்கள் | - | |
| AX5 | 5 மாதங்கள் | 5 மாதங்கள் | 5 மாதங்கள் | - | |
| AX7 | 1 மாதம் | 1 மாதம் | 1.5 மாதம் | 1.5 மாதம் | - |
| AX7 Tech | - | 1 மாதம் | 1 மாதம் | 1 மாதம் | 1 மாதம் |
| AX7 Luxury | - | 4 மாதங்கள் | 6 மாதங்கள் | 6 மாதங்கள் | 6 மாதங்கள் |
மஹிந்த்ரா XEV 9S மாடலுக்கான வெயிட்டிங் பீரியட்
நேரடி மின்சார கார்களாக அறிமுகமாகி BE6, XRV 9e கார் மாடல்கள் பெரும் வெற்றியை ஈட்டித்தந்ததை தொடர்ந்து, தனது போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் வகையில், XEV 9S காரை மஹிந்த்ரா அறிமுகப்படுத்தியது. இது நாட்டின் முதல் மெயின்ஸ்ட்ரீம் 3 வரிசை இருக்கைகளை கொண்ட கார் மாடலாகும். 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலையானது, ரூ.19.95 லட்சத்தில் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரை நீள்கிறது. 59 kWh, 70 kWh மற்றும் 79 kWh என மூன்று வேரியண்ட்களிலும் கிடைக்கும் இந்த காரானது, அதிகபட்சமாக 679 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த காருக்கான முன்பதிவு அதிகபட்சமாக 9 மாதங்கள் வரை நீள்வதாக மஹிந்த்ரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. XEV 9S மற்றும் XUV7XO ஆகிய கார் மாடல்கள் சேர்ந்து, அறிமுகமான 4 மணி நேரத்தில் 93 ஆயிரம் முன்பதிவுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

XEV 9S மாடலுக்கான காத்திருப்பு பட்டியல் (மாதம்)
மஹிந்த்ரா நிறுவனம் கார் மாடலின் டாப் வேரியண்ட்களை உடனடியாக டெலிவெரி செய்யவே அதிக கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. அதன்படி,
| XEV 9S வேரியண்ட்கள் | காத்திருப்பு காலம் |
| பேக் ஒன் அபோவ் (59 kWh பேக்) | 9 மாதங்கள் |
| பேக் ஒன் அபோவ் (79 kWh பேக்) | 6 முதல் 7 மாதங்கள் |
| பேக் 2 அபோவ் | 4 மாதங்கள் |
| பேக் த்ரீ | 3 முதல் 4 மாதங்கள் |
| பேக் த்ரீ அபோவ் | 3 முதல் 4 மாதங்கள் |
மஹிந்த்ராவின் மற்ற கார்களுக்கான வெயிட்டிங் பீரியட்
- மஹிந்த்ராவின் மற்ற மின்சார கார்களுக்கான காத்திருப்பு காலம் - 5 மாதங்கள் வரை
- தாரின் 4X4, 4X2 வேரியண்ட்களுக்கான காத்திருப்பு காலம் 3 மாதங்கள் வரை
- தார் ராக்ஸ் மாடலுக்கான காத்திருப்பு காலம் 2 மாதங்கள் வரை
- மஹிந்த்ரா ஸ்கார்ப்பியோ & ஸ்கார்ப்பியோ க்ளாசிக் 2 மாதங்கள் வரை
மற்ற பெரும்பாலான மஹிந்த்ரா கார்கள் 1 முதல் 2 மாதங்களில் முன்பதிவு செய்த உடன் விநியோகிக்கப்படுகிறது. புதிய கார் மாடல்களான XEV 9S மற்றும் XUV7XO ஆகியவற்றிற்கு தற்போது தேவை அதிகமாக உள்ளதால், காத்திருப்பு காலமும் சுமார் ஒரு வருடம் வரை நீண்டுள்ளது.
























