Mahindra XEV 9S Electric SUV: மஹிந்த்ராவின் மின்சார 7 சீட்டரான XEV 9S, பணத்திற்கு நிகரான மதிப்பை கொண்ட சிறந்த மின்சார எஸ்யுவி என குறிப்பிடப்படுகிறது.
மஹிந்த்ராவின் XEV 9S மின்சார எஸ்யுவி:
மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய XEV 9S கார் மாடல் மூலம், ஒட்டுமொத்த மின்சார எஸ்யுவி பிரிவையை உலுக்கி எடுத்துள்ளது. இந்த காரின் பேஸ் வேரியண்டானே பேக் ஒன் அபோவ், நமக்கு டாப் வேரியண்ட் எல்லாம் எதற்கு என யோசிக்கும் வகையில் ஏராளமான அம்சங்களை கொண்டுள்ளது. வெறும் ரூ.19.95 லட்சம் விலையில் கிடைக்கும் XEV 9S எஸ்யுவியின் என்ட்ரி லெவல் வேரியண்டானது, செயல்திறன், தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் சொகுசுக்கான வசதிகள் என, மற்ற கார்களின் ஃப்ளாக்ஷீப் வேரியண்ட்களிலும் கிடைக்கும் அத்தனை அம்சங்களையும் தன்னகத்தே பெற்றுள்ளது.
XEV 9S பேக் ஒன் அபோவ் வேரியண்ட் - பேட்டரி ஆப்ஷன்
XEV 9S காரின் பேக் அபோவ் வேரியண்டானது 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டுமே வலுவான செயல்திறன் ஃபாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டுள்ளது. அதன்படி, 20 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகித சார்ஜிங்கை எட்டமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆற்றல் வெளிப்பாடும் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது. பெரிய பேட்டரி பேக் ஆனது 210KW மற்றும் சிறிய பேக் 170KW ஆற்றலை வெளிப்படுத்துகிறது. நிஜ உலகில் அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. ப்ராண்டின் முதல் 7 சீட்டர் மின்சார எஸ்யுவி ஆன XEV 9S கார், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 202 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இந்த கார், நாட்டின் அதிவேகமான 7 சீட்டர் மின்சார எஸ்யுவி என்ற பெருமையை பெற்றுள்ளது.
XEV 9S பேக் ஒன் அபோவ்: மெக்கானிகல் அம்சங்கள்
மெக்கானில் அடிப்படையில் பேக் ஒன் அபோவ் வேரியண்டை தேர்வு செய்பவருக்கு, வேரியபள் கியர் ரேஷியோ உடன் கூடிய எலெக்ட்ரிக் பவர் ஸ்டியரிங், இறுக்கமான 10 மீட்டர் டர்னிங் சர்கிள், பூஸ்ட் மோட் உடன் கூடிய மல்டிபிள் ட்ரைவிங் மோட்ஸ், மல்டி ஸ்டெப் ரிஜெனரேஷன் மற்றும் ஒன் டச் சிங்கிள் பெடல் ட்ரைவிங் வசதிகள் கிடைக்கும். சஸ்பென்ஷன் செட்-அப்பானது, MTV-CL டெக்னாலஜி மற்றும் ஃப்ரீக்வன்சி டிபெண்டண்ட் டேம்பிங்க் உடனான iLINK ஃப்ரண்ட் சஸ்பென்ஷன் மற்றும் 5 லிங்க் ரியர் சஸ்பென்ஷனை உள்ளடக்கியுள்ளது. சத்தத்தை குறைத்து செயல்திறனை மேம்படுத்த, இந்த காரானது NVH ரிடக்ஷன் உடன் கூடிய லோ ரோலிங் ரெசிஸ்டன்ஸ்ட்யர்களை கொண்டுள்ளது.
XEV 9S பேக் ஒன் அபோவ்: வடிவமைப்பு விவரங்கள்
ஸ்டைலிங்கை பொறுத்தவரை பேக் ஒன் அபோவ் ஆனது அடிப்படையானது போன்றே தோன்றுகிறது. அதன்படி, இதில் பெரிய பனோரமிக் சன்ரூஃப், இலுமினேடட் மஹிந்த்ரா லோகோ, பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய ஷார்ப் Bi-LED முகப்பு விளக்கு, முழு எல்இடி டெயில் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில், ப்ரீமியம் ஃபேப்ரிக் உப்ஹோல்ஸ்ட்ரி, 18 இன்ச் வீல்கள் உடன் கூடிய மத்திய கன்சோல்களில் பேக் டச் ஸ்விட்சஸ் வழங்கப்பட்டுள்ளன.
XEV 9S பேக் ஒன் அபோவ் - பாதுகாப்பு அம்சங்கள்
XEV 9S காரின் அடிப்படை வேரியண்டில் கூட 6 ஏர் பேக்குகள், உயர் ஸ்டிஃப்னெஸ் கொண்ட பாடிஷெல், ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்ஸ் மற்றும் ப்ரேக் பை வயர் டெக்னாலஜி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கூடுதலாக 46 மதிப்பு கூட்டப்பட்ட அம்சங்களுடன் கூடிய எலெக்ட்ரிக் ப்ரேக் பூஸ்டர், ஓட்டுனரின் தூக்க கலகத்தை அடையாளம் காணும் சென்சார், தனிப்பட்ட டயர் ப்ரெஷர் டிஸ்பிளே உடன் கூடிய டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் மற்றும் எச்டி கேமரா உடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் ஆகிய அம்சங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
XEV 9S பேக் ஒன் அபோவ் - தொழில்நுட்ப அம்சங்கள்:
தொழில்நுட்ப அடிப்படையில் இந்த காரில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 8155 சிப்செட் மூலம் இயங்கக் கூடிய 3 ஸ்க்ரீன் செட்-அப் இடம்பெற்றுள்ளது. 5ஜி சப்போர்டுடன் கூடிய வயர்லெஸ் ஆண்ட்ராய் மற்றும் ஆப்பிள் கார்பிளே, பில்ட் - இன் அமேசான் அலெக்சா, ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட ஒடிடி, சமூக வலைதளங்கள், செய்தி மற்றும் ஷாப்பிங் செயலிகள் ஆகிய கனெக்டிவிட்டி வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மஹிந்த்ராவின் Me4U கனெக்டட் தொழில்நுட்பமும் உரிமையாளர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம் கேபின் - ப்ரீ கூலிங், அட்டவணையிடப்பட்ட சார்ஜிங் மற்றும் ரிமோட் கமேண்ட்ஸ் போன்ற அம்சங்களை அணுகலாம்.
ஆடியோ செட்-அப்பானது 4 ஸ்பீக்கர்ஸ் மற்றும் 2 ட்வீட்டர்ஸ்களை கொண்டுள்ளது. மற்ற்படி இரண்டாவது வரிசையில் ஸ்லைடிங் இருக்கைகள், மல்டி ஸ்டெப் ரிக்ளைன் கொண்ட 60:40 ஸ்ப்லிட் சீட்ஸ், உயர அட்ஜெஸ்டபள் ஓட்டுனர் இருக்கை மற்றும் சீட்பெல்ட், ஃபுல்லி லோடட் கேபின் வித் புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆட்டோ ஹெட்லேம்ப்ஸ், கூல்ட் சென்டர் கன்சோல், டில்ட் & டெலெஸ்கோபிக் ஸ்டியரிங், ஓட்டுனருக்கு ஒன் டச் பவர்ட் விண்டோ ரெயின் சென்சிங் வைப்பர்ஸ், ரியர் ஏசி வெண்ட்களுடன் கூடிய முழுமையான ஆட்டோமேடிக் டெம்ப்ரேட்சர் கன்ட்ரோல் ஆகிய அம்சங்கள் கவனத்தை ஈர்க்கின்றன.
XEV 9S மின்சார எஸ்யுவி - போட்டியாளர்கள் எப்படி?
அளவீடுகள் ஒப்பீடு:
பவர்ட்ரெயின் ஒப்பீடு:
விலை ஒப்பீடு:
Car loan Information:
Calculate Car Loan EMI