Mahindra XEV 9S: மஹிந்த்ராவின் புதிய XEV 9S காரில் இடம்பெற உள்ள, ப்ரீமியம் வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement


மஹிந்த்ராவின் XEV 9S


இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மஹிந்த்ரா நிறுவனத்தின் போர்ன் எலெக்ட்ரிக் பிரிவில்,  மூன்றாவது மாடலாக ”XEV 9S” மின்சார காரானது வரும் நவம்பர் 27ம் தேதி சந்தைப்படுத்தப்பட உள்ளது. இது நிறுவனத்தின் புதிய முதன்மையான காராக, XEV 9e மாடலுக்கு மேலே நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த எஸ்யுவி கூபேவை போலவே புதிய காரும் ப்ரீமியம் வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் புதிய ஃப்ளாக்‌ஷிப் காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



XEV 9S - உட்புற வசதிகள்


அண்மையில் வெளியான டீசரானது XEV 9S காரின் உட்புறம், பெரும்பாலும் 9e காரை போன்றே இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி புதிய காரில் டேஷ்போர்டில் ஒருங்கிணைக்கப்பட்ட மூன்று 12.3 இன்ச் டிஸ்பிளேக்கள், டச்-ஆப்ரேடட் பட்டன்கள் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஒளிரும் மஹிந்த்ரா நிறுவனத்தின் லோகோ, ஸ்லைட் ஆகக் கூடிய இரண்டாவது வரிசை இருக்கை இடம்பெற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  கூடுதலாக, இந்த காரில் ஆகுமென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே, மெமரி ஃபங்க்சன் கொண்ட வெண்டிலேடட் முன்புற இருக்கை, 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி, ஓட்டுனருக்கு மேனுவல் லம்பர் சப்போர்ட், டால்பி அட்மோஸ் உடன் கூடிய ஹர்மன் கர்டோன் சவுண்ட் சிஸ்டம், 65-வாட் யுஎஸ்பி டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளும் நிரப்பப்பட்டு இருக்கலாம்.


XEV 9S - வெளிப்புற வசதிகள்


XEV 9S காரின் வெளிப்புறத்தில் சீக்வென்சியல் டர்ன் இன்டிகேடர்ஸ், 19 இன்ச் அலாய் வீல்கள், கிக்-ஆக்டிவேடட் பவர் டெயில்கேட், சுமார் 150 லிட்டர் அளவிலான கூடுதல் கார்கோ வசதியை வழங்கக் கூடிய பெரிய ஃப்ரங்க் ஆகிய வசதிகளும் எதிர்பார்க்கப்படுகிறது.


XEV 9S - பாதுகாப்பு அம்சங்கள்


மஹிந்த்ரா நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரிக்க உள்ள இந்த மின்சார எஸ்யுவியில், மிகவும் மேம்படுத்தப்பட்ட பல பாதுகாப்பு அம்சங்ளையும் இடம்பெறச் செய்யக்கூடும். அதன்படி, ஃபார்வர்ட் கொலீசன் வார்னிங் சிஸ்டம், ஆட்டோமேடிக் எமர்ஜென்சி ப்ரேகிங், ட்ரைவர் ட்ரோசினெஸ் டிடெக்‌ஷன், எவாசிவ் ஸ்டியரிங் அசிஸ்ட், லேன் டிபார்ட்சுர் வார்னிங், லேன் கீப்பிங் அசிஸ்ட், லேன் சென்டரிங் ஃபங்க்சன், ட்ராஃபிக் சைன் ரிகக்னைஷன், ஃப்ரண்ட் வெஹைகிள் ஸ்டார்ட் அலெர்ட், ப்ளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன், ஃபார்வர்ட் மற்றும் ரியர் க்ராஸ்  ட்ராஃபிக் அலெர்ட் மற்றும் டோர் ஓபன் அலெர்ட் ஆகியவை ADAS தொழில்நுட்பத்தில் அடங்கியுள்ள அம்சங்களாகும். கூடுதல் பாதுகாப்பிற்காக 7 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


XEV 9S - வடிவமைப்பு


மஹிந்த்ராவின் புதிய XEV 9S இன் நிழல் போன்றே XUV700 காட்சியளித்தாலும், ஸ்கேட்போர்ட் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்ட முற்றிலும் மாறுபட்ட வாகனமாக உருவாகி வருகிறது. இது செமி-ஆக்டிவ் டேம்பர்கள் மற்றும் வேரியபள் - ரேஷியோ பவர் ஸ்டீயரிங் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். மேலும் அட்ஜெஸ்டபள் ரிஜெனரேடிவ் ப்ரேக்கிங் மற்றும் ஒன்-பெடல் டிரைவிங் வசதிகளை வழங்கும்.


XEV 9S - பேட்டரி விவரங்கள்


மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய XEV 9S  மின்சார காரில், ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு வேரியண்ட்களை அறிமுகப்படுத்தக்கூடும். இரண்டிலுமே முன்புற சக்கரங்களுக்கு ஆற்றலை கடத்தக்கூடிய பெர்மனண்ட் மேக்னெட் சின்க்ரோனஸ் மோட்டாரை பெற வாய்ப்புள்ளது. ஸ்டேண்டர்ட் ரேஞ்ச் வேரியண்டிற்கான மோட்டார்  228 hp மற்றும் 380 Nm ஆற்றலையும், லாங் ரேஞ்ச் வேரியண்டிற்கான மோட்டார் 282 hp and 380 Nm ஆற்றலையும் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 59KWh மற்றும் 79KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். முழுமையாக சார்ஜ் செய்தால் முதல் வேரியண்ட் 500 கிலோ மீட்டர் தூரத்திற்கும், இரண்டாவது வேரியண்ட் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கும் ரேஞ்ச் அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Car loan Information:

Calculate Car Loan EMI