இந்திய கார் சந்தையில் தனக்கென மிகப்பெரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம் மஹிந்திரா. இவர்களது கார்களுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Continues below advertisement

எஸ்யூவி கார் தயாரிப்பில் தொடர்ந்து அசத்தி வரும் மஹிந்திரா இந்தாண்டு மற்றும் அடுத்தாண்டு பல்வேறு புதிய கார்களை அறிமுகப்படுத்த உள்ளது. அவர்கள் அறிமுகப்படுத்த உள்ள புதிய 6 கார்களின் விவரங்களை கீழே காணலாம்.

1.New Mahindra Scorpio-N

மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்பு ஸ்கார்பியோ. இதன் அப்டேட் வெர்சனாக இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது இந்த New Mahindra Scorpio-N. இதன் ஃபேஸ்லிஃப்ட் இந்தாண்டு இடைப்பகுதியில் அறிமுகம் ஆகும் என்று கருதப்படுகிறது. பழைய ஸ்கார்பியோவில் இருந்த முகப்பு விளக்குகள், உட்புறத்தோற்றம், முன்பக்க கிரில் கம்பிகள், பம்பர்ஸ் அனைத்தும் புதிய வடிவங்களில் இடம்பெற உள்ளது. 18 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளது. 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

2. New Mahindra Thar:

3 கதவுகள் கொண்ட Mahindra Thar காரின் அப்டேட் வெர்சனாக இந்த New Mahindra Thar அறிமுகமாக உள்ளது. இந்தாண்டின் பிற்பாதியில் இந்த கார் அறிமுக வாய்ப்புகள் அதிகளவு ஆகும். மஹிந்திரா தார் ராக்ஸ் போன்ற தோற்றத்தில் இந்த கார் அறிமுகமாக உள்ளது. 19 இன்ச் சக்கரங்கள், கீலெஸ் வசதி, புஷ் - பட்டன் ஸ்டார்ட்/ ஸ்டாப் வசதி, இருக்கையின் காற்றோட்ட வசதி என பல்வேறு சிறப்புகள் இடம்பிடிக்க உள்ளது. எஞ்ஜின் மற்றும் கியர்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது.

3. Mahindra Scorpio-N Pickup Truck:

பிக்கப் வாகனங்களிலும் மஹிந்திராவிற்கு என்று தனிப்பெருமை உண்டு. இசுசு நிறுவனத்திற்கு போட்டியாக மஹிந்திரா செயல்பட்டு வருகிறது. மஹிந்திராவின் பிக்கப் வாகனமாக  அறிமுகமாக உள்ளது இந்த Mahindra Scorpio-N Pickup Truck. அவர்கள் அறிமுகம் செய்ய உள்ள Mahindra Scorpio-N காரின் டிசைனில் மாற்றம் செய்யப்பட்டு பிக்கப் வாகனமாக இது அறிமுகமாக உள்ளது.

4. Mahindra Vision S:

மஹிந்திராவின் படைப்புகளிலே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள கார் Mahindra Vision S. இந்த Mahindra Vision S கார் அடுத்தாண்டு அறிமுகமாக உள்ளது. Mahindra XUV 3XO காம்பேக்ட் எஸ்யூவி காரைப் போன்று திட்டமிட்டுள்ளது.  இந்த கார் பெட்ரோல் - எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் காராக அறிமுகமாக உள்ளது. இந்த கார் 2027ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 

5.Mahindra Vision T:

மஹிந்திராவின் மிகவும் புகழ்பெற்ற காராக சந்தையில் அறிமுகமாகியிருப்பது Mahindra Vision T.  அடுத்தாண்டு பிற்பாதியில் இந்த கார் Mahindra Vision T. சிங்கிள் மோட்டார் ஆர்டபுள்யூடி வேரியண்ட் மற்றும் டூயல் மோட்டார் ஏடபுள்யூடி வேரியண்ட் ஆக அறிமுகமாக உள்ளது.

6. Mahindra BE 7/BE.07:

இந்த Mahindra BE 7/BE.07 கார்  எலக்ட்ரிக் காராக அறிமுகமாக உள்ளது. 4.6 மீட்டர் நீளமும், 1.9 மீட்டர் அகலமும், 1.7 மீட்டர் உயரமும் கொண்டது.  2.8 மீட்டர் அகலமும் கொண்டது.  இந்த கார் சிங்கிள் மோட்டார் ஆர்டபுள்யூடி வேரியண்டில் அறிமுகமாக உள்ளது. 228 எச்பி, 380 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 59 கிலோவாட் பேட்டரி மற்றும் 79 கிலோவாட் பேட்டரி கொண்ட காராக இந்த கார் அறிமுகமாகிறது.  59 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஒரே சார்ஜில் 530 கிலோமீட்டர் மைலேஜும், 79 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட கார் ஒரே சார்ஜில் 650 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.


Car loan Information:

Calculate Car Loan EMI