Mahindra Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் மார்ச் மாதத்திற்குள், மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மஹிந்திராவின் புதிய கார்கள்:
மஹிந்திரா நிறுவனம் தனது எஸ்யுவி போர்ட்ஃபோலியோவை வலுப்படுத்தும் விதமாக, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நான்கு புதிய கார்களை சந்தைப்படுத்த முடிவு செய்துள்ளது. அதில் இரண்டு புதிய மின்சார எஸ்யுவிக்கள் மற்றும் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட XUV 700 மற்றும் தார் ஆகிய கார் மாடல்கள் அடங்கும். வழக்கமான எஸ்யுவி மற்றும் மின்சார சந்தையில் தொடர்ந்து போட்டித்தன்மையை தக்கவைக்க, தனது விரிக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த கார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளன.
மஹிந்திரா XUV 700 எலெக்ட்ரிக் (XEV 7e)
மஹிந்திரா நிறுவனம் சார்பில் அடுத்ததாக விற்பனைக்கு வரவுள்ள முதல் மின்சார கார் மாடலாக XEV 7e உள்ளது. இது XUV 700 காரின் மின்சார எடிஷனாகும். INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் இந்த காரானது, நிறுவனம் சார்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட XEV 9e காரில் உள்ள பல அம்சங்கள் மற்றும் வடிவமைப்புகளை கடனாக பெற உள்ளது. அதேநேரம், இதனை நடைமுறைக்கு உகந்ததாக உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. XEV 9e ஸ்போர்ட்டியர் எஸ்யுவி கூபேவாக இருக்க, XEV 7e குடும்பங்களுக்கு ஏற்ற 7 சீட்டர் அமைவுகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
நிறுவனத்தின் மின்சார கார்களின் பட்டியலில் XEV 9e கார் மாடலுக்கு மேலே புதிய கார் நிலைநிறுத்தப்பட உள்ளது. இதன் விலையானது தற்போது ரூ.21.90 லட்சம் என்ற தொடக்கவிலையை கொண்டுள்ள XEV 9e கார் மாடலை காட்டிலும், கூடுதலாக ரூ.2 முதல் ரூ.2.5 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டு, XEV 7e ப்ரீமியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இடவசதி மற்றும் மின்சார எடிஷனை விரும்புவோருக்கான நல்ல ப்ரீமியம் தேர்வாக XEV 7e காரை மாற்றுகிறது.
இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் சந்தைப்படுத்தக்கூடும் என கூறப்படும் இந்த காரில், ADAS உடன் மூன்று ஸ்க்ரீன் டிஸ்பிளேக்கள், ஹர்மன் கார்டோன் ஆடியோ சிஸ்டம் போன்ற ப்ரீமியம் அம்சங்களும் இடம்பெறக்கூடும். 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கக் கூடிய வகையில், இரட்டை மோட்டார் ஆல் வீல் ட்ரைவும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகிறது.
2. புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி
வரும் மார்ச் மாதத்திற்குள் அறிமுகப்படுத்த உள்ள தனது இரண்டாவது மின்சார கார் மாடலை, மஹிந்திரா தற்போது வரை அறிமுகப்படுத்தாவிட்டாலும், அதில் பல பெயர்கள் அடிபடுகின்றன. இதில் முதலாவதாக அடிக்கடி சாலை பரிசோதனைகளில் சிக்கும் XUV 3XO கார் மாடல் உள்ளது. அடுத்ததாக Vision S, Vision T, Vision SX மற்றும் Vision SXT ஆகிய கான்செப்ட்களில் ஒன்றாக இருக்கக் கூடும். இவை அனைத்தும் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட உள்ளது. புதிய தலைமுறை பொலேரோ மற்றும் பொலேரோ மின்சார எடிஷன் ஆகியவற்றை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துவதையும் மஹிந்திரா உறுதி செய்துள்ளது.
3. மஹிந்திரா XUV 700 ஃபேஸ்லிஃப்ட்
மஹிந்திராவின் முதன்மையான கார் மாடலான XUV 700 ஃபேஸ்லிஃப்ட் மூலம் அப்க்ரேட்களை பெற்று, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. தோற்ற அடிப்படையில் மேம்பாடு, உட்புற மேம்படுத்தல்கள், தொழில்நுட்ப அப்க்ரேட்கள் ஆகியவற்றை பெற்றாலும், இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிப்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முகப்பு விளக்குகள், புதிய க்ரில், அப்டேடட் பம்பர்ஸ், திருத்தப்பட்ட டெயில் லேம்ப்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன. புதிய அலாய் வீல்களும் எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்க்ரீன் மற்றும் பயணிகளுக்கான டிஸ்பிளே என மூன்று ஸ்க்ரீன் செட்-அப்களை கொண்டிருக்கக்கூடும்.
கூடுதல் இணைப்பாக புதிய சீட் அப்ஹோல்ஸ்ட்ரி, வெண்டிலேடட் இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள், ரியர் சன் ப்ளைண்ட்ஸ் மற்றும் அப்க்ரேடட் ADAS தொழில்நுட்பங்கள் வழங்கப்படலாம். அதேநேரம், தற்போதைய எடிஷனில் உள்ள அதே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடர உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களை கொண்டிருப்பதோடு, ஆல் வீல் ட்ரைவ் ஆப்ஷனும் தொடரும் என கூறப்படுகிறது.
4. மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்திராவின் அடையாளமாக மாறிப்போன தார் கார் மாடல் அப்க்ரேட் செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. 5 டோர் ராக்ஸ் அடிப்படையில் மேம்படுத்தல்கள் வழங்கப்படுகின்றன. பெரிய க்ரில், மேம்படுத்தப்பட்ட எல்இடி முகப்பு விளக்குகள், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருப்பது, சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்டுகின்றன. ரியர் பகுதியிலும் சிறிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
உட்புறத்தில் கூடுதல் அம்சங்கள் நிறைந்த பயண அனுபவத்தை புதிய எடிஷன் வழங்கப்பட உள்ளது. டேஷ்போர்டில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் க்ளைமேட் கண்ட்ரோல் உடன் புதிய ப்ரீமியம் டச்களும் வழங்கப்படலாம். புஷ் - பட்டன் ஸ்டார்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், வெண்டிலேடட் சீட்ஸ் மற்றும் 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்கள் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படலாம்.
இன்ஜினில் எந்தவித மாற்றமும் இன்றி 2.2 லிட்டர் டீசல், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை தொடர உள்ளது. கூடுதலாக அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டரிங் உள்ளிட்ட லெவல் 2 ADAS அம்சங்களை பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் அம்சங்களை தொடர்ந்து ஃபோர்ஸ் கூர்கா, மாருதி ஜிம்னி ஆகிய கார் மாடல்களுக்கு கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய விலையான ரூ.11.50 லட்சம் முதல் ரூ.17.62 லட்சத்திலிருந்து, ஃபேஸ்லிஃப்ட் தார் எடிஷன் சற்றே விலை உயர்வை பெறலாம்.
Car loan Information:
Calculate Car Loan EMI