Mahindra Thar OG Variant Wise Price: மஹிந்த்ராவின் தார் ஒஜி மாடலானது AXT, LXT மற்றும் ZXT என மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

Continues below advertisement

மஹிந்த்ரா தார் OG அறிமுகம்:

மஹிந்த்ரா நிறுவனம் தனது பிரபலமான ஆஃப்-ரோட் எஸ்யுவி ஆன தார் மாடலை அப்க்ரேட் செய்து, தார் OG என்ற பெயரில் சந்தைப்படுத்தியுள்ளது. அறிமுக கால சலுகையாக இதன் தொடக்க விலை ரூ.10.32 லட்சம் (எக்ஸ் -ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக கால விலை நவம்பர் 30 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. AXT, LXT மற்றும் ZXT என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விநியோகம் அக்டோபர் 11ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த புதிய ஆஃப்-ரோடரில் 1.5 லிட்டர் மற்றும் 2.2 லிட்டர் என இரண்டு டீசல் இன்ஜின்களுடன், 2.0 லிட்டர் பெட்ரோ இன்ஜின் ஆனது ரியர் வீல் ட்ரைவ் மற்றும் 4 வீல் ட்ரைவ் கான்ஃபிகரேஷனில் கிடைக்கிறது. 

Continues below advertisement

தார் OG - வேரியண்ட் வாரியாக விலை விவரங்கள்

கீழே வழங்கப்பட்டுள்ள அறிமுக கால சலுகைக்கான அனைத்து விவரங்களும் வரும் நவம்பர் 30ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு திருத்தப்பட்ட விலைப்பட்டியலை மஹிந்த்ரா நிறுவனம் வெளியிடும்.

பெட்ரோல் எடிஷன் விலை

வேரியண்ட்ரியர் வீல் ட்ரைவ் ஆட்டோமேட்டிக்4 வீல் ட்ரைவ் மேனுவல்4 வீல் ட்ரைவ் மேனுவல் ஆட்டோமேட்டிக்
AXT---
LXT ரூ.14.77 லட்சம்ரூ.15.60 லட்சம்ரூ.17.23 லட்சம்
ZXTரூ.16.09 லட்சம்ரூ.16.60 லட்சம்ரூ.17.75 லட்சம்

டீசல் எடிஷன் விலை

வேரியண்ட்1.5 லிட்டர் டீசல் RWD மேனுவல்2.2 லிட்டர் டீசல் RWD ஆட்டோமேட்டிக்2.2 லிட்டர் டீசல் RWD மேனுவல்2.2 லிட்டர் டீசல் RWD ஆட்டோமேடிக்
AXTரூ.10.32 லட்சம்---
LXT ரூ.12.99 லட்சம்ரூ.16.49 லட்சம்ரூ.16.43 லட்சம்ரூ.18.00 லட்சம்
ZXTரூ.13.99 லட்சம்ரூ.17.49 லட்சம்ரூ.17.49 லட்சம்ரூ.18.99 லட்சம்

டீசல் வேரியண்ட்கள் ரூ.10.32 லட்சம் என்ற தொடக்க விலையிலேயே கிடைத்தாலும், பெட்ரோல் இன்ஜின் எடிஷனானது சுமார் ரூ.4.45 லட்சம் என்ற கூடுதல் தொடக்க விலையை கொண்டுள்ளது.

தார் OG - இன்ஜின் விவரங்கள்

இன்ஜின்பவர்டார்க்அம்சங்கள்சராசரி மைலேஜ்
1.5 லிட்டர் டீசல்117 hp300 NmRWD, MT11-13 KMPL
2.2 லிட்டர் டீசல்150 hp330 NmRWD AT, 4WD MT & AT10-12 KMPL
2.0 லிட்டர் பெட்ரோல்160 hp330 NmRWD AT / 4WD MT & AT8-10 KMPL

இதையும் படியுங்கள்: Turbo Petrol SUVs: ரூ.8 லட்சம் பட்ஜெட்டில் டாப் 5 டர்போ பெட்ரோல் எஸ்யுவிக்கள் - மைலேஜ், பெர்ஃபார்மன்ஸ் விவரங்கள்

தார் OG - டாப் வேரியண்ட் அம்சங்கள்

AXT, LXT ஆகிய வேரியண்ட்களில் உள்ள அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன், டாப் வேரியண்டான ZXT-யில் பல ப்ரீமியம் வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 

  • புதிய 19 இன்ச் அலாய் வீல்கள்
  • DRL-களுடன் கூடிய LED முகப்பு விளக்குகள்
  • எல்இடி முன்புற பனி விளக்குகள்
  • கார்னரிங் ஃபங்க்சன்
  • வயர்லெஸ் சார்ஜர்
  • முன் மற்றும் பின் டிஸ்க் ப்ரேக்குகள்
  • டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஷ்டம்
  • ரியவியூ கேமரா
  • நான்கு HPTS உட்பட மொத்தம் ஆறு ஏர்பேக்குகள்
  • அதிர்வெண் சார்ந்த தணிப்பு
  • முன்பக்க பார்க்கிங் சென்சார்கள்
  • எம்போஸ்ட் லெதரெட் இருக்கை
  • லெதரெட் வ்ராப்ட் ஸ்டீயரிங் வீல்

Car loan Information:

Calculate Car Loan EMI