Mahindra Thar 5 Door vs 3 Door: மஹிந்திராவின் புதிய 5 கதவுகள் கொண்ட தார் மாடல் காரில் இடம்பெறும், என எதிர்பார்க்கப்படும் டிசைன், அம்சங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திராவின் தார் மாடல் கார்:
மஹிந்திரா நிறுவனம் தனது முதல் தார் மாடல் காரை கடந்த 2010ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன் கம்பீரமான வடிவமைப்பு, ஆஃப் ரோடிலும் அநாயசமாக செல்லும் திறன் ஆகியவற்றால், பயனாளர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2020-ல் இரண்டாவது தலைமுறை தார் கார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கும் அமோக வரவேற்பு கிடைக்க, கடந்த ஜனவரி மாதம் Thar 2WD மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு, விரைவில் 5 கதவுகளுடன் கூடிய தார் மாடல் கார் அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், அடுத்த ஆண்டில் மஹிந்திர நிறுவனத்தின் மிகப்பெரிய வெளியீடாக புதிய தார் கார் இருக்கும் என கூறப்படும் சூழலில், அதுதொடர்பான பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது.
Thar 5 Door vs 3 Door:
புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள 5 கதவுகளை கொண்ட தார் காரானது 3-கதவு கொண்ட தார் மாடலுடன் பல்வேறு வித்தியாசங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 5 கதவுகளை கொண்ட தார் மாடலில் 3 கதவுகளை கொண்டதை விட அதிக ஆடம்பர மற்றும் வசதியின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் இரண்டிற்கும் இடையே கணிசமான விலை வித்தியாசம் நிலவக்கூடும். அண்மையில் வெளியான புதிய தாரின் சோதனை ஓட்ட புகைப்படத்தில் அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு மாற்றங்களை உணர முடிந்தது.
Thar 5 Door வடிவமைப்பு:
வெளியான சோதனை ஓட்ட புகைப்படத்தின் படி, தார் 5 கதவு மாடலானது மிகவும் நீளமானது மற்றும் 3-கதவுக்கு மேல் அதிக சாலை இருப்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் புதிய ஸ்லேட்டுகளுடன் வித்தியாசமான கிரில் வடிவமைப்பைப் பெறுகிறது. 5-கதவு வெவ்வேறு உலோகக் கலவை பயன்பாட்டை பெற்றுள்ளது. முன்பக்கமும் புதிய LED முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது. பின்புற டெயில்-லைட் புதிய லைட்டிங் சீக்வென்ஸை கொண்டிருக்கிறது.
உட்புறத்தில் அசத்தலான வடிவமைப்பு:
உட்புறத்தில் செய்யப்பட்டுள்ள பெரிய மாற்றத்தால் 3-கதவு பதிப்பைக் காட்டிலும் புதிய பதிப்பில் அதிக அம்சங்களைக் கொண்டிருக்கும். பின்புற கேமரா, முன் மற்றும் பின்புற ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் பெரிய 10 அங்குல தொடுதிரை ஆகியவை எதிர்பார்க்கப்படும் முக்கிய அம்சங்களாக உள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக 3-கதவு பதிப்பில் இல்லாத சன்ரூஃப் வசதி 5-கதவு பதிப்பில் இருக்கிறது. இது வாய்ஸ் அசிஸ்டடாக இருந்தாலுமே அது ஒரு பனோரமிக் ஆக இருக்காது என கருதப்படுகிறது.
பவர்டிரெயின், இதர அம்சங்கள்:
Car loan Information:
Calculate Car Loan EMI