Thar.e Vision T Concept: மஹிந்திரா நிறுவனம் மின்சார எடிஷன் தார் காரின் விஷன் டி கான்செப்ட் தொடர்பாக, தற்போது வரையிலான தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மஹிந்திராவின் விஷன் டி கான்செப்ட்:

மஹிந்திரா நிறுவனம் விரைவில் காட்சிப்படுத்த உள்ள, விஷன் டி கான்செப்ட் (Vision T Concept) வாகனத்தை முதல்முறையாக டீஸ் செய்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, மும்பையில் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுந்தந்திர தினத்தின்போது நடைபெறும் இத்தகைய நிகழ்ச்சியில்,  மஹிந்திராவின் எதிர்கால திட்டங்கள், புதிய கான்செப்ட்களின் அறிமுகம், தொழில்நுட்ப பயணம் ஆகியவை தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கம்.

 

விஷன் டி கான்செப்ட்: INGLO P1 பிளாட்ஃபார்ம்

அந்த வகையில் தான் நடப்பாண்டில் விஷன் டி வாகனத்தின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக தற்போது வெளியாகியுள்ள டீசரில், ஒட்டுமொத்த டிசைனும் மின்சார தாரின் பாக்ஸி கட்டமைப்பை முன்னோக்கி எடுத்துச் செல்வதை காட்டுகிறது. இந்த மின்சார 5 டோர் கான்செப்டானது கடந்த 2023ம் ஆண்டு காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டின் போது, ​​Thar.e மஹிந்திராவின் INGLO P1 பிளாட்ஃபார்மின் கஸ்டமைஸ்ட் எடிஷனில் அமர்ந்திருக்கும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பிளாட்ஃபார்மானது குறிப்பாக ஆஃப்-ரோடு சார்ந்த EV-களுக்காகவே உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: 7 Seater SUV: 140 கோடி பேர்னா சும்மாவா - கூட்டமா போக 7 சீட்டர், ஹைப்ரிட் பவரில் மிரட்டும் புதிய எடிஷன் - கார்களின் லிஸ்ட்

விஷன் டி கான்செப்ட்: வடிவமைப்பு

வழக்கமான எலெக்ட்ரிக் க்ராஸ் ஓவர்களுடன் ஒப்பிடும்போது, இந்த காரின் கட்டமைப்பானது அதிகப்படியான வீல்பேஸ் மற்றும் உயர்த்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் வழக்கமான ”பாடி ஆன் ஃப்ரேம்” செட்டப்பையே, தங்களது கரடுமுரடான எலெக்ட்ரிக் மாடல்களுக்கும் பயன்படுத்துவர். ஆனால், மஹிந்திரா நிறுவனம் ஒட்டுமொத்தமாக புதிய முயற்சியை எடுத்துள்ளது. ஆனால், அதன் பலன் எப்படி இருக்கும் என்பதை அறிய காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

டீசர் அடிப்படையில், விஷன் டி கான்செப்டானது, மின்சார அடிப்படையிலான தார் கான்செப்டிலிருந்து மேம்படுத்தப்பட்ட பல டிசைன் முன்னேற்றங்களை பெற்றுள்ளது. இது மஹிந்திராவின் எதிர்கால மின்சார வாகனங்களின் டிசைனுக்கான முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது. விஷன் டி கான்செப்டோடு சேர்ந்து, Freedom NU என பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சியில் மேலும் 4 கான்செப்ட்கள் மற்றும் புதிய பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தவும் மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.

அறிமுகமாக உள்ள புதிய வாகனங்கள்?

மும்பையில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் புதிய தலைமுறை பொலேரோ உட்பட, இன்ஜின் மற்றும் மின்சார அடிப்படையிலான வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திரா நிறுவனம், XUV 700 மற்றும் 3 டோர் தாரின் ஃபேஸ்லிப்ட் எடிஷன்களை தயாரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இரண்டு கார்களுமே சாலை பரிசோதனையின் போது பலமுறை புகைப்படங்களில் சிக்கியுள்ளது. 

கூடுதலாக மின்சார காம்பேக்ட் எஸ்யுவிக்களான XUV 3X0 மற்றும் XUV.e8 அடிப்படையிலான XEV 7e கார் மாடல்களும் தயாராகி வருகின்றன. மேற்குறிப்பிடப்பட்ட 5 கார் மாடல்களும் நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதோடு, மஹிந்திரா அதன் பிரீமியம் கார் மாடல்களுக்கு ஹைப்ரிட் பவர்டிரெய்ன் விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறது. இதுதொடர்பான அறிவிப்புகளை நிறுவனம் வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI