மஹிந்திரா நிறுவனம் தனது பிரபலமான எஸ்யூவி மாடலான ஸ்கார்பியோ-N-இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய Z8T எனும் வேரியண்டுடன், Level 2 ADAS தொழில்நுட்பத்தையும் தற்போது ஸ்கார்பியோ-N பெற்றிருக்கிறது.

Continues below advertisement

புதிய Z8T வேரியண்ட் மற்றும் விலை விவரம்

Z8T வேரியண்ட் இந்தியாவில் ரூ.20.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) தொடக்க விலையில் அறிமுகமாகியுள்ளது. இது, Z8 மற்றும் மேம்பட்ட Z8L மாடலுக்கு இடைப்பட்டதாகும். ADAS தொழில்நுட்பம் Z8L வேரியண்டில் வழங்கப்படுவதால், Z8T மாடலில் அதற்கேற்ப விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ADAS Level 2 தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள்:

முன்னே செல்லும் வாகன எச்சரிக்கை, தானாகவே Emergency Brake செயல்படுதல், லேன் கீப்பிங் அசிஸ்ட், அடாப்டிவ் கிரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்களை ADAS வழங்குகிறது. இவை XUV700, XUV 3XO, புதிய தார் Roxx மற்றும் மஹிந்திரா இலக்ட்ரிக் வாகனங்களான BE6 மற்றும் XEV9e-இல் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.

Continues below advertisement

Scorpio-N இல் புதிய Segment-First அம்சங்கள்

ஸ்பீட் லிமிட் அலர்ட், முன்பக்க வாகனம் நகர ஆரம்பிக்கும் போது அறிவிக்கும் Front Vehicle Start Alert ஆகியவை முதல்முறையாக ஸ்கார்பியோ-N-இல் கிடைக்கின்றன. காட்சி எச்சரிக்கைகள், ஒலி அலர்ம்கள், ஹாப்டிக் ஃபீட்பேக் மூலம் இயக்குனரின் கவனத்தை அதிகரிக்கின்றன.

Z8T வேரியண்டின் கூடுதல் வசதிகள்

  • 18 இஞ்ச் டையமண்ட் கட் அலாய் வீல்கள்
  • 12 ஸ்பீக்கர் கொண்ட சோனி ஆடியோ சிஸ்டம்
  • முன்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா
  • 6 வழிகளில் அமைக்கக்கூடிய பவர் டிரைவர் சீட்
  • இலகுவான Electronic Parking Brake (EPB)
  • குளிரூட்டும் முன்புற இருக்கைகள்
  • தானாக மங்கும் ரியர் வியூவ் மிரர் (IRVM)

எஞ்சின் மற்றும் பிற விவரங்கள்:

மேலும் இந்த  ஸ்கார்பியோ-N-இல் எந்தவிதமான மெக்கானிக்கல் மாற்றமும் செய்யப்படவில்லை. அதில் இயல்பாகவே 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என இரு வகை எஞ்சின்கள் உள்ளது. மானுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ.13.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

மஹிந்திரா XUV7 vs புதிய ஸ்கார்பியோ-N Z8T/Z8L 

Z8T வேரியண்டின் விலை ரூ.20.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதில் Z8L மாடலில் காணப்படும் பெரும்பாலான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், முக்கியமான Level 2 ADAS (Advanced Driver Assistance Systems) தொழில்நுட்பம் இதில் வழங்கப்படவில்லை.

Z8L மாடலுடன் ஒப்பிடுகையில், Z8T வேரியண்ட் சுமார் ரூ.1.13 லட்சம் குறைவான விலையில் கிடைக்கிறது. அதே நேரத்தில் முக்கிய வசதிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பீட் லிமிட் அலர்ட் மற்றும் Front Vehicle Start Alert ஆகியவை இரண்டு மாடல்களிலும் வழங்கப்படுகின்றன. ஆனால், ஸ்கார்பியோ-N-இல் இவை Segment First அம்சங்களாகும். 

இதேபோன்று, 18 இன்ச் அலாய் வீல்கள், 12 ஸ்பீக்கர் கொண்ட Sony ஆடியோ சிஸ்டம், 360 டிகிரி கேமரா, குளிரூட்டும் முன்புற இருக்கைகள் மற்றும் Electronic Parking Brake ஆகியவை இரண்டும் கார்களிலும் ஒரே மாதிரியாக தான் உள்ளது.

விலையும் ஒன்றே:

இரண்டின் விலைகளை ஒப்பிட்டுபார்க்கும்போது, இரு கார்களும் ரூ.13.99 லட்சம் தொடக்க விலையில் ஆரம்பிக்கிறது. XUV700 மாடலின் டாப் எண்ட் விலை சுமார் ரூ.26 லட்சம் முதல் ரூ.28 லட்சம் வரை இருக்கும் நிலையில், ஸ்கார்பியோ-N Z8L மாடலின் டாப் எண்ட் விலை ரூ.25.42 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சில அம்சங்களில் ஸ்கார்பியோ-N பின்தங்கினாலும், அதிகபட்ச வசதிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இதுவரை மஹிந்திராவின் எந்த Internal Combustion Engine (ICE) எஸ்யூவியிலும் காணப்படாத சில புதிய அம்சங்களும் இதில் அறிமுகமாகியுள்ளன.

மஹிந்திரா தொடர்ந்து தனது எஸ்யூவி வரிசைகளை புதுப்பித்து வருகிறது. ஸ்கார்பியோ-N, அதன் பிரபலமான விற்பனை மாடலாக இருப்பதால், இதில் மேற்கொண்டுள்ள இந்த புதுப்பிப்புகள் மிகவும் அவசியமாக இருந்தன.

தற்போதைய இந்த மேம்பாடுகள், ஸ்கார்பியோ-N மற்றும் அதன் சகோதர மாடல்களான XUV700, தார் Roxx இடையிலான வசதிகள் மற்றும் விலை இடைவெளியை குறைத்து விட்டன என்று கூறலாம் என்று சொன்னால் அது மிகையாகாது.


Car loan Information:

Calculate Car Loan EMI