2.50 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Bolero Neo முதல் Scorpio N வரை - Mahindra சூப்பர் ஆஃபர்!
மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா. இந்தியாவில் ஒவ்வொரு கார் நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களை மகிழ்விப்பதற்காக மாதந்தோறும் தள்ளுபடி அறிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளது.
மாருதி சுசுகி, வோல்க்ஸ்வேகன் ஆகிய கார் நிறுவனங்கள் தங்களது கார்களுக்கு செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ள நிலையில், மஹிந்திரா நிறுவனமும் செப்டம்பர் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.:
தள்ளுபடி:
1. Bolero Neo - ரூபாய் 10 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி + அதிகபட்சமாக ரூபாய் 10 ஆயிரம் + எக்சேஞ்ச்
2. Bolero Neo Plus - ரூபாய் 15 ஆயிரம் ராெக்கத் தள்ளுபடி +ரூபாய் 10 ஆயிரம் அசெசரிஸ் - ரூபாய் 25 ஆயிரம் அதிகபட்ச தள்ளுபடி + எக்சேஞ்ச்
3. XUV 3XO - ரூபாய் 50 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி + ரூபாய் 10 ஆயிரம் அசெசரிஸ் - ரூபாய் 60 ஆயிரம் அதிகபட்ச எக்சேஞ்ச்
4. Scorpio Classic - ரூபாய் 30 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி + ரூபாய் 20 ஆயிரம் அசெசரிஸ் - அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம்
5. Scorpio N - ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 1.25 லட்சம் + ரூபாய் 25 ஆயிரம் அசெசரிஸ் - அதிகபட்சமாக ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி
6. Thar 4WD - ரூபாய் 20 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி + ரூபாய் 30 ஆயிரம் அசெசரிஸ் - அதிகபட்சமாக ரூபாய் 50 ஆயிரம்
7. Thar Roxx - ரூபாய் 90 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி + ரூபாய் 30 ஆயிரம் அசெசரிஸ் - ரூபாய் 1.20 லட்சம் தள்ளுபடி
8. XUV400 EV - ரொக்கத் தள்ளுபடி ரூபாய் 2.50 லட்சம்
மஹிந்திராவின் XUV400 மின்சார காருக்கு ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 2.50 லட்சம் தள்ளுபடியாக இருக்கும். Scorpio N மற்றும் Thar Roxx ரூபாய் 1.20 லட்சம் ரொக்கத் தள்ளுபடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற Bolero Neo காருக்கு ரூபாய் 10 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. Bolero Neo Plus ரொக்கத் தள்ளுபடியாக ரூபாய் 15 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் இந்த புகழ்பெற்ற கார்களுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டிருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















