இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது மஹிந்திரா. இன்று இந்திய சாலைகளில் சக்கைப்போடு போடும் கார் நிறுவனமாக திகழ்வது மஹிந்திரா. மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு நவம்பர் மாத தள்ளுபடி அறிவித்துள்ளது.
1.Marazzo:
மஹிந்திராவின் முக்கியமான படைப்பாக இருப்பது Marazzo கார் ஆகும். எம்பிவி/ எம்யூவி காரான இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.49 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளனர். 6 வேரியண்ட்களை கொண்ட இந்த கார் 1497 சிசி திறன் கொண்டது ஆகும். டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
2. XUV400:
எஸ்யூவி ரக காரான இந்த XUV400 காரின் தொடக்க விலை ரூபாய் 16.62 லட்சம் ஆகும். எலக்ட்ரிக் காரான இந்த கார் 34.5 கிலோவாட் பேட்டரி மற்றும் 39.4 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இந்த காருக்கு அதன் வேரியண்டிற்கு ஏற்ப இரண்டு தொகையில் தள்ளுபடி அளித்துள்ளனர். 3 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஒரு வேரியண்டிற்கும், ரூபாய் 1 லட்சத்து 25 ஆயிரம் மற்றொரு வேரியண்டிற்கும் அளித்துள்ளனர்.
3. XUV700:
மஹிந்திராவின் மற்றொரு வெற்றிகரமான படைப்பு இந்த XUV700 ஆகும். அதிநவீன வசதிகள் கொண்ட இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.19 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 1997 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசல் இரண்டிலும் ஓடும் ஆற்றல் கொண்டது.
4. Scorpio Classic:
மஹிந்திராவின் புகழ்பெற்ற கார்களில் ஒன்று இந்த Scorpio Classic ஆகும். 7 அல்லது 9 சீட்டர்களை கொண்ட எஸ்யூவி காரான இதன் தொடக்க விலை ரூபாய் 16.36 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 2 ஆயிரத்து 184 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
5. Thar Roxx:
இன்று இந்திய சாலையை அதிகளவில் ஆக்கிரமித்துள்ள கார் இந்த Thar Roxx ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.47 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். 1997 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. 12.4 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
6. XUV 3XO:
மஹிந்திராவின் புகழ்பெற்ற வெற்றிகரமான கார் இந்த XUV 3XO ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 8.71 லட்சம் ஆகும். இந்த காருக்கு ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 55 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர். இந்த கார் 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 18.89 கி.மீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது.
7.Scorpio-N:
மஹிந்திராவின் Scorpio-N காரின் தொடக்க விலை ரூபாய் 16.63 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 25 ஆயிரம் வரை தள்ளுபடி அளித்துள்ளனர்.
8. Bolero:
இந்த Bolero காரின் தொடக்க விலை 9.53 லட்சம் ரூபாய் ஆகும். இந்த கார் டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது. 1493சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. இந்த காருக்கு 80 ஆயிரம் தள்ளுபடி அளித்துள்ளனர்.
9. Bolero Neo:
மஹிந்திராவின் பொலிரோவின் அப்டேட் வெர்சன் இந்த Bolero Neo ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.15 லட்சம் ஆகும். இந்த காருக்கும் ரூபாய் 80 ஆயிரம் சலுகை அளித்துள்ளனர். 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது ஆகும். டீசலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
இந்த சலுகை வரும் நவம்பர் மாதம் வரை உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI