Mahindra Hybdrid: நானும் களத்துக்கு வரேன்..! 7 & 5 சீட்டர்களை ஹைப்ரிட்டாக அப்க்ரேட் செய்யும் மஹிந்த்ரா - டாப் மைலேஜ்
Mahindra Hybdrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது முதல் ஹைப்ரிட் கார் மாடல்களாக, இரண்டு 7 சீட்டர்களை மஹிந்த்ரா நிறுவனம் மேம்படுத்தி வருகிறதாம்.

Mahindra Hybdrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களது முதல் ஹைப்ரிட் கார் மாடல்களாக, XUV 7XO மற்றும் XEV 9e ஆகிய இரண்டு கார் மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாம்.
ஹைப்ரிட் பக்கம் கவனத்தை திருப்பும் மஹிந்த்ரா
இந்திய கார் சந்தையில் ஹைப்ரிட் நோக்கிய பயணமானது வேகமாக அதிகரித்து வருகிறது. வழக்கமான இன்ஜின் அடிப்படையிலான கார் மாடல்களுடன் ஒப்பிட்டால், வலுவான செயல்திறன் மற்றும் சிக்கனமான எரிபொருள் செலவு காரணமாக ஹைப்ரிட் மாடல்கள் மேம்பட்டதாக விளங்குகிறது. மின்சார வாகனங்களை போன்று ஹைப்ரிட் வாகனங்களுக்கு சார்ஜிங் செய்வதற்கான உட்கட்டமைப்புகள் ஏதும் அவசியமில்லை. ரேஞ்ச் தொடர்பான கூடுதல் ஆலோசனைகளையும் பயனர்கள் கொண்டிருக்க வேண்டியதில்லை.
தற்போதைய சூழலில் ஹைப்ரிட் பிரிவில் இன்னோவா ஹைக்ராஸ், அர்பன் க்ரூசர் ஹைரைடர் மற்றும் கேம்ரி போன்ற மாடல்கள் மூலம் டொயோட்டா நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுபோக மாருதி சுசூகி மற்றும் ஹோண்டா போன்ற நிறுவனங்களும் பயணத்தை தொடங்கியுள்ளன. ஹுண்டாய், கியா, ரெனால்ட் மற்றும் மஹிந்த்ரா போன்ற கார் உற்பத்தி நிறுவனங்களும் ஹைப்ரிட் பிரிவில் தடம் பதிக்க பரிசீலித்து வருகின்றன. அந்த வரிசையில் உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமான மஹிந்த்ராவும், XUV 7XO மற்றும் XUV 9e ஆகியவற்றில் ஹைப்ரிட் மற்றும் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் மின்சார வாகனங்கள் இரண்டையும் சந்தைப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறதாம்.
மஹிந்த்ராவின் XUV 7XO ஹைப்ரிட் வெர்ஷன்
மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடரைப் போலவே, விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள மஹிந்திரா ஹைப்ரிட் எஸ்யூவியும், சக்கரங்களுக்கு ஆற்றலளிப்பதற்காக ஒரு பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஒரு எலெக்ட்ரிக் மோட்டாரைக் கொண்ட ஒரு சக்திவாய்ந்த ஹைப்ரிட் அமைப்பைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே சந்தையில் உள்ள தங்களது இன்ஜின் அடிப்படையிலான எஸ்யூவிகள் பலவற்றிலும் இதே சக்திவாய்ந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. XUV 7XO அதைப் பெறும் முதல் மாடல்களில் ஒன்றாக இருக்கலாம். W613 என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்ட மஹிந்திரா XUX 7XO ஹைப்ரிட் எஸ்யூவி, சோதனையில் இருப்பதாகவும், 2027ம் ஆண்டில் அறிமுகமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூடுதல் ரேஞ்சில் XEV 9e
மஹிந்திரா தனது புதிய தலைமுறை INGLO பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான எலெக்ட்ரிக் எஸ்யூவிகளுக்காக ரேஞ்ச்-எக்ஸ்டெண்டர் தொழில்நுட்பத்தையும் பரிசீலித்து வருகிறது. இந்த அமைப்பைக் கொண்ட நிறுவனத்தின் முதல் மின்சார வாகனம் மஹிந்திரா XEV 9e ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது. W623 என்ற கோட் நேமை கொண்ட இந்த மாடல், 2028-ல் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது. தனது நிரூபிக்கப்பட்ட 1.2-லிட்டர் மற்றும் 1.5-லிட்டர் இன்ஜின்களுக்கான ஹைப்ரிட் பயன்பாடுகள் பரிசீலனையில் உள்ளதாம்.
ஸ்கேட்போர்டு மின்சார வாகனங்களின் ஆர்கிடெக்ட்சர், இன்ஜின், கியர்பாக்ஸ் மற்றும் எக்சாஸ்டர் அமைப்பைப் பொருத்தும் வகையில் முதலில் வடிவமைக்கப்படாததால், மஹிந்திரா ஒரு விரிவான பொறியியல் பணியை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் செயல்முறையில், ப்ளாட்ஃபார் லே-அவுட்டை மறுசீரமைத்தல், வெப்ப மேலாண்மை அமைப்பை மேம்படுத்துதல், நொறுங்கும் பிரிவுகளை திருத்தியமைத்தல் மற்றும் புதிய விபத்துப் பாதுகாப்புச் சரிபார்ப்புகளை நடத்துதல் ஆகியவை அடங்கும்.
Before You Go
Tirupati laddu to ayodhya: அயோத்தி ராமருக்கு ஏழுமலையானின் GIFT! | Ayodhya Ram Temple | ttd
ட்ரெண்டிங் செய்திகள்






















