மத்திய அரசு கார்களுக்கான ஜிஎஸ்டி வரியை குறைத்த பிறகு ஒவ்வொரு நிறுவனத்தின் கார்களின் விலையை லட்சக்கணக்கில் குறைந்துள்ளது. இந்த வரிசையில் டாடா, ரெனால்ட் நிறுவனங்கள் நேற்று தங்களது குறைக்கப்பட்ட விலையை அறிவித்த நிலையில் இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திராவும் தங்களது காருக்கான விலையை குறைத்துள்ளது. 

விலை குறைப்பு:

எந்தெந்த காருக்கு எவ்வளவு விலையை மஹிந்திரா குறைத்துள்ளது என்பதை கீழே காணலாம்.

1. Bolero/Neo  - ரூபாய் 1.27 லட்சம்

2. XUV3XO ( பெட்ரோல்) - ரூபாய் 1.40 லட்சம்

3. XUV3XO ( டீசல்) - ரூபாய் 1.58 லட்சம்

4. Thar 2WD( டீசல்) - ரூபாய் 1.06 லட்சம்

5. Thar 4WD ( டீசல்) - ரூபாய் 1.01 லட்சம்

6. Scorpio Classic - ரூபாய் 1.35 லட்சம்

7. Scorpio-N - ரூபாய் 1.45 லட்சம்

8. Thar Roxx - ரூபாய் 1.43 லட்சம்

9. XUV700 - ரூபாய் 1.43 லட்சம்

மஹிந்திரா நிறுவனம் தனது வெற்றிகரமான படைப்புகளான தார், XUV700, XUV300 உள்ளிட்ட கார்களின் விலையை 1.40 லட்சம் வரை குறைத்துள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1. Bolero Neo:

மஹிந்திரா நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று Bolero Neo ஆகும். இந்த இரண்டு கார்களுக்கும் பழைய ஜிஎஸ்டி வரி 31 சதவீதம் ஆகும். தற்போது இது 18 சதவீதத்தின் கீழ் வருகிறது. இதனால், 1.27 லட்சம் வரை இனிமேல் இதன் விலை குறைக்கப்படும். இதன் தொடக்க விலை ரூபாய் 9.97 லட்சமாக இருந்த நிலையில் இனி 1.27 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்படும்.

2.XUV3XO ( பெட்ரோல்)

இந்திய சாலைகளில் கம்பீரமாக உலா வரும் மஹிந்திராவின் படைப்பு இந்த XUV3XO ஆகும். பெட்ரோலில் ஓடும் XUV3XO இந்த காருக்கு ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியுடன் சேர்த்து 29 சதவீத வரி இருந்து வந்தது. தற்போது 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பதால் இதன் விலை ரூபாய் 1.40 லட்சம் வரை குறைவாக விற்கப்படும். இந்த காரின் ஆரம்ப விலை  ரூபாய் 7.49 லட்சம் ஆகும். இதன் பின்னர், ரூபாய் 1.40 லட்சம் வரை குறைவாக விற்கப்படுகிறது.

3.XUV3XO ( டீசல்)

மஹிந்திராவின் டீசலில் ஓடும் XUV3XO காருக்கு முன்பு ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியுடன் சேர்த்து 31 சதவீதம் இருந்தது. தற்போது புதிய ஜிஎஸ்டி 18 சதவீதமாக மாற்றப்பட்டிருப்பதால் இதன் விலை ரூபாய் 1.56 லட்சம் வரை குறைந்துள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 9.99 லட்சமாக இருந்த நிலையில் இனி ரூபாய் 1.56 லட்சம் குறைவாக விற்பனை செய்யப்படும். 

4. Thar 2WD:

மஹிந்திராவின் தார் கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.  டீசலில் ஓடும் இரண்டு கதவுகள் கொண்ட Thar காருக்கு முன்பு ஜிஎஸ்டி செஸ் வரியுடன் சேர்த்து 31 சதவீதம் வரி இருந்தது. தற்போது 18 சதவீதத்திற்கு கீழ் வந்துள்ளதால் அதன் விலை ரூபாய் 1.06 லட்சம் வரை குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.  தார் காரின் தொடக்க விலையே ரூபாய் 11 லட்சம் ஆகும்.

5. Thar 4WD:

4 கதவுகள் கொண்ட டீசலில் ஓடும் Thar காருக்கு முன்பு 48 சதவீத வரி இருந்தது. தற்போது இது 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ரூபாய் 1.01 லட்சம் வரை கார்களின் விலை குறைந்துள்ளது.

6. Scorpio Classic:

இந்தியாவில் அதிகளவு பயன்படுத்தப்படும் மஹிந்திராவின் கார்களில் Scorpio ஒன்றாகும். முன்பு இந்த காருக்கு ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரியுடன் சேர்த்து 48 சதவீதம் வரி இருந்தது. தற்போது 40 சதவீதமாக இந்த வரி குறைக்கப்பட்டு இருப்பதால் ரூபாய் 1.35 லட்சம் நிரந்தரமாக விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலையான ரூபாய் 17.72 லட்சத்தில் இருந்து இனி குறைத்து விற்கப்படும்.

7.Scorpio-N:

டீசலில் ஓடும் இந்த Scorpio-N காரின் தொடக்க விலை ரூபாய் 13.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு 48 சதவீத வரி முன்பு இருந்தது. தற்போது 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதால் இந்த காரின் விலை ரூபாய் 1.45 லட்சம் குறைவாக விற்கப்பட உள்ளது. 

8. Thar Roxx:

Thar காரின் அப்டேட் வெர்சன் இந்த Thar Roxx ஆகும். இந்த காருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இந்த காரின் தொடக்க விலை பெட்ரோலில் ரூபாய் 16 லட்சமும், டீசலில் ரூபாய் 18 லட்சமும் ஆகும். முன்னர் ஜிஎஸ்டி மற்றும் செஸ் வரி சேர்த்து 48 சதவீதம் இருந்த நிலையில், தற்போது 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பதால் முன்பை காட்டிலும் ரூபாய் 1.43 லட்சம் குறைவாக விற்கப்பட உள்ளது.

9. XUV700:

மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்பாக இன்று  விற்பனையாகி கொண்டிருப்பது இந்த XUV700 ஆகும். இந்த காருக்கு முன்னர் 48 சதவீத வரி இருந்த நிலையில், தற்போது 40 அனைத்து வரி உள்பட 40 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால், இதன் விலை ரூபாய் 1.43 லட்சம் வரை நிரந்தரமாக குறைக்கப்பட்டு இனி விற்கப்பட உள்ளது. பெட்ரோலில் இதன் தொடக்க விலை ரூபாய் 18.39 லட்சமாகவும், டீசலில் இதன் தொடக்க விலை ரூபாய் 19 லட்சமாகவும் விற்பனையாகி வருகிறது. தற்போது இந்த விலை குறைந்துள்ளது.

மஹிந்திரா நிறுவனம் தங்களது வெற்றிகரமான வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பும் கார்களின் விலையை குறைத்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI