Mahindra Price Hike: SUV பிரியர்கள் ஷாக்..! மொத்தமாக விலையை உயர்த்திய மஹிந்த்ரா - எந்த காருக்கு எவ்வளவு?
Mahindra Price Hike: மஹிந்த்ரா நிறுவனம் தனது போர்ட்ஃபோலியோவில் ஒரே ஒரு மாடலை தவிர்த்து, மற்ற எல்லா எஸ்யுவி கார் மாடல்களுக்கும் ஏப்ரல் 6 முதல் விலை உயர்வை அறிவித்துள்ளது.

Mahindra Price Hike: மஹிந்த்ரா நிறுவனம் எந்தெந்த கார் மாடலுக்கு எவ்வளவு விலையை உயர்த்தியுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த்ரா கார்களின் விலையேற்றம்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த 2026 நிதியாண்டில் அதிக விற்பனையை பதிவு செய்த, கார் உற்பத்தி நிறுவனங்காளில் உள்நாட்டு நிறுவனமான மஹிந்த்ரா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து எஸ்யுவி மற்றும் வணிக வாகனங்களின் விலையையும், வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் 2.5 சதவிகிதம் உவரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதேநேரம், அண்மையில் மேம்படுத்தி சந்தைப்படுத்தப்பட்ட XUV 7X0 கார் மாடலுக்கு மட்டும் இந்த விலை உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு ஏன்?
கடந்த 2026 நிதியாண்டில் ப்ராண்டின் எஸ்யுவிக்கள் மற்றும் முற்றிலும் மின்சார கார் மாடல்களுக்கு வலுவான தேவை நீடித்தது. இந்த நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறிய விலை உயர்வானது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என மஹிந்த்ரா நம்புகிறதாம். பல்வேறு செலவுகளின் விகிதம் அதிகரித்து இருப்பதே விலை உயர்வுக்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.5 சதவிகித விலை உயர்வு என அறிவிக்கப்பட்டாலும், பயணிகள் வாகனங்களுக்கான ஒட்டுமொத்த விலையேற்றமானது சராசரியாக 1.6 சதவிகிதம் மட்டுமே என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல, XUV 7X0 கார் மாடலை முன் பதிவு செய்யும் முதல் 40 ஆயிரம் பேருக்கு விலை உயர்வில் எந்த தாக்கமும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஹிந்த்ரா கார் மாடல் விலை உயர்வு - எந்த மாடலுக்கு? எவ்வளவு?
மஹிந்த்ரா நிறுவனம் தரப்பில் இந்திய சந்தையில் எஸ்யுவி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அவற்றின் தற்போதைய விலை விவரங்களும், 1.6 சதவிகிதம் அளவிற்கு உயர்த்தப்பட்டால் அதன் புதிய உத்தேச விலை வரம்பு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. ப்ராண்ட் தரப்பில் புதிய விலைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| மஹிந்த்ரா மாடல்கள் | தற்போதைய விலை நிலவரம் (எக்ஸ் - ஷோரூம்) | புதிய உத்தேச விலை பட்டியல் |
| XUV 7XO | ரூ.13.66 - 25.07 லட்சம் | மாற்றம் இல்லை |
| XUV 3XO | ரூ.7.37 - 14.55 லட்சம் | ரூ.7.49 - ரூ.14.78 லட்சம் |
| XUV 3XO EV | ரூ.13.89 - 14.96 லட்சம் | விலை மாற்றம் இல்லை |
| தார் | ரூ.9.99 - 17.19 லட்சம் | ரூ.10.15 - 17.47 லட்சம் |
| தார் ராக்ஸ் | ரூ.12.39 - 22.25 லட்சம் | ரூ.12.59 - 22.61 லட்சம் |
| ஸ்கார்ப்பியோ க்ளாசிக் | ரூ.13.00 - 16.90 லட்சம் | ரூ.13.20 - 17.17 லட்சம் |
| ஸ்கார்ப்பியோ என் | ரூ.13.49 - 24.34 லட்சம் | ரூ.13.71 - 24.73 லட்சம் |
| பொலேரோ | ரூ.7.99 - 9.80 லட்சம் | ரூ.8.12 - 9.96 லட்சம் |
| பொலேரோ நியோ+ | ரூ.10.90 - 12.99 லட்சம் | ரூ.11.07 - 13.20 லட்சம் |
| XEV 9e | ரூ.21.90 - 30.50 லட்சம் | விலை மாற்றம் இல்லை |
| XEV 9s | ரூ.19.95 - 29.45 லட்சம் | விலை மாற்றம் இல்லை |
| BE 6 | ரூ.18.90 - 26.90 லட்சம் | விலை மாற்றம் இல்லை |
மின்சார வாகனங்களுக்கு விலக்கு
அதேநேரம் ப்ராண்டின் மின்சார வாகனங்களுக்கு விலை உயர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 3XO EV, XEV 9e, BE 6 மற்றும் XEV 9S கார் மாடல்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ப்ராண்டின் போர்ன் மின்சார கார் மாடல்களான XEV 9e, BE 6 மற்றும் XEV 9S ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமான விற்பனையை பதிவு செய்துள்ளன. இதன் மூலமாக நாட்டில் அதிகம் மின்சார கார்களை விற்பனை செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் பட்டியலில் மஹிந்த்ரா மூன்றாவது இடத்தில் உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
























