இந்தியாவில் நாளுக்கு நாள் கார்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நடுத்தர மக்களும் கார்கள் பயன்படுத்தும் நோக்கத்தில் முன்னணி கார் நிறுவனங்கள் நல்ல சொகுசு கார்களை பட்ஜெட் விலையில் தயாரித்து வருகின்றனர். 

அந்த வகையில் 10 லட்சம் ரூபாய் பட்ஜெட்டிற்கு கீழே உள்ள எஸ்யூவி கார்களை கீழே காணலாம். இந்த கார்கள் எல்லாம் டீசலில் இயங்கும் கார்கள் ஆகும்.

1.மஹிந்திரா பொலிரா:

மஹிந்திரா பொலிரா கார் மிகவும் மலிவு விலை எஸ்யூவி கார் ஆகும். இந்திய சந்தையில் பலரால் விரும்பப்படும் காராக உள்ளது. இதன் விலை ரூபாய் 9.81 லட்சம் ஆகும். 1.5 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ டீசல் எஞ்சினில் இந்த கார் இயங்குகிறது. 76 பிஎஸ் பவரும், 210 என்.எம் டார்க்கும்( இழுதிறன்) கொண்டது இந்த கார். கிராமப்புற மற்றும் வளர்ந்து வரும் நகர்ப்புற பகுதி மக்கள் அதிகம் விரும்பும் காராக இந்த கார் உள்ளது. 

2. மஹிந்திரா XUV 3XO:

மஹிந்திரா XUV 3XO கார் மற்றொரு மலிவு விலை காராக அமைந்துள்ளது. இதன் விலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும். எம்.எக்ஸ்.2 வேரியண்டாக இந்த கார் உள்ளது. இந்த காரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 300 என்.எம். டார்க் திறன் கொண்டது இந்த மஹிந்திரா XUV 3XO. பிஎஸ்சின் அதிகபட்ச பவர் 117 ஆகும்.  இந்த கார் 6 கியர்களை மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் கொண்டது. 

3. கியா சோனெட்:

எஸ்யூவி கார்களிலே பார்ப்பதற்கு மிகவும் அம்சமான காராக இருப்பது கியா சோனெட். இதன்விலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும்.  இது ஸ்பெக் எச்.டி.இ. ஓ வேரியண்டைச் சேர்ந்தது.  இந்த காரில் 1.5 லிட்டர் சிஆர்டிஐ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  114 பிஎச்பி திறன் கொண்டது. இழுதிறன் எனப்படும் டார்க் 250 என்.எம். ஆகும்.  இந்த காரில் 6 கியர் உள்ளது. ஆட்டோமெட்டிக்காகவும், மேனுவல் கியராகவும் உள்ளது. இது 24.1 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. 

4. டாடா நெக்சான்:

புகழ்பெற்ற டாடா நிறுவனத்தின் நெக்சான் காரின் ஆரம்பவிலை ரூபாய் 9.99 லட்சம் ஆகும்.  இது ஸ்மார்ட் ப்ளஸ் வேரியண்ட் ஆகும்.  1.5 லிட்டர் ரெவாடோர்க் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்ட கார் இது. 113 பிஎச்பி மற்றும் 260 என்.எம்.டார்க் வசதி கொண்டது. 6 கியர்களை கொண்ட இந்த கார் ஆட்டோமெட்டிக் கியர் வசதியிலும், மேனுவல் கியர் வசதியிலும் உள்ளது.  இது 23.23 கிலோ மீட்டர் மைலேஜ் தருகிறது. 

5. ஹுண்டாய் வெனுயூ:

ஹுண்டாய் வெனுயூ கார் 1.5 லிட்டர் சிஆ்ர்டிஐ டீசல் எஞ்சின் திறன் கொண்டது. 114 பிஎச்பி ஆற்றலையும், 250 என்எம் டார்க் திறனும் கொண்டது.  இதன் விலை ரூபாய் 10.80 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.  இது மிட் ஸ்பெக் எஸ் ப்ளஸ் வேரியண்டைச் சேர்ந்தது.  இது 6 கியர்களை கொண்ட கார். மேனுவல் கியராக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. இது லிட்டருக்கு 24.2 கிலோமீட்டர் தருகிறது. 


Car loan Information:

Calculate Car Loan EMI