உலக அளவில் பலவகையான கார்கள் பயன்பாட்டில் உள்ளது, அவற்றில் ஸ்போர்ட்ஸ் ரக கார்கள்தான் மிகவும் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றது. அடிப்படையில் போக்குவரத்துக்காக கண்டறியப்பட்ட இயந்திரவியல் கண்டுபிடிப்புதான் கார்கள். ஆனால் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் அதிகரிப்பும் அந்நிறுவனங்களிடையே நிலவும் போட்டியின் காரணமாக கார்கள் போக்குவரத்துக்கு என்பதை தாண்டி போட்டி என்ற கட்டத்திற்கு சென்றுள்ளது.


சரி இதுவரை வெளியான உலகின் காஸ்ட்லியான முதல் மூன்று கார்களை பற்றி தற்போது பார்க்கலாம். 


மூன்றாம் இடத்தில் : 


டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனத்தின் லிகன் ஹைப்பர்ஸ்போர்ட்.


2012-ஆம் ஆண்டு லெபனான் நாட்டில் உருவான டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் கார் தயாரிப்பில் மிகுவும் இளமையான நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. துபாய் நாட்டை தலைமையகமாக கொண்டு உருவான இந்த நிறுவனம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட லிகன் ஹைப்பர்ஸ்போர்ட் என்ற வாகனம்தான் தற்போது புழக்கத்தில் உள்ள காஸ்லியான கார்களில் ஒன்று, இந்திய மதிப்பில் சுமார் 25 கோடி மதிப்புள்ள இந்த ஸ்போர்ட்ஸ் கார் மணிக்கு 395 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.




0-இல் இருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை எட்ட இந்த வண்டிக்கு வெறும் 2.8 வினாடிகள் மட்டுமே தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் இந்த வாகனம் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 




இரண்டாம் இடத்தில் : 


லம்போர்கினி வேநீநோ


லம்போர்கினி, சீரும் காளைமாட்டினை சின்னமாக கொண்ட இந்த நிறுவனத்தை நம்மில் பலருக்கும் தெரியும். இத்தாலி நாட்டில் 1940களின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. முதலில் டிராக்டர் தயாரிப்பில் கொடிகட்டி பறந்த இந்த நிறுவனம் 1960-களின் தொடக்கத்தில் ஸ்போர்ட்ஸ் கார்களின் உற்பத்தியில் களமிறங்கியது. இந்திய அளவிலும் பலர் லம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார்களை பயன்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது. 




2013-ஆம் ஆண்டு தனது 50-வது ஆண்டில் லம்போர்கினி நிறுவனம் அடியெடுத்து வைத்தபோது ஜெனீவாவில் நடத்த மோட்டார் நிகழ்வு ஒன்றில் தனது வேநீநோ காரை வெளியிட்டது. மிக குறைந்த அளவிலேயே இந்த கார் தயாரிக்கப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்கு பிறகு வேநீநோ மாடல் காரை லம்போர்கினி தயாரிக்கவில்லை என்றபோதும் இன்றளவும் இது காஸ்லியான கார்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 30 கோடி, வி 12 என்ஜின் கொண்ட இந்த வாகனம் அதிகபட்சமாக 355 மணிக்கு 355 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.    



   


முதல் இடத்தில் :


Koenigsegg சிசிஎக்ஸ்ஆர் ட்ரீவிட்டா 


ஸ்வீடன் நாட்டில் 26 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம்தான் Koenigsegg. உலக அளவில் காஸ்ட்லியான கார்களை இந்த நிறுவனம்தான் தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனத்தின் கார்கள் குறைந்த அளவில் மட்டுமே தயாரிக்கப்படும். இந்த ஆண்டு வெளியாகவுள்ள Koenigsegg Jesko Absolut மற்றும் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள Koenigsegg Gemera உள்பட கடந்த 26 ஆண்டுகளின் இந்த நிறுவனம் சுமார் 21 கார்களை தயாரித்துள்ளது. 21 கார்களின் 10-க்கும் மேற்பட்ட கார்கள் மணிக்கு 400 கிலோமீட்டருக்கு அதிகமாக செல்லக்கூடியது. 




குறிப்பாக Koenigsegg Agera RS என்ற மாடல் கார் மணிக்கு 457 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இந்நிலையில் இந்த நிறுவனம் 2006-ஆம் ஆண்டு வெளியிட்ட Koenigsegg CCXR Trevita என்ற மாடல் தான் இதுவரை தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த கார் என்ற பெயரை 14 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 35.9 கோடி.    




சிங்கள் காப்பி என்று கூறப்படும் பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் சில கார்கள் 100 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Car loan Information:

Calculate Car Loan EMI