Royal Enfield Scram 440: ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிள் குறித்து அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 440:

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிளானது, பெரும்பாலும் முந்தைய ஹிமாலயன் 411 மாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதன பயண திறன்களை மேம்படுத்தும் விதத்தில் ஒரு பெரிய இன்ஜின் மற்றும் கூடுதல் கியரைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிளை பெறுவதற்கு முன்பாக அறிய வேண்டிய மிக முக்கிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

Continues below advertisement

ஸ்க்ராம் 440 - அறிய வேண்டிய விவரங்கள்

1. ஸ்க்ராம் 440 - இன்ஜின் ஆற்றல் என்ன?

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிளானது 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட, 443cc, ஒற்றை சிலிண்டர், ஏர்/ஆயில்-கூல்ட் இன்ஜின் வாயிலாக இயக்கப்படுகிறது. இதன் மூலம், 25.4hp மற்றும் 34Nm ஆற்றலை உற்பத்தி செய்யப்படுகிறது. நகர்ப்புறத்தில் லிட்டருக்கு சுமார் 27 கிலோ மீட்டர் வரையிலும், நெடுஞ்சாலைகளில் ஓட்டும்போது சுமார் 41 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.

2. ஸ்க்ராம் 440 - ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளனவா?

ஆமாம், ஸ்க்ராம் 440 மாடலில் அலாய் வீல்களுடன் கூடிய ட்யூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்படுகின்றன.  ஆனால் இது டாப்-ஸ்பெக் ஃபோர்ஸ் வேரியண்டிற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ட்ரெயில் வேரியண்டில் ட்யூப் அடங்கிய டயர்களுடன் கூடிய ஸ்போக்-வீல்கள் இடம்பெற்றுள்ளன. இரண்டு வகைகளும் இதேபோல் பொருத்தப்பட்டுள்ளன.

3. ஸ்க்ராம் 440 - ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் உள்ளதா?

ஆம், ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிள் ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் அம்சத்தை ஸ்டேண்டர்டாக பெறுகிறது.

4. ஸ்க்ராம் 440 - எல்இடி விளக்குகள் உள்ளனவா?

இல்லை, ஸ்க்ராம் 440 மோட்டார்சைக்கிள் எல்இடி முகப்பு விளக்கு மற்றும் டெயில்லைட் இடம்பெற்றுள்ளது. ஆனால் இன்டிகேட்டர்கள் தொடர்ந்து பல்பையே பயன்படுத்துகின்றன.

5. ஸ்க்ராம் 440 - வேரியண்ட்கள் & வண்ணங்கள்

ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிளானது ட்ரெயில் மற்றும் ஃபோர்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் இந்த பைக்கிற்கு மொத்தம் ஐந்து வண்ண விருப்பங்களை வழங்கியுள்ளது. அதன்படி ட்ரெயில் வேரியண்ட் ட்ரெயில் ப்ளூ மற்றும் ட்ரெயில் கிரீன் வண்ணங்களில் வந்தாலும், ஃபோர்ஸ் வேரியண்ட் ஃபோர்ஸ் ப்ளூ, ஃபோர்ஸ் கிரே மற்றும் ஃபோர்ஸ் டீல் ஆகிய மூன்று வண்ணங்களைப் பெறுகிறது. வண்ணங்களைத் தவிர, வடிவமைப்பின் அடிப்படையில் இரண்டு வகைகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை.

6. ஸ்க்ராம் 440 - வேரியண்ட்கள் & வண்ணங்கள்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்க்ராம் 440 பைக்கின் விலை ரூ.2.23 லட்சத்திலிருந்து தொடங்கி ரூ.2.31 லட்சம் வரை நீள்கிறது. ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு இதன் விலை ரூ.15,000 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

7. ஸ்க்ராம் 440 - போட்டியாளர்கள் யார்?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்டின் ஸ்க்ராம் 440 மோட்டார் சைக்கிளானது, ட்ரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 440 X, யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் ஹிரோ மேவ்ரிக் 440 ஆகிய வாகனங்களுடன் போட்டியிடுகிறது.

8. ஸ்க்ராம் 440 - காத்திருப்பு காலம் இருக்கா?

ஆம், ஸ்க்ராம் 440 வாகனத்தை பதிவு செய்தால் அதனை டெலிவெரி பெற 10 நாட்கள் முதல் ஒரு மாத காலம் வரை ஆகலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI