SUVs Launched: 2025ல் வெளியான மிரட்டலான எஸ்யுவிக்கள் - விலை, இன்ஜின் ,அம்சங்கள் - டாப் ப்ராண்ட், டக்கர் மாடல்
ICE SUVs Launched 2025: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2025ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட, இன்ஜின் அடிப்படையிலான புதிய எஸ்யுவி கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ICE SUVs Launched 2025: நடப்பாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஜின் அடிப்படையிலான புதிய எஸ்யுவி கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
2025ல் அறிமுகமான புதிய எஸ்யுவிக்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே, எஸ்யுவி கார்களின் ஆதிக்கம் என்பது தொடர்ந்து வருகிறது. 2025ம் ஆண்டிலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. அதற்கு ஈடாகவும், கார் விரும்பிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி கார்கள் ஒவ்வொரு மாதமும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனாலும், நடப்பாண்டில் முற்றிலும் புதியதாக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அறிமுகமான, இன்ஜின் அடிப்படையிலான முக்கியமான எஸ்யுவிக்கள் மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
2025ன் புதிய இன்ஜின் அடிப்படையிலான எஸ்யுவிக்கள்:
1. ஹுண்டாய் வென்யு:
இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அறிமுகமான கார்களில் ஒன்று, ஹுண்டாயின் இரண்டாவது தலைமுறை வென்யு மாடலாகும். உட்புறம் மற்றும் வெளிப்புறம் என இரண்டிலும் பெரும் மாற்றம் கண்டு, ஹுண்டாயின் தற்போதைய க்ரேட்டா மற்றும் எக்ஸ்டெருக்கு இணையாக அப்க்ரேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், இரண்டு 12.3 இன்ச் ஸ்க்ரீன்கள், 360 டிகிரி கேமரா ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதேநேரம், பழைய பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் அப்படியே தொடரப்படுகிறது. இதன் விலை ரூ.7.90 லட்சம் முதல் ரூ.15.51 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. மாருதி விக்டோரிஸ்
காம்பேக்ட் எஸ்யுவி செக்மெண்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹுண்டாயின் க்ரேட்டாவிற்கு போட்டியாக, மாருதி நிறுவனம் விக்டோரிஸ் கார் மாடலை சந்தைப்படுத்தியுள்ளது. இது ஸ்டைலிஷாக மட்டுமின்றி, மாருதி சுசூகி நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட அதிகப்படியான அம்சங்களை கொண்ட காராகவும் திகழ்கிறது. அதன்படி வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், 64 வண்ண ஆம்பியண்ட் லைட்டிங், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS, கெஸ்டர் கண்ட்ரோல் உடன் கூடிய பவர்ட் டெயில்கேட் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. க்ராண்ட் விட்டாராவில் உள்ள அதே எரிபொருள் ஆப்ஷன்களுடன், சிஎன்ஜி தேர்வும் வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.10.50 லட்சம் முதல் ரூ.19.99 லட்சம் வரை நீள்கிறது.
3. டாடா சியாரா:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நடப்பாண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய எஸ்யுவிக்களில், டாடாவின் சியாரா முதலிடத்தில் உள்ளது. மொத்தம் 7 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் முதல் 5 வேரியண்ட்களுக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அது ரூ.11.49 லட்சம் முதல் ரூ.18.49 லட்சம் வரை நீள்கிறது. ரெட்ரோ டிசைனுடன் நவீன காலத்திற்கான டச்சையும் கலந்து பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. டாடா ப்ராண்டில் முதல்முறையாக ட்ரிபிள் ஸ்க்ரீன் பெற்ற மாடல், 12 ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோ ஹோல்ட் ஃபங்சனுடன் கூடிய எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் அம்சங்கள் உள்ளன. டர்போ சார்ஜ்ட் யூனிட் அடங்கிய இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
4. கியா சைரோஸ்
கியா நிறுவனத்தின் காம்பேக்ட் எஸ்யுவி ஆன சைரோஸ், ப்ராண்டின் போர்ட்ஃபோலியோவில் சோனெட் மற்றும் செல்டோஸிற்கு நடுவே பொருத்தப்பட்டுள்ளது. இயல்புக்கு மாறான தோற்றம் மற்றும் பல்வேறு அம்சங்கள் இந்த SUV-ஐ 4 மீட்டர் SUV பிரிவில் தனித்துவமாக்குகின்றன. முன் மற்றும் பின் வெண்டிலேடட் சீட்ச், பனோரமிக் சன்ரூஃப், இரண்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள், 64-வண்ண ஆம்பியண்ட்லைட்டிங், ஆறு ஏர்பேக்குகள், லெவல்-2 ADAS, கூடுதலாக முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை சிறந்த அம்சங்களாகும். சோனெட்டைப் போலவே 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் விலை ரூ.8.67 லட்சத்தில் தொடங்கி ரூ.15.94 லட்சம் வரை நீள்கிறது.
5. ஸ்கோடா கோடியாக்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கம்பேக் கொடுத்த மிகவும் பிரபலமான கார் மாடல்களில், ஸ்கோடாவின் கோடியாக்கும் ஒன்று. இரண்டாவது தலைமுறை மாடலாக அறிமுகப்படுத்த இந்த காரானது, பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் இருக்கும் முக்கிய அம்சங்களாக 12.9 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் யூனிட், ட்ரி-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், 9 ஏர் பேக்குகள், 360 டிகிரி கேமரா, 10.25 இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்பிளே மற்றும் பார்கிங் அசிச்ட் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் ஆல்வீல் ட்ரைவ் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் விலை 39.99 லட்சம் முதல் 45.96 லட்ச வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
6. ஃபோக்ஸ்வாகன் டைகன் R-லைன்
ஃபோக்ஸ்வாகனின் 2025 டைகன் ஆர்-லைன் கார் மாடலானது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 5 சீட் லே-அவுட் கொண்ட இந்த காரானது, ப்ராண்டால் இந்தியாவில் வழங்கப்படும் முதன்மையான கார் மாடலாக உள்ளது. இதில் பனோரமிக் சன்ரூஃப், ட்ரி-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல், டூயல் வயர்லெஸ் போன் சார்ஜர்ஸ், 9 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் பார்கிங் ப்ரேக் மற்றும் ADAS போன்ற அம்சங்களும் உள்ளன. கோடியாக்கில் உள்ள அதே இன்ஜின் ஆப்ஷன்கள் இதில் அப்படியே பின்தொடரப்படுகின்றன. இதன் விலை ரூ.45.73 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.





















