Car Discount July: ஜுலையில் அதிகப்படியான சலுகைகளை கொண்ட கார் மாடல்கள் - டாப் 7 லிஸ்ட் இதோ

Car Discount July: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் அதிகப்படியான விலை சலுகைகளை பெறும் கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

Car Discount July: ஆட்டோமொபைல் சந்தையில் ஜுலை மாதத்தில் அதிகப்படியான விலை சலுகைகளை பெறும், டாப் 7 கார்கள்  கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

கார்களுக்கான சலுகை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒவ்வொரு மாதமும், பல்வேறு காரணங்களால் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு ஏராளமான சலுகைகளை அறிவித்து வருகின்றன. விற்பனையை ஊக்குவிக்கவும், கையிருப்பில் உள்ள பழைய வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டிலும் பால் கார்களுக்கு சலுகைகள் பெற்றுள்ளன. அதில், அதிக சலுகைகளை பெற்றுள்ள கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஸ்கோடா குஷாக்:

எஸ்யூவி இந்திய சந்தையில் அதன் திறனைக் காட்டிலும் குறைவாக மதிப்பிடப்பட்ட எஸ்யூவிகளில் குஷாக் ஒன்றாகும். இந்த மாடலின் ஆரம்ப விலை ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை மாத இறுதி வரை அந்த வாகனத்திற்கு ரூ.2.5 லட்சம் வரையிலான தள்ளுபடி மற்றும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன், பிராண்ட் 3 ஆண்டு ஸ்கோடா பராமரிப்பு பேக் மற்றும் 5 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்குகிறது.

சிட்ரோயன் சி3 ஏர்கிராஸ்

பிரெஞ்சு எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ.12.26 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. இந்த கார் தற்போது ரூ.2.6 லட்சம் வரை பலன்களுடன் கிடைக்கிறது. இந்த பிராண்ட் சமீபத்தில் SUV இன் தோனி பதிப்பை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

ஃபோக்ஸ்வாகன் டைகன்

ஃபோக்ஸ்வேகன் டைகன் ரூ.10.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எஸ்யூவி தற்போது ரூ.2.9 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இதில் ரூ.1.78 லட்சம் ரொக்க தள்ளுபடி, ரூ.73,000 ஆக்சஸரீஸ் கிட் மற்றும் ரூ.40,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை அடங்கும்.

ஜீப் மெரிடியன்

ஜீப் மெரிடியன் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் எஸ்யூவிகளில் ஒன்றாகும். தற்போது ரூ.29.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்கப்படும் நிலையில், ஜுலை மாத இறுதி வரை இந்த எஸ்யூவி ரூ.3 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது.

ஃபோக்ஸ்வாகன் டைகுன்

ஜுலை மாதத்தில் அதிக சலுகை பெற்ற கார்களின் பட்டியலில், 35 லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை ஆரம்ப விலையாக கொண்ட ஃபோக்ஸ்வேகன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அதன்படி, இந்த காருக்கு 3.4 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பிரீமியம் எஸ்யூவி ஜீப் மெரிடியன் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடுகிறது.

சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

Citroen C5 Aircross இந்திய சந்தையில் அந்த பிராண்டின் மிகப்பெரிய வாகனமாகும். இதன் ஆரம்ப விலை ரூ 36.91 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது ரூ.3.5 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது

ஹூண்டாய் கோனா

ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி ஜூலை 2024 இல் அதிகபட்ச தள்ளுபடியை பெற்ற வாகனமாக உள்ளது. பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதள பட்டியலிலிருந்து இருந்து இந்த எஸ்யூவி நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், டீலர்களிடம் மீதமுள்ள இந்த மாடல் வாகனங்களை 4 லட்ச ரூபாய் தள்ளுபடியுடன் வாங்கலாம்.

Continues below advertisement
Sponsored Links by Taboola