Best Motorcycle: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எந்த காலத்திலும் சிறந்த, டாப் 7 பைக்குகளின் விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


பஜாஜ் பல்சர்:


பல்சர் என்பது பஜாஜ் ஆட்டோவி நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையிலும் ஒரு புகழ்பெற்ற பெயர் ஆகும். முதன்முதலில் 2001 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, பல்சர் 150 மற்றும் 180 க்கு "நிச்சயமாக ஆண்" என்ற டேகுடன் வாகனம் விற்பனை செய்யப்பட்டது.  அன்றிலிருந்து பிராண்டால் பயன்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தைக்கு வழக்கமான பல்ஸ்களை வெளியிடுவது என்று பொருள்.


ஹீரோ கரிஷ்மா:


ஹீரோ ஹோண்டா நிறுவனம் கடந்த 2003ம் ஆண்டு கரிஸ்மா எனும் பெயரை முதன்முதலில் பயன்படுத்தியது. இந்த பெயரை சொன்ன உடனேயே உடனடியாக ஒரு செமி ஃபேர்டு மஞ்சள் ஸ்போர்ட்ஸ் பைக்கின் படத்தை பெரும்பாலானோரால் மனதில் உணர முடியும். இந்த பைக் இளைஞர்களை ஈர்த்தது, பழம்பெரும் அந்தஸ்து பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் ஒரு புதிய மோட்டார் சைக்கிள் மூலம் அந்தப் பெயரைப் புதுப்பித்தது. இந்தப் பெயரின் அர்த்தம் ஒரு சிறப்பு வசீகரம் கொண்ட ஒன்று என்பதாகும்.


சுசுகி ஷோகன்:


ஷோகன் பெயர் 1990 களின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வேகமாக பயணிக்கும் பைக்குகள் அறிமுகமான நேரம் இது, ஷோகன் பந்தயத்தின் ஒரு பகுதியாக மாறியது. இதன் மூலம் இந்தியாவில் பரவலானதோடு புகழையும் பெற்றது. ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த இண்ட்5ஹ சொல் ஒரு தலைமை இராணுவத் தளபதிய அடையாளப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் மிகச் சில ஆண்கள் மட்டுமே இந்த பெயர பெற்றுள்ளனர்..


ராயல் என்ஃபீல்ட் புல்லட்:


புல்லட் என்ற வார்த்தையானது ராயல் என்ஃபீல்ட் பைக்குகளின் குடும்பத்திற்கு சொந்தமானதோடு, 1929 ஆம் ஆண்டு முதல் விற்பனையில் உள்ளது. இந்த பைக்குகள் மக்களிடையே பிரபலமாக உள்ளன.  தற்போதும் கூட அவற்றின் ரெட்ரோ ஸ்டைலை தொடர்ந்து பின்பற்றுகின்றன.


ஹீரோ ஸ்ப்ளெண்டர்


ஸ்பிளெண்டர் என்ற சொல் மகத்துவம் என்பதற்கு இணையான சொல்லாகும். 1994 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்டா பைக்கில் முதன்முதலில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது.  இந்த பைக் அபாரமான விற்பனையை ஈட்டியது மற்றும் இன்றுவரை அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாகத் தொடர்கிறது. அனைத்து வகையான வேலைகளையும் கையாளும் திறன் கொண்டதோடு,  மலிவு விலையில் தினசரி பயன்படுத்தக்கூடிய பைக்குகளில் மிகவும் பிரபலமானதாகும்.


டிவிஎஸ் அப்பாச்சி


TVS Apache என்ற பெயர் முதன்முதலில் இந்தியாவில் 2005 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக் நல்ல பிரபலத்தைப் பெற்றது. எனவே, பிராண்ட் பைக்குகளின் முழு குடும்பத்திற்கும் பெயரை நீட்டித்தது. தற்போது இந்த பெயர் 310 சிசி வரை செல்லும் வெவ்வேறு திறன் பெற்ற இன்ஜின்கள் கொண்ட பைக்குகளில் பயன்படுத்தப்படுகிறது.


பஜாஜ் அவெஞ்சர்


பஜாஜ் அவெஞ்சரின் முதல் தலைமுறை 2005 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக், க்ரூஸர்-ஸ்டைல் ​​பாடியுடன் மலிவு விலையில் இருக்கும் பைக்காக கெளரவமான பிரபலத்தைப் பெற்றது. பஜாஜ் ஆட்டோவின் பைக்குகளில் இப்பெயரைக் காணலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI