Budget Mileage Cars: இந்திய சந்தையில் குறைந்த பட்ஜெட்டில் கிடைக்கும், டாப் 7 சிறந்த மைலேஜ் வழங்கும் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


மாருதி சுஸுகி ஆல்டோ கே10


மாருதி சுஸுகி ஆல்டோ கே10 என்பது 1.0லி மூன்று சிலிண்டர் கே-சீரிஸ் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் வரும், சிட்டி சூழலுக்கு ஏற்ற ஒரு சிறந்த கார் ஆகும். இந்த கார் AGS டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில்,  இது லிட்டருக்கு 24.90 மைலேஜ் வழங்குகிறது. ஆல்டோ கே10 காரின் ஆரம்ப விலை ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மாருதி சுஸுகி செலிரியோ


மாருதி சுஸுகி செலிரியோ இந்தியாவில் எரிபொருள் சிக்கனம் கொண்ட பெட்ரோல் கார்களில் ஒன்றாகும். இது 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் கே-சீரிஸ் என்ஏ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது லிட்டருக்கு 26.68 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இதன் விலை ரூ.5.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட்


மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றாகும். அதன் சமீபத்திய அவதாரத்தில், இது 1.2L மூன்று-சிலிண்டர் Z-சீரிஸ் இன்ஜினைப் பெறுகிறது.  இது அதிக செயல்திறன் கொண்டது மற்றும் AGS மாறுபாட்டில் லிட்டருக்கு 25.75 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஸ்விஃப்ட்டின் ஆரம்ப விலை ரூ.6.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மாருதி சுஸுகி வேகன்ஆர்


மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தியர்களின் காராக இருந்து வருகிறது. வேகன் R ஆனது 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.2 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 25.19 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ஆரம்ப விலை ரூ 5.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


ஹோண்டா சிட்டி சிஇவி


ஹோண்டா சிட்டி இ-எச்இவி இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிகவும் திறமையான செடான் ஆகும். இது e-CVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட ஹைப்ரிட் 1.5L NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. சிட்டி இ-எச்இவியின் எரிபொருள் திறன் லிட்டருக்கு 27.13 கிமீ ஆக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.20.55 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா:


மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா குறைந்த காலத்திலேயே இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது ஒரு ஹைப்ரிட் 1.5L NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது, இது டொயோட்டாவுடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது மற்றும் லிட்டருக்கு 27.97 கிமீ என்ற மைலேஜ் வழங்குகிறது. கிராண்ட் விட்டாரா ஹைப்ரிட் காரின் ஆரம்ப விலை ரூ.18.43 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


டொயோட்டா அர்பன் க்ரூஸர்:


டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாராவின் அதே பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டது மற்றும் ஹைப்ரிட் 1.5லி NA பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இதன் எரிபொருள் திறன் லிட்டருக்கு 27.97 கிமீ மைலேஜ் ஆக உள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.16.66 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI