Tatas Upcoming SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ள, 5 புதிய பெட்ரோல் & டீசல் எஸ்யுவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

டாடாவின் 5 புதிய எஸ்யுவிக்கள்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார வாகன பிரிவில், தனது வலுவான போர்ட்ஃபோலியோ மூலம் டாடா நிறுவனம் முன்னிலை வகிக்கிறது. அதேநேரம், ஒட்டுமொத்த வாகன விற்பனையில் கண்டுள்ள சிறிய பின்னடைவை ஈடுசெய்யும் வகையில், இன்ஜின் அடிப்படையிலான புதிய வாகனங்களை அறிமுகப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அடுத்த சில மாதங்களில், டாடா நிறுவனம் சார்பில் அறிமுகமாக உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் எடிஷன் வாகனங்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. டாடா சியாரா:

டாடா நிறுவனத்தின் கிளாசிக் மாடலான சியாரா, நவீன காலத்திற்கு ஏற்ற அப்கிரேட்களுடன் முற்றிலும் புதிய வாகனமான சந்தைக்கு வர தயாராகி உள்ளது. நடப்பாண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படும், இந்த காரின் உற்பத்திக்கு உறுதியான மாதிரி ஜனவரி மாதம் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. சாலை பரிசோதைனையில் ஈடுபட்ட இந்த காரின் பல புகைப்படங்களும் இணையத்தில் கசிந்துள்ளன. தகவல்களின்படி, சியாராவில் 1.5 லிட்டர் tGDI பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. இதன் விலை 15 லட்சம் முதல் 25 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2 & 3. டாடா ஹாரியர் & சஃபாரி

ஹாரியர் மற்றும் சஃபாரி கார் மாடல்களின் பெட்ரோல் எடிஷன்கள் என்பது நீண்டகால கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த எடிஷன்கள் சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது. டீசல் எரிபொருள் ஆப்ஷனை மட்டும் கொண்டுள்ள நிறுவனத்தின் இந்த ஃபிளாக்‌ஷிப் கார் மாடல்கள், பெட்ரோல் சந்தையில் தங்களுக்கான பங்களிப்புகளை இழந்து வருகின்றன. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் புதிய 1.5 லிட்டர் tGDI 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஹாரியர் மற்றும் சஃபாரியில் வழங்கப்பட உள்ளது. இந்த இன்ஜின் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது 6 ஸ்பீட் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் இணைந்து, 168bhp மற்றும் 350Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் எடிஷன்களின் விலை 15 லட்சம் முதல் 26 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.

 

4. டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட்:

தற்போதைய சூழலில் டாடா சார்பில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக உள்ள பஞ்ச், முதல்முறையாக மிகப்பெரிய அப்டேட்களை பெற உள்ளது. நடப்பாண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த காரானது, மிட்-லைஃப் அப்டேட்டின் மூலம் பல முக்கிய திருத்தங்களை பெற உள்ளது. புதிய வெளிப்புற டிசைன், திருத்தப்பட்ட உட்புறம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை அப்கிரேடில் அடங்கும்.

பஞ்சின் மின்சார எடிஷனின் டிசைன் ஆனது இன்ஜின் அடிப்படையிலான பஞ்சிற்கு கடனாக வழங்கப்படுகிறது. புதிய ஸ்டியரிங் வீல், டேஷ்போர்டில் சிறிய திருத்தங்கள், பெரிய 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முற்றிலுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் ஆகியவை உட்புறத்தில் வரும் மாற்றங்களாகும். இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இன்றி, அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது, சிஎன்ஜி ஆப்ஷனுடன் தொடர உள்ளது. ஃபேஸ்லிஃப்ட் எடிஷனின் விலை, சுமார் ரூ.30 ஆயிரம் வரை உயர்ந்து தொடக்க விலை ரூ.6.5 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.

5. புதிய தலைமுறை நெக்ஸான்

இந்திய சந்தையில் 2027ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரும் வகையில், புதிய தலைமுறை நெக்ஸான் கார் மாடல் தயாராகி வருகிறது. ”கருட்” என்ற கோட்நேமில் உருவாகி வரும் இந்த மாடலானது, தற்போதைய X1 பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டாலும், அதன் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. புதிய வெளிப்புற தோற்றத்துடன், முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்ட உட்புற அம்சங்களையும் புதிய தலைமுறை நெக்ஸான் பெற உள்ளது. தற்போது உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் எந்தவித மாற்றமும் இன்றி, பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷனில் அப்படியே தொடர உள்ளது. விரைவில் அமலுக்கு வரவுள்ள BS7 எனும் கடுமையான உமிழ்வு விதிகளை கருத்தில் கொண்டு, 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன் நிறுத்தப்படலாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI