மேலும் அறிய

Best SUV: வாழ்க்கை முழுமைக்கும் ஒரே பெஸ்ட் காரை ஓட்டனுமா? உங்களுக்கான சிறந்த மாடல்கள் - டாப் 5 சாய்ஸ் இதோ

Best SUV Cars: வாழ்நாள் முழுமைக்குமான பயன்பாட்டிற்காக ஒரு கார் மாடலை வாங்க விரும்புகிறீகள் என்றால், நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய டாப் 5 எஸ்யுவி மாடல்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Best SUV Cars: வாங்கும் முதல் காரே வாழ்நாள் முழுமைக்கும் உங்களுடன் இருக்க வேண்டும் என கருதினால், உங்களுக்கான டாப் 5 சாய்ஸ்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

டாப் 5 பெஸ்ட் எஸ்யுவிக்கள்:

சொந்தமாக ஒரு காரை வைத்திருப்பது என்பது பலருக்கும் மிகப்பெரும் கனவாகும். எனவே முதல் காரை வாங்கும்போது அதன் நம்பகத்தன்மையையும், உறுதியையும் முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியம். வேறொரு காரையே வாங்கக் கூடாது, முதல் காரே எனது வாழ்நாள் முழுமைக்குமான ஒரு தேர்வாக இருக்க வேண்டும் என நீங்கள் கருதினால், காரின் செயல்திறனை கொண்டு மட்டுமே அதனை தேர்வு செய்துவிடக்கூடாது. மாறாக தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும், மோசமான சாலைகளில் கூட நல்ல பயண அனுபவத்தை வழங்குவதாகவும், நீண்ட தூர பயணங்களை கூட நம்பி மேற்கொள்ளக்கூடியதாகவும், நகரங்கள் தொடங்கி நெடுந்தூர பயணங்களுக்கு கூட நம்பி தேர்வு செய்யும் வகையிலான பன்முகத்தன்மை கொண்ட வாகனமாக இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு, வாழ்நாள் முழுமைக்கும் ஒரே காதை தான் பயன்படுத்த விரும்புகிறேன் என கருதுபவர்களுக்காக, இந்திய சந்தையில் கிடைக்கும் சிறந்த 5 எஸ்யுவிக்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வாழ்நாள் முழுமைக்குமான டாப் 5 எஸ்யுவிக்கள்:

1. டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300

இந்த பட்டியலின் முதலிடத்தில் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 மாடல் உள்ளது. இது பயனர்களின் அனைத்து வகையான எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் ஒரு உண்மையான எஸ்யுவி என்பதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. இதன் விலை வரம்பானது ரூ.2.17 கோடியில் தொடங்கி ரூ.2.25 கோடி வரை (எக்ஸ் - ஷோரூம்) நீள்கிறது. இதன் இந்தியாவிற்கான மாடலில் 304bhp மற்றும் 700Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 3.3 லிட்டர் ட்வின் டர்போ வி6 டீசல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இந்த 5 சீட்டரில் 10 ஸ்பீட் ஆட்டோமேடிக்  ட்ரான்ஸ்மிஷன் மற்றும் முழு நேர 4 வீல் ட்ரைவ் அம்சங்கள் இடபெற்றுள்ளன. 

டாப் வேரியண்டானது முன் மற்றும் பிப்ன்புறம் டிஃப்ரன்ஷியல்  லாக்குகள் மற்றும் ஆஃப்-ரோட்களுக்கு ஏற்றவாறு சரி செய்யப்பட்ட சஸ்பென்ஷன் போன்ற அம்சங்களுடன், ஆஃப் - ரோட் பயணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடக்க வேரியண்டான ZX  ஆடம்பரம் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. செயல்திறன், வசதிகள் மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் திறன் ஆகியவற்றின் கலவை லேண்ட் க்ரூஸரின் மிகப்பெரிய பலமாக உள்ளது. விலை உயர்ந்ததாக இருந்தாலும், பல தசாப்தங்களுக்கு பயன்படுத்த விரும்புவோருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

2. ஜீப் ராங்லர்

ஜீப் ராங்லர் அதன் போட்டியாளர்களை போன்று அதிக இடவசதி கொண்டதாகவோ அல்லது சாலை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவோ இல்லை. ஆனால் தனித்துவமான குணாதசியம் மற்றும் பிரத்யேகமான ஆஃப்-ரோட் ஹார்ட்வேர் ஆகியவற்றின்  இத்தகைய கலவையை மிக சில எஸ்யுவிக்களே கொண்டுள்ளன.  இதன் விலை வரம்பானது ரூ.66.20 லட்சத்தில் தொடங்கி ரூ.70.80 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. 

268bhp மற்றும் 400Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 2.0 லிட்டர் டர்போசார்ஜ்ட் பெட்ரோல் இன்ஜின் ஆனது 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ராக்-ட்ராக் ஃபோர்-வீல்-ட்ரைவ் சிஸ்டம், 4:1 லோ-ரேஞ்ச் கியரிங், லாக் செய்யக்கூடிய முன் மற்றும் பின் டிஃபரன்ஷியல்கள் மற்றும் ஒரு எலெக்ட்ரானிக் முன் ஸ்வே-பார் டிஸ்கனெக்ட் ஆகியவற்றைக் கொண்டு, ரூபிகான் ஆஃப்-ரோடு அமைப்பை மேலும் கணிசமாக மேம்படுத்துகிறது. அதிகபட்ச நேர்த்தி அல்லது நடைமுறைப் பயன்பாட்டிற்காக இல்லாமல்,  சலிப்புத் தட்டாமல் பல ஆண்டுகள் வைத்திருக்கக்கூடிய ஒரு வாகனம் என்ற வகையில், ராங்லருக்கு ஒரு வலுவான சாதகம் உண்டு.

3. லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110

சொகுசு பயணத்தை விட்டுக்கொடுக்காமல் ஆஃப்-ரோட் பயணத்தை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.1.07 கோடி (எக்ஸ் - ஷோரூம்) ஆகும். 110 மாடல் 2.0-லிட்டர் P300 பெட்ரோல், 3.0-லிட்டர் D350 டீசல் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் 3.0-லிட்டர் P425 பெட்ரோல் உள்ளிட்ட பல பவர்ட்ரெய்ன்களில் கிடைக்கிறது. இதன் அதிநவீன 4 வீல் ட்ரைவ் சிஸ்டம், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பம் மற்றும் அதிக க்ரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை அதற்கு உண்மையான ஆஃப்-ரோட் தகுதிகளை அளிக்கின்றன. அதே சமயம், விசாலமான 110 பாடி மற்றும் ப்ரீமியம் கேபின் ஆகியவை நீண்ட நெடுஞ்சாலைப் பயணங்களுக்கும் அன்றாட குடும்பப் பயன்பாட்டிற்கும் ஏற்றதாக அமைகின்றன. 

இதையும் படியுங்கள்: Japanese 7 Seater: ரூ.17 லட்சத்தில் புதிய 7 சீட்டரை இறக்கும் ஜப்பான் கம்பெனி - ஃபேமிலிக்கு செட்டாகுமா? மைலேஜ் வருமா?

4. டொயோட்டா ஃபார்ட்சுனர் லெஜெண்டர் 4X4

மிக நீண்ட கால பயன்பாட்டிற்கான பாதுகாப்பான சிறந்த கார்களில் ஒன்றாக டொயோட்டா ஃபார்ட்சுனர் லெஜண்டர் திகழ்கிறது. குறிப்பாக நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பரவலான சேவை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பவர்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். இதன் விலை ரூ.45.08 லட்சத்தில் தொடங்கி ரூ.48.29 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.  இதில் 2.8 லிட்டர் நான்கு சிலிண்டர்  டர்போ டீசல்  இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 48V மைல்ட் ஹைப்ரிட் ஆப்ஷனும் இதில் கிடைக்கிறது. 

இங்குள்ள எஸ்யுவி மாடல்களில் ஃபார்ட்சுனர் மிகவும் அதிநவீனமானது அல்ல, ஆனால் அதுவே அதன் நோக்கத்தின் ஒரு பகுதியாகும். லேடர்-ஃப்ரேம் கட்டமைப்பு, லோ-ரேஞ்ச் ஃபோர்-வீல் டிரைவ் மற்றும் நன்கு நிறுவப்பட்ட மெக்கானிக்கல் பேக்கேஜ் ஆகியவை, ஒரு எஸ்யுவியை பல ஆண்டுகளாக வைத்திருக்கத் திட்டமிடும் ஒருவருக்கு நல்ல தேர்வாக இருக்கும்.

5. எம்ஜி மெஜஸ்டர்

இந்திய சந்தையில் உயர்தர உபகரணங்களையும், தீவிரமான ஆஃப்-ரோட் ஹார்ட்வேர்களையும் இணைப்பதன் மூலம், எம்ஜி மெஜஸ்டர் ஒரு வலுவான இடத்தை பிடித்துள்ளது.  இதன் ஆரம்ப விலை ரூ.42.49 லட்சமாக உள்ளது. இதில் 213 bhp மற்றும் 478.5 Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் 2.0-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின், 8 ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. 4x4 மாடலில், 10 ஆஃப்-ரோடு மோட்கள், க்ரால் கன்ட்ரோல் மற்றும் முன், நடு மற்றும் பின் சக்கரங்களை உள்ளடக்கிய ட்ரிபிள் டிஃபரன்ஷியல் லாக்குகளுடன் கூடிய மேம்பட்ட ஃபோர்-வீல்-டிரைவ் சிஸ்டம் உள்ளது.  இது 219 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 810 மிமீ நீர் கடக்கும் திறனையும் வழங்குகிறது. குடும்பப் பயன்பாடுகளையும் உண்மையான கரடுமுரடான பாதைகளில் பயணிக்கும் திறனையும் ஒருங்கே கொண்ட ஒரு SUV-ஐத் தேடுபவர்களுக்கு, மெஜஸ்டர் மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாக அமைகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 330 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Citroen e-C3X மின்சார கார் - என்ன இருக்குது?
ஒரே சார்ஜில் 330 கி.மீட்டர் மைலேஜ்.. பட்ஜெட் விலையில் Citroen e-C3X மின்சார கார் - என்ன இருக்குது?
மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20: வாடிக்கையாளர்களுக்கு எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
மாருதி பலேனோ, டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் i20: வாடிக்கையாளர்களுக்கு எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK:
TVK vs DMK: "பதறல் நிதி.. கதறல் நிதி.. ஆபாசநிதி.." உதயநிதியை தாறுமாறாக விமர்சித்த தவெக!
EV Velu: ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
ரூ.2,000 கோடிக்கு ஒப்புதல் பெற்றது எப்படி? 80 திட்டங்கள் - எ.வ. வேலு மீது ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு
TN By Election : 5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
5 தொகுதிக்கு இடைத்தேர்தல் இப்போதைக்கு இல்லை.! விஜய்க்கு ஷாக் கொடுத்த நீதிமன்றம்- நடந்தது என்ன.?
Vijay Commission : ’திமுகவிற்கு முற்றும் நெருக்கடி’ புதிய விசாரணை கமிஷனை அமைக்க முதல்வர் விஜய் முடிவு…!
'இனி விஜய் கமிஷன்’ திமுகவிற்கு நெருக்கடி கொடுக்க முதல்வர் முடிவு..!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
டாடா ஹாரியர் EV: 600 கி.மீ ரேஞ்ச், ரூ.2.75 லட்சம் வரை அதிரடி சலுகை- மிஸ் பண்ணிடாதீங்க!
TN Bypoll: அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
அப்படிப்போடு..! பெருந்துறைக்கும் இடைத்தேர்தல்? திமுக வேட்பாளரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
”சிஎம் விஜய் பேச்சை நீக்க முடியாது” சட்டசபையில் அமளியில் திமுக- கூண்டோடு வெளியேற்றிய சபாநாயகர்
Toyota Cars: ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
ஹேட்ச்பேக், க்ராஸ் ஓவர் SUV, 7 சீட்டர், ஹைப்ரிட் - மொத்தமா புதுசா இறக்கும் ஜப்பான் ப்ராண்ட் - முழு விவரம்
Embed widget