CNG Cars For City: நகர்ப்புறங்களில் தினசரி பயன்பாட்டிற்கு ஏதுவான சிஎன்ஜி கார்ல்களின் விலை உள்ளிட்ட விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

நகர்ப்புறங்களுக்கான சிஎன்ஜி கார்கள்:

இந்தியாவில் நிலையற்ற பெட்ரோல் விலை, குறைவான டீசல் கார்களின் ஆப்ஷன் காரணமாக, மைலேஜை விரும்பும் கார் பயனர்களுக்கு சிஎன்ஜி சிறந்த தேர்வாக விளங்குகிறது. பெட்ரோலை விட குறைந்த விலையில், டீசலை விட சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதோடு,தினசரி அலுவலகப் பயணங்களுக்கான ஒரு முக்கிய எரிபொருள் தேர்வாகவும் மாறியுள்ளது. பெட்ரோல் கார்களை விட சிஎன்ஜி கார்களின் விலை அதிகமாக இருக்கலாம், ஆனால் மலிவு விலையில் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

டாப் 5 சிஎன்ஜி கார்கள்

1. மாருதி செலேரியோ

மாருதி சுசூகி செலேரியோ, 998சிசி மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. பெட்ரோல் எடிஷனில் 67.5 bhp சக்தியையும் 91.1 Nm டார்க்கையும், CNG எடிஷனில் 55.9 bhp சக்தியையும் 82.1 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. செலேரியோ, நாட்டிலேயே மிகவும் எரிபொருள் சிக்கனமான கார்களில் ஒன்றாகும். இது மேனுவல் வேரியண்டில் 25.24 கி.மீ., ஆட்டோமேடிக் வேரியண்டில் 26.68 கி.மீ., மைலேஜ் வழங்குவதாக மாருதி அறிவித்துள்ளது. இருப்பினும், CNG வேரியண்ட் ஒரு கிலோவுக்கு 34.43 கி.மீ என்ற வியக்கத்தக்க மைலேஜை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது இது நாட்டிலுள்ள எந்தவொரு CNG காரும் வழங்கும் அதிகபட்ச மைலேஜ் ஆகும். மாருதி சுசுகி செலேரியோ CNG-யின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ₹ 5.97 லட்சத்தில் தொடங்குகிறது.

2. மாருதி சுசூகி வேகன்ஆர்

மாருதி சுசூகி வேகன்ஆர் சந்தேகத்திற்கு இடமின்றி நாட்டின் மிகவும் பிரபலமான கார் மற்றும் ப்ராண்டின் பழமையான மாடல்களில் ஒன்றாகும். செலேரியோவில் உள்ள அதே 998சிசி மூன்று-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது பெட்ரோல் எடிஷனில் 67.5 bhp மற்றும் 91.1 Nm டார்க்கையும், CNG எடிஷனில் 55.9 bhp மற்றும் 82.1 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. கூடுதலாக, மாருதி சுசுகி வேகன்ஆர், மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 24.35 கி.மீ., ஆட்டோமேடிக் வேரியண்டில் 25.19 கி.மீ., வழங்குகிறது. இருப்பினும், CNG வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 34.05 கி.மீ., மைலேஜை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.5.88 லட்சம் ஆகும்.

3.மாருதி சுசூகி ஆல்டோ கே10

மாருதி சுசூகி ஆல்டோ K10, செலேரியோ மற்றும் வேகன்ஆரில் உள்ள அதே 998சிசி மூன்று-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது பெட்ரோல் எடிஷனில் 67.5 bhp மற்றும் 91.1 Nm டார்க்கையும், CNG எடிஷனில் 55.9 bhp மற்றும் 82.1 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. கூடுதலாக, ஆல்டோ K10, மேனுவல் வேரியண்டில்லிட்டருக்கு 24.39 கி.மி.,, ஆட்டோமேடிக் வேரியண்டில் 24.9 கி.மீ., மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாருதி சுசுகி ஆல்டோ K10, CNG வேரியண்டில் ஒரு கிலோவிற்கு 33.85 கி.மீ மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூ.4.81 லட்சம் ஆகும்.

இதையும் படியுங்கள்: 7 Seater Turbo CNG: பட்டாசான தீபாவளி தான்..! 7 சீட்டரில் டர்போ சிஎன்ஜி - மைலேஜும், ஸ்பீடும் அள்ளப்போகுது - முழு விவரம்

4. மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி டிசையர், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் Z சீரிஸ் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது சுமார் 81 bhp சக்தியையும், 111.7 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், டிசையர் மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 24.79 கி.மீ.,, ஆட்டோமேடிக் வேரியண்டில் 25.71 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், CNG வேரியண்டில் ஒரு கிலோவிற்கு 33.73 கி.மீ என்ற அதிகபட்ச மைலேஜ் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.03 லட்சம் ஆகும்.

5. மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

மாருதி சுசூகி ஸ்விஃப்ட், டிசையரில் உள்ள அதே 1.2-லிட்டர் மூன்று-சிலிண்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் Z சீரிஸ் இன்ஜினைக் கொண்டுள்ளது. இது சுமார் 81 bhp சக்தியையும் 111.7 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. மேனுவல் வேரியண்டில் லிட்டருக்கு 24.8 கிலோ மீட்டரும், ஆட்டோமேடிக் வேரியண்டில் 25.75 கிலோ மீட்டரும் மைலேஜாக கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. CNG வேரியண்டில் ஒரு கிலோவிற்கு 32.85 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.7.44 லட்சத்தில் தொடங்குகிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI