மேலும் அறிய

Ventilated Seat Cars: குளுகுளுன்னு போகணுமா..! லோ பட்ஜெட்டில் வெண்டிலேடட் இருக்கைகள் - 5 ஸ்டார் ரேட்டிங், 34KM மைலேஜ்

Affordable Cars With Ventilated Seat: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வெண்டிலேடட் வசதியுடன் கூடிய இருக்கைகளை கொண்டு, மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 கார் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Affordable Cars With Ventilated Seat: கடும் வெப்பத்தின் போது கூட குளிர்ச்சியான பயண அனுபவத்தை பெற வெண்டிலேடட் வசதியுடன் கூடிய இருக்கைகளை பயன்படுகின்றன.

வெண்டிலேடட் வசதியுடன் கூடிய கார்கள்:

இந்தியாவின் தீவிரமான வானிலையானது கோடைகாலத்தை மிகவும் சிரமமானதாக மாற்றுகிறது. கார்களில் ஏசி அத்தியாவசியமான அம்சமாக உருவெடுத்துள்ளது. இது உடலின் முன்பகுதியை குளிர்ச்சியாக்கினாலும், வியர்வை கொட்டி அசவுகரியமான உணர்வை தரக்கூடிய முதுகுப்பகுதிக்கு ஏசி நல்ல தேர்வாக இருக்காது அப்படிப்பட்ட சூழலுக்கு தான் வெண்டிலேடட் வசதி இருக்கைகள் தீர்வாக அமைகின்றன. இதனை உணர்ந்த கார் உற்பத்தியாளர்கள், ஒரு காலத்தில் சொகுசு கார்களுக்கான அம்சமாக மட்டுமே இருந்த வெண்டிலேடட் இருக்கை வசதியை தற்போது பட்ஜெட் கார்களிலும் அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் உள்ளூர் சந்தையில் இந்த வசதியுடன் மலிவு விலையில் கிடைக்கும் டாப் 5 மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

வெண்டிலேடட் இருக்கை என்றால் என்ன?

வெண்டிலேடட் அதாவது காற்றோட்டமான இருக்கைகள் என்றால் என்ன? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இருக்கைக்குள்  சிறிய மின்விசிறிகள் பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் உருவாகும் காற்று வெளியேற இருக்கை உறையில் நுண்ணிய துளைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கும். இதனால்  பயணிகள் தங்கள் முதுகுப்பகுதியை குளிர்ச்சியாகவும், உலர்ந்ததகாவும் வைத்திருக்க முடியும். நீண்ட நேரம் இருக்கையில் ஒரே நிலையில் அமர்ந்து இருப்பதால், வியர்வை வடிந்து ஏற்படக்கூடிய அசவுகரியமான சூழலை தவிர்க்க முடியும். 

இதையும் படியுங்கள்: Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்

மலிவு விலையில் டாப் 5 வெண்டிலேடட் கார்கள்:

1.டாடா ஏரிஸ்

மிகப்பெரிய அளவில் அப்க்ரேட் செய்யப்பட்ட டாடா டைகோர் தற்போது ஏரிஸ் என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் வாயிலாக வெண்டிலேடர் இருக்கை என்பது மிகவும் மலிவானதாக மாறியுள்ளது. அதன்படி, 8.20 லட்சத்திற்கு கிடைக்கும் இந்த காரின் வேரியண்டிலேயே அந்த வசதி இணைக்கப்பட்டுள்ளது. காரின் டாப் வேரியண்டில் மட்டுமே இந்த ஆப்ஷன் கிடைத்தாலும், அதனை 4 கான்ஃபிகரேஷனில் தேர்வு செய்யும் வாய்ப்பு பயனர்களுக்கு கிடைக்கிறது.  பெட்ரோல் (மேனுவல் & ஆட்டோமோட்டிக்), சிஎன்ஜி (மேனுவல் & ஆட்டோமோட்டிக்) ஆப்ஷனில் கிடைக்கும் இந்த வேரியண்ட்களின் விலை ரூ.8.19 லட்சத்தில் தொடங்கி ரூ.9.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் 28.06 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதோடு, பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

2. ரெனால்ட் கைகர்

இந்திய சந்தையில் வெண்டிலேடட் இருக்கை வசதி கொண்ட மலிவான எஸ்யுவி கார் மாடலாக கைகர் உள்ளது. மாடலின் டாப் எண்ட் வேரியண்டான எமோஷன் ட்ரிம்மில் தான் இந்த ஆப்ஷன் இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.8.50 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதனை பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் ஆப்ஷனில், 6 வகையான கான்ஃபிகரெஷனில் பயனர்கள் தேர்வு செய்யலாம். இதன் விலை வரம்பானது ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி ரூ.ரூ.10.40 லட்சம் வரை நீள்கிறது. அதிகபட்சமாக லிட்டருக்கு 20.38 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதோடு, சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

3. மாருதி பலேனோ..!

அண்மையில் மேம்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட மாருதி பலேனோவானது, வெண்டிலேடட் இருக்கை வசதிகளுடன் கிடைக்கும் நாட்டின் மலிவு விலை ஹேட்ச்பேக் ஆகும். லிட்டருக்கு 24.77 கிலோ மீட்டர் மைலேஜ் உடன், இந்த அம்சத்தை கொண்டு அதிக மைலேஜ் தரும் கார் மாடலும் இதுவாகும். வெண்டிலேடட் இருக்கை வசதியுடன் கூடிய பலேனோ மாடலின் விலையானது ரூ.9.10 லட்சத்தில் தொடங்குகிறது. 4 வித்தியாசமான கான்ஃபிகரேஷனில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ.9.99 லட்சம் வரை நீள்கிறது. அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் 34.47 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதோடு, பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

4. மாருதி ப்ரேஸ்ஸா..!

மாருதி ப்ரேஸ்ஸாவின் புதிய எடிஷனிலும் வெண்டிலேடட் வசதியுள்ள முன் இருக்கைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீமியம் சொகுசு அம்சம், அதன் டாப்-ரேஞ்ச் ZXi+ டிரிம்மில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11.42 லட்சத்தில் தொடங்கி ரூ.13.70 லட்ச வரை (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. புதிய ப்ரேஸ்ஸா வெண்டிலேடட் வசதியுடன் இரண்டு கான்பிகரேஷனில் கிடைக்கிறது. அதிகபட்சமாக சிஎன்ஜி எடிஷனில் 26.9 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதோடு, தேசிய அளவிலான பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

5. சிட்ரோயன் பசால்ட் எக்ஸ்

டாடா கர்வ் காருடன் நேரடியாகப் போட்டியிடும் எஸ்யுவி-கூபே மாடலான சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், இந்தியாவில் காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகளுடன் கிடைக்கும் மிகவும் மலிவான மிட்-சைஸ் கார் ஆகும். இந்த அம்சம், இந்த மாடலின் உயர்நிலை 'மேக்ஸ்' ட்ரிம்மில் மட்டுமே கிடைக்கிறது. விதமான கான்ஃபிகரேஷனில் கிடைக்கும் இந்த காரின் விலை ரூ. 11.34 லட்சத்தில் தொடங்கி ரூ.13.89 லட்ச (எக்ஸ்-ஷோரூம்) வரை நீள்கிறது. அதிகபட்சமாக லிட்டருக்கு 19.5 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதோடு, தேசிய அளவிலான பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

Hybrid SUV Discounts: ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
ஹிட்டடித்த ஹைப்ரிட் SUV-க்கு ரூ.1.51 லட்சம் வரை தள்ளுபடி..! மாருதியின் அதிரடி ஆஃபர் - முழு விவரம்
அறிமுகமாகியது Hero Xtreme 125R Stealth Edition! இனி இதான் டாப் வேரியண்ட்! விலை எவ்ளோ?
அறிமுகமாகியது Hero Xtreme 125R Stealth Edition! இனி இதான் டாப் வேரியண்ட்! விலை எவ்ளோ?
Toyota Innova Hycross: பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
பவர்ட்ரெய்னில் மாற்றம்..! இன்னோவா ஹைக்ராஸில் டொயோட்டாவின் டாப் 5 அப்க்ரேட்கள்
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Maruti Suzuki Offers: முழுசா 3 லட்சம் தள்ளுபடி.. Nexa கார்களுக்கு ஆஃபரை அறிவித்துள்ள மாருதி சுசுகி! எந்தெந்த காருக்கு?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
Pawan Kalyan: 3வது மனைவியை பிரிவதாக அறிவித்தார் துணை முதலமைச்சர்! 13 வருட திருமண வாழ்க்கை முடிவு!
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
தீபாவளி பட்டாசு விற்பனை ரூ.7,000 கோடியை தொட்டது... அடுத்த ஆண்டு ரூ.10,000 கோடி வர்த்தகத்திற்கு சிவகாசி அதிரடி திட்டம்
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
Suriya: ஓங்கி அடிச்சா ரூபாய் 100 கோடி வசூல்டா.. ஹாட்ரிக் ஹிட்டால் ஹாப்பி மோடில் சூர்யா! சிங்கம் களமிறங்கிடுச்சே!
TN Weather News: 15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
15 மாவட்டங்களுக்கு வார்னிங்.. எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை - தமிழக வானிலை அறிக்கை
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
முதல்வரே உங்க எம்எல்ஏ செய்ற வேலைய பாத்தீங்களா.. இதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க..கனிமொழி ஆவேசம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
அரசு நலத்திட்டங்களுக்கு ஆதார் இனி இல்லை ! பயோமெட்ரிக், வாக்காளர் அட்டை முக்கியம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகை! 2 நாட்களில் எத்தனை கோடிக்கு மது விற்பனை தெரியுமா? எந்த மாவட்டம் முதலிடம்!
Embed widget