Honda Upcoming Car: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ள ஹோண்டாவின் 4 புதிய கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

புதிய கார்களை இறக்கும் ஹோண்டா:

இந்தியாவிலேயே உற்பத்தி செய்து புதிய கார்களை அறிமுகப்படுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கு இன்னும் ஒன்று  முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகலாம். இதனிடையே, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், சர்வதேச சந்தையில் விற்பனை செய்து வரும் சில மாடல்களை உள்நாட்டில் விற்பனை செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளதாம்.  அதன்படி, 4 கார்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் பரிசீலனையில் உள்ள 4 கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Continues below advertisement

ஹோண்டா பரிசிலீக்கும் 4 கார்கள்:

1. ஹோண்டா ZR-V எஸ்யுவி

இந்திய சந்தைக்காக ஹோண்டா பரிசீலிக்கும் பட்டியலில் உள்ள முதல் பெயர், சர்வதேச சந்தைக்கான காம்பேக்ட் எஸ்யுவி ஆன ZR-V கார் மாடலாகும்.  இது HR-V  மற்றும் CR-V மாடல்களுக்கு இடையே நிலநிறுத்தப்பட்டுள்ளது.  இந்திய சந்தைக்கான எடிஷனில் 2.0 பெட்ரோல் இன்ஜினில் ஹைப்ரிட் அம்சத்தை கொண்டு 181hp ஆற்றலை உற்பத்தி செய்யும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.8 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 173 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்றும், லிட்டருக்கு 22.1 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என்றும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால், இதன் விலை சுமார் ரூ.25 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நிர்ணயிக்கப்படலாம்.

                                          ஹோண்டா ZR-V (Source: Social Media/X)

2. ஹோண்டா ப்ரிலூட்

ஹோண்டா நிறுவனத்தின் சார்பில் ஜப்பானில் அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட, புதிய ஸ்போர்ட்ஸ் கூபேவான ப்ரிலூட் கார் 2026ல் இந்திய சந்தைக்காக பரிசீலிக்கப்படுகிறதாம்.  2+2 சீட்டிங் லேக் அவுட்டை கொண்டுள்ளது. ஆனால், பின்புறம் இறுக்கமாக உள்ளது மற்றும் சிறிய குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்றதாக தெரிகிறது. ZR-V காரில் இருக்கும் அதே பவர்ட்ரெயின் ஆப்ஷன் இதில் அப்படியே தொடர்கிறது. ஆனால், பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட 8.2 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 188 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து, லிட்டருக்கு 23.6 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் இந்த காரின் விலை ரூ.50 லட்சமாக நிர்ணயிக்கப்படலாம்.

3. 0 ஆல்ஃபா

மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு மாடல்களை தொடர்ந்து ஹோண்டாவின் மூன்றாவது காராக, 0 ஆல்ஃபா பெரும்பாலும் 2027ல் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் ப்ராண்ட் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் முதல் மின்சார காராகும். அதோடு, இந்தியாவிலேயே 0 ஆல்ஃபா உற்பத்தி செய்யப்பட உள்ளது. பிரிவு அடிப்படையில் ஹுண்டாய் க்ரேட்டா மற்றும் மாருதி இ-விட்டாரா ஆகிய மின்சார கார்களுடன் இது போட்டியிட உள்ளது. விலை அடிப்படையில் மற்ற போட்டியாளர்களை காட்டிலும் 0 ஆல்ஃபா அதிக மதிப்புடையதாக இருக்கலாம்.

0 ஆல்ஃபாவை தொடர்ந்து ஹோண்டா 0 எஸ்யுவியும் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லா மாடல் Y உடன் போட்டியிடும் விதமாக நவீன டிசைன் மற்றும் இன்ஜினியரிங் தொழில்நுட்பத்தை புதிய காரில் ஹோண்டா இறக்கும் என கூறப்படுகிறது. 0 ஆல்ஃபாவை போலல்லாமல், 0 எஸ்யுவி ஆனது அமெரிக்காவில் இருந்து முற்றிலும் கட்டமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இந்திய சந்தையில் ப்ராண்டின் லைன் - அப்பை வலுவாக கட்டமைக்க இது உதவும் என ஹோண்டா நம்புகிறதாம்.

4. ஹோண்டா CR-V

தொடர்ந்து, 2028ம் ஆண்டின் முதற்பாதியில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட அடுத்த தலைமுறை சிட்டி கார் மாடலை, பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் வேரியண்ட்களில் ஹோண்ட அறிமுகப்படுத்தக்கூடும்.  இந்த முறை ஹைப்ர்டி வேரியண்ட் அதிகளவில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வாய்ப்புள்ளதாம்.

அதிலிருந்து சுமார் ஒரு வருடம் கழித்து அடுத்த தலைமுறை CR-V கார் மாடல் இந்திய சந்தைக்கு கொண்டுவரப்பட சாத்தியங்கள் உள்ளனவாம். முற்றிலும் சிதைக்கப்பட்ட பாகங்களாக கொண்டுவரப்பட்டு, உள்நாட்டிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யலாம். ஆனால், இதற்கு ராஜஸ்தானில் உள்ள தனது ஆலையை நிறுவனம் மேம்படுத்த வேண்டியுள்ளது. இந்த காரானது முற்றிலும் புதிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அடிப்படையில் உருவாக்கப்படும் ஹைப்ரிட் பவர்ட்ரெயினில் மட்டுமே விற்பனை செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளதாம்.


Car loan Information:

Calculate Car Loan EMI