மேலும் அறிய

Honda Hybrid SUV: ஹைப்ரிட்னா இனி ஹோண்டா தான்..! தரமான 3 எஸ்யுவிக்களுக்கு அப்க்ரேட் - பட்ஜெட் விலை, கூடுதல் மைலேஜ்

Honda Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 3 ஹைப்ரிட் எஸ்யுவி கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஹோண்டா பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Honda Hybrid SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு கொண்டு வர ஹோண்டா பரிசீலிக்கும், 3 ஹைப்ரிட் எஸ்யுவி கார்கள் குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

3 ஹைப்ரிட் கார்களை களமிறக்கும் ஹோண்டா..!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை வலுவாக விரிவுபடுத்த ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 2026-27 காலகட்டத்தில் அடுத்தடுத்து 3 எஸ்யுவிக்களை அறிமுகப்படுத்தவும், அதில் ப்ராண்டின் e:HEV ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வழங்கவும் பரிசீலித்து வருகிறதாம். இந்நிலையில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, எலிவேட், CR-V, ZR-V ஆகிய கார்கள் ஹைப்ரிட் ஃபார்மில் சந்தைப்படுத்தப்பட உள்ளனவாம். இந்த மாடல்கள் குறித்து இதுநாள் வரை வெளியாகியுள்ள விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஹோண்டாவின் புதிய ஹைப்ரிட் கார்கள்:

1. ஹோண்டா ZR-V ஹைப்ரிட்

நடப்பாண்டின் இறுதியில் ZR-V ஹைப்ரிட் கார் மாடலை ஹோண்டா அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள தனது மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளுரில் தனது இமேஜை வலுப்படுத்தும் ,ப்ராண்டின் புதிய திட்டத்தின் ஒரு அங்கம் இதுவாகும். ZR-V எஸ்யுவியில் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆனது இரண்டு மின்சார மோட்டார்கள் உடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம்  184 bhp மற்றும் 315 Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த எஸ்யுவி ஆனது லிட்டருக்கு 22.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

டிசைன் அடிப்படையில் ZR-V எஸ்யுவி ஆனது தனித்துவமான ஓவல் வடிவிலான முன்புற க்ரில், பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள் மற்றும் 19 இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றை கொண்டுள்ளன.  உட்புறத்தில் 9 இன்ச் டச்ஸ்க்ரீன்,  இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் போஸ் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு கியர்பாக்ஸ் ஆப்ஷன்களிலும் வழங்கப்படுமெனவும், பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.8 விநாடிகளில் எட்டும் என்றும் கூறப்படுகிறது. இதன் விலை 25 லட்சம் முதல் தொடங்கலாம் என கூறப்படுகிறது.


Honda Hybrid SUV: ஹைப்ரிட்னா இனி ஹோண்டா தான்..! தரமான 3 எஸ்யுவிக்களுக்கு அப்க்ரேட் - பட்ஜெட் விலை, கூடுதல் மைலேஜ்

2. ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட்

உள்நாட்டு சந்தையில் ப்ராண்டின் பிரபலமான எஸ்யுவி மாடலாக உள்ள, எலிவேட்டின் ஹைப்ரிட் எடிஷனை தயாரிப்பதிலும் ஹோண்டா தீவிரமாக உள்ளது. நடப்பாண்டின் நடுப்பகுதியில் சந்தைப்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஹோண்டா சிட்டி e:HEV மாடலில் உள்ள அதே பவர்ட்ரெயினை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் இரண்டு மின்சார மோட்டர்களுடன் இணைக்கப்படும். உள்ளூரிலேயே பெரும்பாலான வேலைகளை செய்து, எளிதில் அணுகக் கூடிய விலையில் காரை சந்தைக்கு கொண்டு வர நிறுவனம் பரிசீலித்து வருகிறது. லிட்டருக்கு 26 கிலோ மீட்டர் வரையிலும், எரிபொருள் டேங்கை முழுமையாக நிரப்பினால் ஆயிரம் கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் அளிக்கும் வகையில் எலிவேட் வடிவமைத்து வருகிறதாம். இதன் மூலம் மலிவு விலை ஹைப்ரிட் கார் என்பதோடு, எரிபொருள் செலவை கணிசமாக குறைக்கும் மாடலாகவும் எலிவேட்டை முன்னிலைப்படுத்த ஹோண்டா முனைப்பு காட்டுகிறது. இதன் தொடக்க விலை 18 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.


Honda Hybrid SUV: ஹைப்ரிட்னா இனி ஹோண்டா தான்..! தரமான 3 எஸ்யுவிக்களுக்கு அப்க்ரேட் - பட்ஜெட் விலை, கூடுதல் மைலேஜ்

3. ஹோண்டா CR-V ஹைப்ரிட்

ஹோண்டாவின் CR-V கார் மாடலானது ஹைப்ரிட் வெர்ஷனில் வரும் 2027ம் ஆண்டு ஜுன் மாதத்தில் மீண்டும் இந்தியாவிற்கு வருகை தர உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு இந்த காரின் வழக்கமான எடிஷனின் விற்பனை உள்நாட்டு சந்தையில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய ப்ரீமியம் ஹைப்ரிட் எஸ்யுவி ஆனது முற்றிலும் கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. எனவே இதன் விலை ரூ.40 முதல் ரூ.45 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம். 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்ட்ரெயினை கொண்டு, எலெக்ட்ரிக் ஆல்வீல் ட்ரைவ் அம்சத்தை பெற உள்ளது. 

காரின் உட்புறத்தில் பெரிய 15 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பாதுகாப்பை மேம்படுத்த லெவல் 2 ADAS, அடங்கிய நவீன கேபினை பெற உள்ளது. ப்ராண்டின் இந்த முதன்மையான எஸ்யுவி ஆனது, உள்நாட்டு சந்தையில் ஸ்கோடா கோடியாக் மற்றும் ஹுண்டாய் டக்சன் மாடல்களுடன் போட்டியிட உள்ளது.


Honda Hybrid SUV: ஹைப்ரிட்னா இனி ஹோண்டா தான்..! தரமான 3 எஸ்யுவிக்களுக்கு அப்க்ரேட் - பட்ஜெட் விலை, கூடுதல் மைலேஜ்

ஹோண்டா ஹைப்ரிட் கார்களின் விவரங்கள்:

கார் மாடல் உத்தேச வெளியீடு இன்ஜின் விவரங்கள் ஆற்றல் உத்தேச  விலை
எலிவேட் ஹைப்ரிட் 2026ன் நடுப்பகுதி 1.5 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் 125 bhp, 253 Nm  ரூ.18 -20 லட்சம் (தொடக்க விலை)
CR-V ஹைப்ரிட் ஜுன், 2027 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் இன்ஜின் 204 bhp ரூ.40-45 லட்சம் (விலை வரம்பு)
 ZR-V ஹைப்ரிட் 2026ம் ஆண்டு இறுதி 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்  184 bhp மற்றும் 315 Nm ரூ.25 லட்சம் (தொடக்க விலை)

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read

Frequently Asked Questions

ஹோண்டா இந்தியாவில் எத்தனை புதிய ஹைப்ரிட் எஸ்யூவிகளைக் கொண்டுவர திட்டமிட்டுள்ளது?

ஹோண்டா நிறுவனம் 2026-27 காலகட்டத்தில் இந்தியாவில் அடுத்தடுத்து 3 புதிய ஹைப்ரிட் எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா எந்தெந்த ஹைப்ரிட் எஸ்யூவி மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது?

ஹோண்டா நிறுவனம் எலிவேட், CR-V, மற்றும் ZR-V ஆகிய மூன்று எஸ்யூவி மாடல்களை ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் அறிமுகப்படுத்த பரிசீலித்து வருகிறது.

ஹோண்டா ZR-V ஹைப்ரிட் மாடலின் மைலேஜ் மற்றும் விலை என்னவாக இருக்கும்?

ஹோண்டா ZR-V ஹைப்ரிட் மாடல் லிட்டருக்கு 22.2 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என்றும், இதன் விலை 25 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட் மாடலின் உத்தேச விலை என்ன?

ஹோண்டா எலிவேட் ஹைப்ரிட் மாடலின் தொடக்க விலை 18 முதல் 20 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா CR-V ஹைப்ரிட் மாடல் எப்போது இந்திய சந்தையில் அறிமுகமாகும்?

ஹோண்டா CR-V ஹைப்ரிட் மாடல் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவிற்கு மீண்டும் வரவுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
Skoda Discount: இந்தா புடி..! ரூ.5 லட்சம் வரை தள்ளுபடி - கைலாக் தொடங்கி கோடியாக் வரை - எந்த காருக்கு எவ்வளவு?
கியா செல்டோஸ் vs ஹூண்டாய் க்ரெட்டா vs மாருதி கிராண்ட் விட்டாரா: இதில் சிறந்த SUV எது? - எதை வாங்கலாம்?
கியா செல்டோஸ் vs ஹூண்டாய் க்ரெட்டா vs மாருதி கிராண்ட் விட்டாரா: இதில் சிறந்த SUV எது? - எதை வாங்கலாம்?
Mahindra BE.07 Vs BE6: பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
பிரமாண்டத்துக்கு மேல பிரமாண்டம்; மஹிந்திராவின் புதிய BE.07 எப்போ அறிமுகம்.? அதிக இடம், ரேஞ்ச் தருமா.?
ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் TVS Ronin வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? - Down Payment எவ்வளவு? - முழு விவரம் இதோ
ராயல் என்ஃபீல்டுக்கு டஃப் கொடுக்கும் TVS Ronin வாங்கினால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்? - Down Payment எவ்வளவு? - முழு விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin | ’’ஐயா உதவி பண்ணுங்க’’காலில் விழுந்த மூதாட்டி பதறிய உதயநிதி | Tenkasi
Bangalore Dog Issue | சிறுநீர் கழித்த வளர்ப்பு நாய்வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் சரமாரி தாக்குதல்!
Ameer slams Vijay | ’’மனைவி மகளை விரட்டிட்டுமகளிர் தின விழா கேக்குதா?’’விஜய்யை கிழித்த அமீர் | TVK
Kiruthiga Udhayanidhi | ”பிரச்சனைல மாட்டிக்காதீங்க”விஜய்க்கு மறைமுக ADVICE?கிருத்திகா உதயநிதி அதிரடி
Vijay Sangeetha Divorce | PRESS MEET-க்கு ரெடி!அதிரடி காட்டும் சங்கீதா இறங்கி வந்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget