Lexus LM 350h: லெக்ஸஸ் நிறுவனத்தின் LM 350h கார் விலை,  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Lexus LM 350h கார் அறிமுகம்:


Lexus India நிறுவனம் தனது LM 350h சொகுசு மல்டி பர்பஸ் வாகனமானது,  இந்தியாவில் 2 கோடி ரூபாய் எனும் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4-சீட்டர் லவுஞ்ச் பேக்கேஜுடன் கூடிய டாப் ரேஞ்ச் வேரியண்டின் விலை  ரூ. 2.50 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்ட LM 350h இப்போது,  Lexus நிறுவனத்தின் முதன்மையான கார் மாடலாக உள்ளது. தற்போது இது நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த மல்டி பர்பஸ் வாகனமாகும். முன்னதாக 1.2 கோடி ரூபாய் மதிப்பிலான Toyota  Vellfire இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Lexus LM இயங்குதளம், ஸ்டைலிங்:


Lexus LM ஆனது Vellfire உருவாக்கப்பட்ட அதே GA-K மாடுலர் தளத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். முன்பக்கத்தில், இது ஒரு பெரிய ஸ்பிண்டில் கிரில், நேர்த்தியான LED முகப்பு விளக்குகள் மற்றும் மூடுபனி விளக்குகளுக்கான வெர்டிகிள் ஹவுசிங்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளன.  பின்புற முனையின் மிகப்பெரிய சிறப்பம்சமாக, முழு அகல LED டெயில்-லைட் அமைப்புடன், வழக்கமான லெக்ஸஸ் சின்னமான L-க்கு பதிலாக லெக்ஸஸ் எழுத்துகள் வைக்கப்பட்டுள்ளன. 5,130 மிமீ நீளம், 1,890 மிமீ அகலம் மற்றும் 1,945 மிமீ உயரத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.






Lexus LM powertrain:


லெக்ஸஸ் எல்எம்  வாகனத்தில் 2.5-லிட்டர், 4-சிலிண்டர் செல்ஃப்-சார்ஜிங் ஹைப்ரிட் இன்ஜின் உள்ளது.  250hp மற்றும் 239Nm ஆற்றலை வெளிப்படுத்தும் இந்த இன்ஜின், eCVT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. என்ஜின் நிக்கல்மெட்டல் ஹைட்ரைடு பேட்டரியுடன் இணைந்து செயல்படுகிறது. Lexus இன் E-Four ஆல்-வீல் டிரைவ் அமைப்பையும் கொண்டுள்ளது.


பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள்:


Lexus LM இன் 4-சீட் எடிஷனானது முன் மற்றும் பின் பயணிகள் பெட்டிகளுக்கு இடையில்,  ஒரு பார்டீஷியன் அமைப்பு உள்ளது. ஏற்ற, இறக்க அம்சத்துடன் மங்கலான கண்ணாடி பேனலைப் பெறுகிறது. விமானத்தை ஒத்த ஸ்டைல் ​​ரிக்லைனர் இருக்கைகள், 48-இன்ச் டிவி, 23-ஸ்பீக்கர் சரவுண்ட்-சவுண்ட் ஆடியோ சிஸ்டம், தலையணை-ஸ்டைல் ​​ஹெட்ரெஸ்ட்கள், தனித்தனி முன் மற்றும் பின்புற ஆடியோ அவுட்புட்கள் வழங்கப்பட்டுள்ளன.


ஃபோல்டு-அவுட் டேபிள்கள், ஹீட் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் ஓட்டோமான்கள், பல USB போர்ட்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள், ரீடிங் லைட்டுகள், வேனிட்டி கண்ணாடிகள், ஃப்ரிட்ஜ், பின்புற கையுறை பெட்டிகள் ஆகியவை அடங்கும். டைனமிக் ரேடார் பயணக் கட்டுப்பாடு, ஸ்டியரிங் உதவியுடன் லேன் புறப்படும் எச்சரிக்கை, லேன் டிரேசிங் அசிஸ்ட், தானியங்கி உயர் பீம், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், பாதுகாப்பான வெளியேறுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ADAS தொழில்நுட்பத்தின் Lexus Safety System+ 3 தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI