இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் இ ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Kinetic Green Zulu:
இந்த நிலையில், Kinetic நிறுவனமும் வாடிக்கையாரளர்களை கவர்வதற்காக பல்வேறு இ ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் அவர்களது தயாரிப்பான Kinetic Green Zulu இ ஸ்கூட்டர் பற்றி கீழே விரிவாக காணலாம்.
104 கிலோமீட்டர் மைலேஜ்:
இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 88 ஆயிரத்து 145 ஆகும். இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 104 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் பொருத்தப்பட்டுள்ளது.
94 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் சார்ஜர் வசதி பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்புகள்:
சிபிஎஸ் ப்ரேக்கிங் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் சஸ்பென்சன் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பெனசன் பொருத்தப்பட்டுள்ளது. இது 93 கிலோ எடை கொண்டது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 30 ஆயிரம் கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.
டிஜிட்டல் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. டிஸ்டன்ஸ் டூ எம்ப்டி வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. லோ பேட்டரி இண்டிகேட்டர் வசதி உள்ளது. யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வசதி உள்ளது. கீலெஸ் லாக்/ அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் வசதி உள்ளது.
சீனியர் சிட்டிசன்கள்:
பேட்டரி ஸ்டேட்டஸ், லைவ் சார்ஜிங் ஸ்டேட்டஸ் போன்ற வசதிகள் கிடையாது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சிக்னல் விளக்குகளும் ஹாலோஜன் விளக்குகள் ஆகும்.
இந்த Kinetic Green Zulu இ ஸ்கூட்டரின் வசீகரமான தோற்றம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. குறிப்பாக, முதியவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இந்த இ ஸ்கூட்டர் உள்ளது.
Car loan Information:
Calculate Car Loan EMI