மின்சார சந்தையில் கால்தடம் பதிக்க ஆர்வம் காட்டி வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம் Kinetic. இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த பல்வேறு இ ஸ்கூட்டர் நிறுவனங்களும் தயாராகி வருகின்றனர். 

Continues below advertisement

அந்த வரிசையில் Kinetic நிறுவனம் முக்கியமாக உள்ளது. அவர்களின் Kinetic Green Zing இ ஸ்கூட்டர் நிறுவனம் முக்கியமானது. இதை பற்றி கீழே விரிவாக காணலாம்.

Kinetic Green Zing:

இந்த Kinetic Green Zing இ ஸ்கூட்டரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. 

Continues below advertisement

1. Zing Standard - ரூபாய் 71 ஆயிரத்து 657

2. Zing Big B - ரூபாய் 79 ஆயிரத்து 818

மைலேஜ்:

முதல் வேரியண்டில் 1.4 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 70 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். நீலம், சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் உள்ளது. 

இரண்டாவது வேரியண்டில் 1.68 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். இந்த இ ஸ்கூட்டரும் வெள்ளை, நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் உள்ளது.

லித்தியம் அயர்ன் பேட்டரி:

இதன் எடை 81 கிலோ ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 4 மணி நேரம் ஆகிறது. 60 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் அயர்ன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. போர்ட்டபிள் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஐபி 67 பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

முன்பக்கம், பின்பக்கம் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்சன் முன்பக்கமும், பின்பக்கம் டூயல் ஷாக் அப்சார்பர் சஸ்பென்சனும் பொருத்தப்பட்டுள்ளது. 

பேட்டரி வாரண்டி:

கிரவுண்ட் கிளியரன்ஸ் 160 மி.மீட்டர் ஆகும். 3 வருடம் அல்லது 60 கிலோமீட்டர் வரை பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது. 20 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 2 வருடம் மோட்டார் வாரண்டி அளிக்கப்படுகிறது. டிஜிட்டல் டிஸ்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் டிஜிட்டலில் பொருத்தப்பட்டுள்ளது. 1 ட்ரிப்மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 

லோ பேட்டரி இண்டிகேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. கீலெஸ் லாக்/ அன்லாக் வசதி உள்ளது. செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆன்டி தெஃப்ட் சிஸ்டம் வசதி உள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் எரியும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரேக்/டெயில் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பில்லியன் சீட் பொருத்தப்பட்டுள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI