KIA Affordabale EV: டாடா நெக்ஸானிற்கு போட்டியாக வரும் கியா நிறுவனத்தின் சைரோஸ் (Syros) மின்சார எடிஷனின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

கியாவின் புதிய கார் திட்டம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான தனது போர்ட்ஃபோலியோவில், இடம்பெறும் மாடல்களின் எண்ணிக்கையை 2030ம் ஆண்டுக்குள் 10 ஆக உயர்த்த கியா திட்டமிட்டுள்ளது. இதில் புதியதாக வரவுள்ள சைரோஸ் மின்சார எடிஷன், சொரெண்டோ ஹைப்ரிட் மற்றும் கார்னிவல் ஹைப்ரிட் ஆகிய அட்டகாசமான மாடல்களும் அடங்கும். கியா செல்டோஸின் ஹைப்ரிட் எடிஷனானது 2027ம் ஆண்டு வெளியாகும் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விலை வரம்புகளில் வெவ்வேறு விதமான வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படி, கியாவின் புதிய மாடல்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளனவாம்.

Continues below advertisement

நெக்ஸானிற்கு போட்டியாக கியாவின் மலிவு EV

கியா சைரோஸ் மாடலின் மின்சார எடிஷனானது தென்கொரிய ப்ராண்ட் சார்பில், இந்திய சந்தையில் கிடைக்கும் மிகவும் சிறிய மற்றும் மலிவான மின்சார கார் மாடலாக இருக்கும். இதன் விலை வரம்புகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அடிப்படை விலை சுமார் 15 லட்சம் ரூபாயில் தொடங்கி டாப் வேரியண்ட்களின் விலை 20 லட்சம் ரூபாய் வரையிலும் நிர்ணயிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உள்ளூர் சந்தையில் எம்ஜி விண்ட்சர், டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்த்ராவின் XUV EXO ஆகிய மின்சார கார் மாடல்களுடன்  போட்டியிட உள்ளது. நாட்டின் சப்-காம்பேக்ட் க்ராஸ்-ஓவர் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா நெக்ஸான், ரூ.12.49 லட்சம் தொடங்கி ரூ.17.49 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு அதிகபட்சமாக 489 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

கியா சைரோஸ் EV - பவர்ட்ரெயின் விவரங்கள்

கியா சைரோஸ் EV, உலகளவில் விற்பனையாகும் ஹூண்டாய் இன்ஸ்டர் மின்சார எடிஷனை அடிப்படையாக கொண்டு K1 ப்லாட்ஃபார்மில் கட்டமைக்கப்படுகிறது. இது ஃப்ரண்ட் வீல் ட்ரைவ் சிஸ்டத்தை கொண்டிருக்கும். அதேநேரம், இதன் அதிகாரப்பூர்வ பவர்ட்ரெய்ன் விவரங்கள் ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை. வெளியாகியுள்ள தகவல்களின்படி, சைரோஸ் EV அதன் பவர்ட்ரெய்னை ஹூண்டாய் இன்ஸ்டர் EV உடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. சர்வதேச சந்தையில் இன்ஸ்டரானது 42kWh ஸ்டாண்டர்ட் ரேஞ்சானது அதிகபட்சமாக 97PS சக்தியுடன், 355 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் 49kWh லாங் ரேஞ்ச் எடிஷனானது 115PS சக்தியுடன் 370 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம், இரண்டு எடிஷன்களுமே ஒரே மாதிரியாக 147Nm எனும் இழுவைத்திறனை வெளிப்படுத்துகிறது.

கியா சைரோஸ் EV - டிசைன், வசதிகள்

கியா சைரோஸ் மின்சார எடிஷனானது அதன் இன்ஜின் எடிஷனை பின்பற்றி பெட்டி போன்ற தோற்றத்தையும் ஒட்டுமொத்த வடிவமைப்பையும் தக்க வைத்துக் கொள்ளும் என்பதை சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உணர்த்துகின்றன. அதேநேரம் உள்ளேயும் வெளியேயும் மின்சார எடிஷனுக்கு என பல பிரத்யேக மாற்றங்களைப் பெறக்கூடும். அதன்படி,  முன்பக்க பேனலில் சார்ஜிங் ஃபிளாப், ஏரோடைனமிக்ஸ் ரீதியாக மேம்படுத்தப்பட்ட அலாய் வீல்கள், திருத்தப்பட்ட பம்பர்கள் மற்றும் ரூஃப் ரெயில்கள் இடம்பெறும். இந்த EV, வாகனத்திலிருந்து லோடிற்கு (V2L) மற்றும் வாகனத்திலிருந்து வாகனத்திற்கு (V2V) சார்ஜ் செய்யும் திறன்களைப் பெறக்கூடும். இதன் பெரும்பாலான அம்சங்கள் வழக்கமான இன்ஜின் உதவியுடன் இயங்கும் சைரோஸ் உடன் பகிர்ந்து கொள்ளும் என தெரிகிறது.

இதையும் படியுங்கள்: TN DGP: புதிய டிஜிபி இதுவரை பொறுப்பேற்காதது ஏன்? மகேஷ் குமார் அகர்வால் எங்கே? சிஎம் விஜய் டிக் அடித்தது ஏன்?

தாக்குபிடிக்குமா?

கியா சைரோஸ் மின்சார எடிஷன் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும், போக போக விற்பனை கடுமையாக சரிந்தது. போதுமான கேபின் வசதி இல்லாதது, விசித்திரமான டிசைன் கட்டமைப்புக்கு ஈடில்லாத விலை, ப்ராண்டின் சொந்த மாடல்களான செல்டோஸ் மற்றும் சோனெட்டிலிருந்து கிடைக்கும் போட்டி  உள்ளிட்டவை சரோஸிற்கு மிகப்பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றன. இந்நிலையில் அதன் மின்சார எடிஷனானது,  விற்பனையில் ஆதிக்கம் செலுத்தும் டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி விண்ட்சர் ஆகியவற்றின் போட்டியை சமாளிக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Car loan Information:

Calculate Car Loan EMI