kia Upcoming SUV: 25KM மைலேஜில் 7 சீட்டர், ஹைப்ரிட் ப்ரீமியம் MPV-யை கன்ஃபார்ம் செய்த கியா - புது மாடல்களின் விவரங்கள்
kia Upcoming SUV: கியா நிறுவனம் சொரெண்டோவை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, காரென்ஸ் க்ளாவிஸ் மாடலின் சிஎன்ஜி எடிஷனை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

kia Carens Clavis CNG: கியாவின் இரண்டாவது ஹைப்ரிட் மாடலாக 7 சீட்டர் கார்னிவல் இருக்கும் என தென்கொரிய நிறுவனம் அறிவித்துள்ளது.
கியா கார்னிவல் ஹைப்ரிட்
கியா நிறுவனம் ப்ராண்டின் முதல் ஹைப்ரிட் மாடலான, 3 வரிசை இருக்கைகளை கொண்ட சொரெண்டோ மாடலை நேற்று அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் அடுத்தடுத்து விற்பனைக்கு கொண்டுவரவுள்ள புதிய மாடல்கள் தொடர்பான தகவல்களையும் வெளியிட்டது. அதன்படி, தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமானது ப்ராண்டின் இரண்டாவது வலுவான ஹைப்ரிட் மாடலாக கார்னிவல் 7 சீட்டர் எம்பிவியை களமிறக்க உள்ளது. இதில் கியா சொரெண்டோவில் உள்ள பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் அப்படியே பகிரப்பட உள்ளதாம். தற்போதைய சூழலில் கார்னிவல் எம்பிவியின் லிமைவுசின் ப்ளஸ் என்ற ஒற்றை வேரியண்டானது, 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனில் ரூ.59.65 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) என்ற விலையில் உள்ளூரில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் ஹைப்ரிட் எடிஷன் உறுதி செய்யப்பட்டாலும், வெளியீட்டிற்கான காலம் ஏதும் உறுதியாகவில்லை. இதன் விலை ரூ.62 லட்சம் வரை நீளக்கூடும்.
கியா காரென்ஸ் க்ளாவிஸ் சிஎன்ஜி விவரங்கள்..!
மறுமுனையில் நாட்டில் வேகமாக வளர்ந்துவரும் சிஎன்ஜி பிரிவிலும் வரும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் தொடக்கத்தில் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கியா சார்பில் தொழிற்சாலையிலேயே சிஎன்ஜி கிட் பொருத்தப்பட்ட முதல் மாடல்களாக காரென்ஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸ் ஆகியவை விரைவில் களமிறக்கப்பட உள்ளன. இந்த எம்பிவிக்களானது 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜினை, பூட் பகுதியில் அமைக்கப்பட உள்ள 60 லிட்டர் சிஎன்ஜி டேங்குடன் இணைக்க உள்ளது. அதன் வாயிலாக 93bhp மற்றும் 123Nm ஆற்றல் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இது, அவற்றின் பெட்ரோல் எடிஷன்களுடன் ஒப்பிடுகையில் 22bhp மற்றும் 21Nm குறைவாகும்.
காரென்ஸ் க்ளாவிஸ் CNG - இடவசதி, சஸ்பென்ஷன் விவரங்கள்
சிஎன்ஜி டேங்க் பூட் ஃப்ளோருக்கு கீழே வைப்பதால் லக்கேஜ் வைப்பதற்கான இடவசதி குறையும். எம்பிவியின் பெட்ரோல் எடிஷன்கள் சுமார் 216 லிட்டர் பூட் ஸ்பேஸ் வழங்கும் நிலையில், இவற்றின் சிஎன்ஜி 116 லிட்டர் மட்டுமே பூட்ஸ்பேஸ் வழங்குமாம். அதாவது சுமார் 100 லிட்டர் மதிப்பிற்கு பூட் ஸ்பேஸ் குறைகிறது. சிஎன்ஜி மாடல்களின் செயல்திறனையும், கையாளுதலையும் மேம்படுத்தும் வகையில், காரென்ஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸின் சஸ்பென்ஷன் அமைப்பு மறுசீரமைக்கப்பட்டுள்ளது. அதோடு முன்பக்க டிஸ்க் ப்ரேக்குகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. வாகனத்தின் ஸ்டெப்னி சக்கரம் தொடர்ந்து அடிப்பகுதியில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரென்ஸ் க்ளாவிஸ் CNG - மைலேஜ் விவரங்கள்
காரென்ஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸின் சிஎன்ஜி எடிஷன்களின் மைலேஜ் தொடர்பான விவரங்களை கியா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இரண்டு மாடல்களும் ஒரு கிலோ மீட்டருக்கு 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரென்ஸ் க்ளாவிஸின் HTE மற்றும் HTE (O) வேரியன்ட்களிலும், காரென்ஸ் எம்பிவியின் ப்ரீமியம் டிரிம்மிலும் CNG கிட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் 16-இன்ச் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும்.
காரென்ஸ் க்ளாவிஸ் CNG - விலை விவரங்கள்
காரென்ஸ் க்ளாவிஸ் எம்பிவியின் சிஎன்ஜி எடிஷன் ரூ.12.27 லட்சம் தொடங்கிரூ.16.27 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பை பெறக்கூடும். உள்ளூரில் இந்த காரானது சிஎன்ஜி எடிஷனில் மாருதி சுசூகி எர்டிகா, மாருதி XL6 மற்றும் டொயோட்டா ரூமியன் ஆகிய மாடல்களுடன் போட்டியிட உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























