டாடா, மஹிந்திரா, மாருதி சுசுகி நிறுவனங்களுக்கு நிகரான அளவிற்கு புகழை பெற்று வரும் நிறுவனமாக இந்தியாவில் உயர்ந்துள்ளது கியா நிறுவனம். கியா நிறுவனத்தின் பட்ஜெட் விலையில் உள்ள கார் Kia Syros ஆகும். இந்த காரின் விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் குறித்து கீழே காணலாம். 

Continues below advertisement

Kia Syros விலை என்ன?

Kia Syros கார் கியா நிறுவனத்தின் காரை வாங்க விரும்பும் பலரின் முதன்மைத் தேர்வாக உள்ளது. இந்த கார் 1 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட கார் ஆகும். இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 10.22 லட்சம் ஆகும். 

இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 19.65 லட்சம் ஆகும். இந்த காரில் மொத்தம் 13 வேரியண்ட்கள் உள்ளது. இந்த காருக்கு டிசம்பர் மாத சலுகையாக ரூபாய் 90 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாதம் இதன் தொடக்க விலை ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும். 

Continues below advertisement

1. Kia Syros HTK:

இந்த Kia Syros HTK காரில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 10.22 லட்சம் ஆகும். 

2. Kia Syros HTK (O):

இந்த Kia Syros HTK (O) காரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒரு கார் ரூபாய் 11.05 லட்சம் மற்றும் மற்றொரு வேரியண்ட் ரூபாய் 12.58 லட்சம் ஆகும். 

3. Kia Syros HTK Plus:

இந்த காரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. ரூபாய் 13.25 லட்சம், ரூபாய் 14.19 லட்சம் மற்றும் ரூபாய் 14.69 லட்சம் விலையில் இந்த கார் உள்ளது. 

4. Kia Syros HTX:

Kia Syros HTX காரில் மொத்தம் 3 வேரியண்ட் உள்ளது. ரூ.14.91 லட்சம், ரூபாய் 15.83 லட்சம் மற்றும் ரூபாய் 16.35 லட்சம் விலையில் இந்த கார் உள்ளது. 

5. Kia Syros HTX Plus:

இந்த Kia Syros HTX Plus காரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. ஒன்று ரூபாய் 17.90 லட்சமும், மற்றொன்று ரூபாய் 18.77 லட்சமும் விலை ஆகும்.

6. Kia Syros HTX Plus (O):

Kia Syros HTX Plus (O) காரில் மொத்தம் 2 வேரியண்ட் உள்ளது. இந்த காரின் ஒரு வேரியண்ட் விலை ரூபாய் 18.79 லட்சம் மற்றொரு வேரியண்ட் விலை ரூபாய் 19.65 லட்சம்.

மைலேஜ்:

இந்த காரின் பெட்ரோல் வேரியண்ட்டில் 998 சிசி திறன் கொண்ட எஞ்ஜினும், டீசல் வேரியண்டில் 1493 சிசி திறன் கொண்ட எஞ்ஜினும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 3 டிஸ்ப்ளே டேஷ்போர்ட் உள்ளது. பனோராமிக் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 11.3 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலையில் 15.38 கிலோமீட்டரும் மைலேஜ் தருகிறது.  அதிகபட்சமாக பெட்ரோல் கார் 18.2 கிலோ மீட்டரும், டீசல் கார் 20.75 கிலோமீட்டரும் மைலேஜ் தருகிறது. 

பெட்ரோல் கார் 118 பிஎச்பி குதிரைத் திறனும், 172 என்எம் டார்க் இழுவிசை திறனும் கொண்டது. டீசல் கார் 114 பிஎச்பி குதிரை ஆற்றலும், 250 என்எம் டார்க் இழுதிறனும் கொண்டது. ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு இந்த காரின் விலை ரூபாய் 1.86 லட்சம் வரை குறைந்துள்ளது. 

சிறப்பம்சங்கள்:

இந்த காரில் 360 டிகிரி கேமரா வசதி உள்ளது. ADAS  வசதி உள்ளது. இருக்கைகள் பயணிகளுக்கு செளகரியமாக உள்ளது. ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் வசதி உள்ளது. க்ரூஸ் கன்ட்ரோல் வசதி உள்ளது. ஸ்பீட் அலர்ட் வசதி உள்ளது. 6 ஏர்பேக் வசதி உள்ளது. டாப் வேரியண்ட்களில் காரின் பக்கவாட்டிலும்  ஏர்பேக் உள்ளது. ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா வசதி உள்ளது. 

இந்த கார் வெனுயூ, வெனுயூ என் லைன், கியா சோனட், ப்ரெஸா ஆகிய கார்களுக்கு போட்டியாக இந்த கார் உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI