Kia Sorento Launched in India: கியாவின் முற்றிலும் புதிய ஹைப்ரிட் எஸ்யுவி ஆன சொரெண்டோவின் அம்சங்கள் மற்றும் வசதிகள் தொடர்பான முழு விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Continues below advertisement

முற்றிலும் புதிய கியா சொரெண்டோ

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் புதிய முதன்மையான எஸ்யுவி மாடலாக, முற்றிலும் புதிய சொரெண்டோ அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது.  இதன் தொடக்க விலை 27 லட்சத்டு 99 ஆயிரம் ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்யுவியில் டீசல் மற்றும் வலுவான ஹைப்ரிட் பவர்ட்ரெயின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. 6 மற்றும் 7 சீட்டர் கான்ஃபிகரெஷனில் பயனர்கள் இந்த காரை தேர்வு செய்யலாம். டாப் எண்ட் வேரியண்டின் விலை ரூ.40.39 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் ட்ரிம்களானது HTE  டீசல் 7 சீட்டரில் தொடங்குகிறது. ஹைப்ரிட் எடிஷனின் தொடக்க விலை ரூ.29.49  லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

கியா சொரெண்டோ பவர்ட்ரெயின்கள்:

சொரெண்டோவானது 193PS மற்றும் 442Nm ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய ஸ்மார்ட்ஸ்ட்ரீம்2.2 லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது.  8 ஸ்பீட் DCT கியர்பாக்ஸ் ஆப்ஷனை கொண்டு இருப்பதோடு, இது HTX க்ரேட் வரை அதிகபட்சமாக AWD அம்சம் வரை நீட்டிக்கப்படுகிறது. ஹைப்ரிட் ஆப்ஷனானது ஸ்மார்ட்ஸ்ட்ரீம் 1.6 லிட்டர் T-GDi இன்ஜினை கொண்டு 180PS மற்றும் 265Nm ஆற்றலை உற்பத்தி செய்ய, எலெக்ட்ரிக் மோட்டாரானது கூடுதலாக 65PS மற்றும் 264Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது. ஹைப்ரிட் எடிஷனானது 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனை கொண்டிருக்க, HTX அடிப்படையிலான வேரியண்ட்கள் ஆல் வீல் ட்ரைவ் அம்சத்தை பெறுகிறது. அதேநேரம், கார் மாடலின் மைலேஜ் தொடர்பான விவரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 

கியா சொரெண்டோ - விலை விவரங்கள்

சொரெண்டோவில் டாப் வேரியண்ட்களில் ப்ளாக் லைன் மற்றும் ADAS வசதியுள்ள வேரியண்ட்டுகள் உள்ளன. இதன் மூலம் வாங்குபவர்களின் தேவைக்கேற்ப பவர்டிரெய்ன், இருக்கை அமைப்பு, உபகரணங்கள் மற்றும் டிரைவ்ட்ரெய்ன் உட்பட பலதரப்பட்ட ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

பவர்ட்ரெயின்சீட்டிங் திறன்தொடக்க விலை (எக்ஸ் - ஷோரூம்)டாப் விலை (எக்ஸ் - ஷோரூம்)
2.2 லிட்டர் டீசல்7 சீட்டர்ரூ.27.99 லட்சம்ரூ.38.69 லட்சம்
2.2 லிட்டர் டீசல்6 சீட்டர்ரூ.32.699 லட்சம்ரூ.38.89 லட்சம்
1.6 லிட்டர் ஹைப்ரிட்7 சீட்டர்ரூ.29.49 லட்சம்ரூ.40.19 லட்சம்
1.6 லிட்டர் ஹைப்ரிட்6 சீட்டர்ரூ.34.19 லட்சம்ரூ.40.39 லட்சம்

கியா சொரெண்டோ - அம்சங்கள், வசதிகள்

சொரெண்டோவில் இந்திய சந்தைக்கு ஏற்ப கணிசமான தொழில்நுட்ப அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி, 12.3 இன்ச் எச்டி நேவிகேஷன் டிஸ்பிளே, டயல்-வகை ஷிஃப்ட்-பை-வயர் செலக்டர் மற்றும் நேவிகேஷன் அடிப்படையிலான ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளன. கேபினில் கியாவின் செக்மெண்டிலேயே சிறந்ததாக கருதப்படும் ரிலாக்‌ஸேஷன் இருக்கைகள் உள்ளன. ரியல் டைம் ஜெனரேட்டிவ் AI அடிப்படையிலான கியா AI அசிஸ்டன்ட், பெர்பிளெக்சிட்டி நுண்ணறிவு அடுக்கை வழங்க, சவுண்ட்ஹவுண்ட் AI குரல் அமைப்பை இயக்குகிறது. சொரெண்டோவின் உபகரண பட்டியலில் பாதுகாப்பு அம்சங்கள் மற்றொரு முக்கிய பகுதியாகும். அதன்படி லெவல் 2+ ADAS மற்றும் 30 தானியங்கி பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.  இதன் ஸ்டாண்டர்ட் பேக்கேஜில் 26 அம்சங்கள் மற்றும் 10 ஏர்பேக்குகள் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்: Volkswagen: ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?

கியா சொரெண்டோ - வெளிப்புற டிசைன்

கியா சொரெண்டோ ப்ராண்டின் 'ஆப்போசிட்ஸ் யுனைடெட்' தத்துவத்தை மையமாகக் கொண்ட ஒரு தனித்துவமான முன்பக்க வடிவமைப்பைப் பெற்றுள்ளது. பிரதானமான க்ரில் அமைப்பு, செங்குத்தாக அடுக்கப்பட்ட விளக்குகள் மற்றும் அகலமான தோற்றம் ஆகியவை அடங்கும். பின்புறத்தில் செங்குத்தாக அமைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள், கம்பீரமான டெயில்கேட் மற்றும் நேர்த்தியான பம்பர் வடிவமைப்பு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.  அதே சமயம், ப்ளாக் லைன் வேரியன்ட்கள், மிகவும் எளிமையான தோற்றத்திற்காக அடர் நிற வெளிப்புற விவரங்களைக் கொண்டுள்ளன. 


Car loan Information:

Calculate Car Loan EMI