Kia Sorento: சொரெண்டோ வேரியண்ட்களின் விலை விவரங்கள் - போட்டியாளர்கள் எப்படி? SUV-க்களின் முழு ஒப்பீடு
Kia Sorento Variants Price Rivals: கியா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் கார் மாடலான சொரெண்டோவின், ஒவ்வொரு வேரியண்டிற்கான விலை விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம்.

Kia Sorento Variants Price Rivals: கியா நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் கார் மாடலான சொரெண்டோவின், போட்டியாளர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சொரெண்டோ - கியாவின் முதல் ஹைப்ரிட் கார்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் வலுவான ஹைப்ரிட் செட்டப்பை கொண்ட, கார் மாடலாக சொரெண்டோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும் டர்போ பெட்ரோல் ஹைப்ரிட் என இரண்டு வகையிலான பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. இதன் விலை வரம்பானது 27 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி 40 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. ஹைப்ரிட் எடிஷனின் தொடக்க விலையானது 29 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக உள்ளது. மொத்தம் 6 வேரியண்ட்களில் 20 ட்ரிம்களில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. பயனர்கள் 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் கான்ஃபிகரேஷன் ஆப்ஷன்களையும் பெறுகின்றனர். இந்நிலையில் இந்த காரின் ஒவ்வொரு வேரியண்ட் மற்றும் ட்ரிம்மின் விலை விவரங்கள், சீட்டிங் கெபாசிட்டி அடிப்படையில் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சொரெண்டோ - முழு விலை விவரங்கள்
| வேரியண்ட் | டீசல் 7 சீட்டர் | டீசல் 6 சீட்டர் | ஹைப்ரிட் 7 சீட்டர் | ஹைப்ரிட் 6 சீட்டர் |
| HTE | ரூ.27.99 லட்சம் | - | ரூ.29.49 லட்சம் | - |
| HTE(O) | ரூ.29.49 லட்சம் | - | ரூ.30.99 லட்சம் | - |
| HTK | ரூ.32.49 லட்சம் | ரூ.32.69 லட்சம் | ரூ.33.99 லட்சம் | ரூ.34.19 லட்சம் |
| HTK(A) | ரூ.33.49 லட்சம் | ரூ.33.69 லட்சம் | ரூ.34.99 லட்சம் | ரூ.35.19 லட்சம் |
| HTX(AWD) | ரூ.37.49 லட்சம் | ரூ.37.69 லட்சம் | ரூ.38.99 லட்சம் | ரூ.39.19 லட்சம் |
| HTX(A)(AWD) | ரூ.38.49 லட்சம் | ரூ.38.69 லட்சம் | ரூ.39.99 லட்சம் | ரூ.40.19 லட்சம் |
சொரெண்டோவிற்கான முன்பதிவு தொடக்கம்:
விலைக்கு ஏற்ப ஒவ்வொரு வேரியண்டிலும் சீட்டிங் கான்ஃபிகரேஷன், தொழில்நுட்ப வசதிகள், அம்சங்கள் மற்றும் ப்ரீமியம் உணர்வு போன்றவை வேறுபடுகின்றன. சொரெண்டோவிற்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள நபர்கள் ப்ராண்டின் அதிகாரப்பூர்வ ஷோரூம் அல்லது இணையதள முகவரியை அணுகி, 25 ஆயிரம் ரூபாய் என்ற கட்டணத்தை செலுத்தி முன்பதிவை மேற்கொள்ளலாம். செப்டம்பர் மாத இறுதியில் இந்த காரின் விநியோகம் தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூரில் உள்ள கியா நிறுவன தொழிற்சாலையில் இந்த கார் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
சொரெண்டோ Vs போட்டியாளர்கள்: முக்கிய விவரங்கள்
கியா சொரெண்டோவானது உள்ளூர் சந்தையில் ஜீப் மெரிடியன், ஸ்கோடா கோடியாக் மற்றும் ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் ஆகிய மாடல்களிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது.
| மாடல் | தொடக்க விலை | டாப் விலை | இன்ஜின் | ட்ரான்ஸ்மிஷன் | ட்ரைவ்ட்ரெயின் |
| கியா சொரெண்டோ | ரூ.27.99 லட்சம் | ரூ.40.39 லட்சம் | 2.2 லி டீசல்/1.6லி பெட்ரோல் ஹைப்ரிட் | 8 ஸ்பீட் DCT/6 ஸ்பீட் AT | FWD/AWD |
| ஸ்கோடா கோடியாக் | ரூ.36.99 லட்சம் | ரூ.46.99 லட்சம் | 2.0லி TSI டர்போ பெட்ரோல் | 7 ஸ்பீட் DSG | AWD |
| ஃபோக்ஸ்வாகன் டெய்ரோன் | ரூ.41.99 லட்சம் | ரூ.47.74 லட்சம் | 2.0லி TSI டர்போ பெட்ரோல் | 7 ஸ்பீட் DSG | AWD |
| ஜேப் மெரிடியன் | ரூ.23.. லட்சம் | ரூ.36.39 லட்சம் | 2.0லி டீசல் | 6 ஸ்பீட் MT/ 9 ஸ்பீட் AT | FWD/AWD |
சொரெண்டோ Vs போட்டியாளர்கள் - பாதுகாப்பு அம்சங்கள்
நான்கு எஸ்யுவிகளிலும் உள்ள பாதுகாப்பு உபகரணங்கள் நவீன ஐரோப்பிய மற்றும் இந்தியத் தரநிலைகளைப் பூர்த்தி செய்கின்றன. சொரெண்டோவில், ஃபார்வர்ட் கொலிசன் அவாய்டன்ஸ், லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான லெவல்-2 ADAS அமைப்புடன், 10 ஏர்பேக்குகளும் இடம்பெற்றுள்ளன.
ஸ்கோடா கோடியாக், 9 ஏர்பேக்குகள் வரையிலான அம்சங்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் மல்டி-கொலிஷன் ப்ரேக்கிங் ஆகியவற்றுடன் பாதுகாப்பு அம்சங்களில் முன்னிலை வகிக்கிறது. ஃபோக்ஸ்வேகன் டெய்ரோன், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக், ஹில் டிசென்ட் கன்ட்ரோல் மற்றும் 9 ஏர்பேக்குகள் ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க பாதுகாப்பை வழங்குகிறது. ஜீப் மெரிடியன், உயர் வலிமை கொண்ட எஃகு ஃப்ரேம், 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா அமைப்பு மற்றும் டயர் ப்ரஷர் மானிட்டரிங் ஆகியவற்றின் மூலம் கட்டமைப்பு உறுதித்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























