Kia Seltos Hybrid: கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் ஹைப்ரிட் எடிஷன் 2027ம் ஆண்டு, இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கியா செல்டோஸ் ஹைப்ரிட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் செல்டோஸ் காரின் ஹைப்ரிட் வெர்ஷன் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ப்ராண்டிற்கான இந்தியாவின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மூத்த துணைத் தலைவர் அதுல் சூட், “செல்டோஸில் ஹைப்ரிட்டை அறிமுகப்படுத்துவதற்கான தெளிவான வழிமுறை உள்ளது” என்று தகவலை வெளியிட்டுள்ளார். அதேநேரம், இந்திய சந்தைக்கான கியாவின் அடுத்த காராக செல்டோஸ் ஹைப்ரிட் இருக்காது என்றும் கூறப்படுகிறது. கடந்த 10ம் தேதி தான், இரண்டாவது தலைமுறை செல்டோஸ் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
செல்டோஸ் ஹைப்ரிட் பற்றி அறிந்தது...
கியாவின் ஹைப்ரிட் இன்ஜின் பற்றிய விவரங்கள் ஏதும் தற்போது வரை வெளியாகவில்லை. ஆனாலும் கிடைத்துள்ள தகவல்களின்படி, அது தற்போது பயன்பாட்டில் உள்ள 115hp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் இன்ஜினில் இருந்தே மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், செல்டோஸிற்கு ஹைப்ரிட் இன்ஜின் என்பது புதியதல்ல. காரணம் அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா சந்தைகளில், முதல் தலைமுறை செல்டோஸிலேயே ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், இந்தியாவில் மற்றொரு கியா எஸ்யூவியை சந்தைப்படுத்திய பிறகே செல்டோஸ் ஹைப்ரிட் வரும் என்றும் சூட் சூசகமாக தெரிவித்துள்ளார். அதன்படி, டொயோட்டா ஃபார்ட்சுனர் மற்றும் எம்ஜி குளோஸ்டருடன் போட்டியிடும் வகையில், சொரெண்டோ எஸ்யுவியை கியா சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர்மயமாகும் செல்டோஸ் ஹைப்ரிட்
சந்தைப்படுத்துதல் தொடர்பாக பேசுகையில், “ஹைப்ரிட் காரை சந்தைப்படுத்துவதற்கான நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை, ஏனெனில் நாங்கள் இந்தியாவில் ஹைப்ரிட் பாகங்களை உள்ளூர்மயமாக்க முயற்சிக்கிறோம்" என்றும் சூட் கூறினார். இருப்பினும், உற்பத்தியாளர் 12-18 மாதங்களில் செல்டோஸ் ஹைப்ரிட் எடிஷனை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளதை நிறுவனத்தின் நகர்வுகள் உணர்த்துகின்றன.
கியாவைப் பொறுத்தவரை, பேட்டரி பேக்குகள், மோட்டார்கள், கண்ட்ரோல் யூனிட்கள் மற்றும் இன்வெர்ட்டர்கள் உள்ளிட்ட ஹைப்ரிட் உதிரிபாகங்களை உள்ளூர்மயமாக்குவது மிகவும் முக்கியமானது. காரணம் புதிய செல்டோஸின் விலை ரூ.11.25 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் உள்ளூர்மயமாக்கப்படாவிட்டால், ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்ட எடிஷன் அதிக விலை கொண்டதாக இருக்கும். இது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த நடுத்தர SUV பிரிவில் அதன் விற்பனைக்கு நல்லதல்ல, அங்கு விலை நிர்ணயம் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
ஹைப்ரிட்டில் கியாவின் இலக்கு:
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற முதலீட்டாளர் கூட்டத்தில், 2030 ஆம் ஆண்டுக்குள் ப்ராண்டின் மொத்த விற்பனையில் குறைந்தது 25 சதவிகிதத்தை தனது ஹைப்ரிட் கார்கள் மூலம் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, கியாவின் தற்போதைய வரிசையில் பெட்ரோல், டீசல் மற்றும் மின்சார பவர்டிரெய்ன் விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஹைப்ரிட்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், உற்பத்தியாளர் வரைவு செய்யப்பட்ட CAFE 3 விதிமுறைகளிலிருந்தும் பயனடைவார். இது கலப்பின மற்றும் மின்சார கார்களுக்கு மேம்பட்ட இணக்க நன்மைகளை வழங்க முன்மொழிகிறது
Car loan Information:
Calculate Car Loan EMI