Kia Car Discount: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு, செப்டம்பர் 22ம் தேதி வரை பிரத்யேக சலுகைகளை அறிவித்துள்ளது.

Continues below advertisement

கியா அறிவித்த சலுகைகள்:

விழாக்காலம் தொடங்கவிருப்பதை முன்னிட்டு, புதிய ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, கியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. செப்டம்பர் 22ம் தேதி வரையில் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய, குறுகிய காலத்திற்கான சலுகைகளை வழங்கியுள்ளது. தற்போதைய ஜிஎஸ்டி அடிப்படையிலான சேமிப்பாக ரூ.58 ஆயிரத்தையும், கூடுதல் விழாக்கால சலுகைகளாக ஒரு லட்சத்து 67 ஆயிரம் ரூபாயையும் பயனர்கள் பெற முடியும் என கூறப்படுகிறது. இது மாநிலம் மற்றும் பிராந்தியம் மற்றும் தேர்வு செய்யக்கூடிய மாடல் அடிப்படையில் மாறக்கூடும்.

Continues below advertisement

ரூ.2.25 லட்சம் வரை சலுகை பெறும் செல்டோஸ்

கியா நிறுவனம் வெளியிட்டுள்ள தள்ளுபடிகளின்படி, கேரளாவில் செல்டோஸ் கார் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதேநேரம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாவட்டங்களில் ரூ.2 லட்சம் வரை பணப்பலன்கள் வழங்கப்படுகின்றன. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் இந்த மிட்சைஸ் எஸ்யுவி 5 சீட்டருக்கு 1.75 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கின்றன.

ப்ராண்டின் புதிய கார் மாடலான காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலுக்கு, தமிழ்நாட்டில் ரூ.1.55 லட்சம் வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதேநேரம், வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் இந்த காருக்கு ரூ.1.45 லட்சம் மட்டுமே சேமிக்க முடியும். கேரளாவில் ரூ.1.25 லட்சம் அளவிலும், கர்நாடகாவில் 88 ஆயிரத்து 650 ரூபாயும் சலுகைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கியாவின் எந்த காருக்கு எவ்வளவு சலுகை?

பிராந்தியம்/ மாநிலம் செல்டோஸ் (ரூ.) காரென்ஸ் க்ளாவிஸ் (ரூ.) காரென்ஸ் (ரூ.)
வடமாநிலங்கள் ரூ.1,75,000 ரூ.1,45,500 ரூ.1,26,500
கிழக்கு மாநிலங்கள் ரூ.1,75,000 ரூ.1,45,500 ரூ.1,20,000
மேற்கு மாநிலங்கள் ரூ.1,75,000 ரூ.1,45,500 ரூ.1,26,500
ஆந்திரா/ தெலங்கானா ரூ.2,00,000 ரூ.1,33,350 ரூ.1,20,500
கேரளா ரூ.2,25,000 ரூ.1,25,650 ரூ.1,20,500
தமிழ்நாடு ரூ.2,00,000 ரூ.1,45,650 ரூ.1,30,500
கர்நாடகா ரூ.2,10,000 ரூ.88,650 ரூ.1,10,500

காரென்ஸ் மாடலுக்கான சலுகைகள் என்ன?

வழக்கமான காரென்ஸ் கார் மாடல்களுக்கு ரூ.1.10 லட்சம் முதல் ரூ.1.30 லட்சம் வரையிலான சலுகைகள், செப்டம்பர் 22ம் தேதி வரை அமலில் இருக்கும் என கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களைச் சார்ந்து மாறுபடும். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ரூ.1.3 லட்சம் சலுகைகள் கிடைக்கின்றன.  செப்டம்பர் 22 க்குப் பிறகு திருத்தப்பட்ட ஜிஎஸ்டி அமலுக்கு வரும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, அறிவிக்கப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம் என கியா நிறிவனம் தெரிவித்துள்ளது.

செப்.22க்கு பிறகான கியா சலுகைகள்:

செப்டம்பர் 22ம் தேதி புதிய ஜிஎஸ்டி திருத்தம் அமலுக்கு வரும்போது, கியா நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. அதன்படி, கியா கார்னிவல் கார் மீது அதிகபட்சமாக பயனர்கள் ரூ.4.49 லட்சம் வரை சேமிக்கலாம். அதேநேரம், சப்-4 மீட்டர் எஸ்யுவி ஆன சைரோஸ் மற்றும் சோனெட் கார் மாடல்களுக்கு ரூ.1.5 லட்சத்திற்கும் அதிகமாக  விலை குறைய உள்ளது. 


Car loan Information:

Calculate Car Loan EMI