கார் விற்பனையை அதிகரிக்கவும், இந்தியாவில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கவும் 'Kia Walk with Champions' மற்றும் 'Kia Drive to FIFA World Cup 2026' ஆகிய இரண்டு முன்னெடுப்புகளை கியா நிறுவனம் அறிவித்துள்ளது.
Kia FIFA: செல்டோஸ், சோனெட் காரை புக் பண்ணுங்க..! ருபாய் செலவு இல்லாம USA போங்க - கியா அதிரடி சலுகை
Kia Indias FIFA Contest: செல்டோஸ் மற்றும் சோனெட் கார் மாடல்களை முன்பதிவு செய்பவர்களில், சில அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு அனுப்பப்படுவார்கள் என கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

Kia Indias FIFA Contest: செல்டோஸ் மற்றும் சோனெட் கார் மாடல்கள் மீது கியா நிறுவனம் அறிவித்துள்ள சலுகை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
கியா அறிவித்த அதிரடி சலுகைகள்..
கியா நிறுவனம் தனது கார் விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், இந்தியாவில் கால்பந்தாட்டத்தை ஊக்குவிக்கும் விதமாகாவும் இரண்டு அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ‘Kia Walk with Champions’ மற்றும் ‘Kia Drive to FIFA World Cup 2026” என இரண்டு முன்னெடுப்புகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு, கால்பந்தாட்ட உலகின் மிகப்பெரிய திருவிழாவான உலகக் கோப்பையை எளிதில் அணுகக் கூடியதாக மாற்றியுள்ளது. கடந்த 2007ம் முதல் ஃபிஃபாவின் உலகளாவிய அதிகாரப்பூர்வ கூட்டாளியாகவும், உலகக் கோப்பை போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ மொபிலிட்டி கூட்டாளியாகவும், தனது நீண்டகால விளையாட்டு மரபை இந்தியாவிலும் பரப்ப கியா முனைப்பு காட்டியுள்ளது.
மைதானத்திற்குள் செல்ல 2 பேருக்கு வாய்ப்பு
Kia Walk with Champions முன்னெடுப்பின் மூலம், வாழ்நாளில் கிடைத்திடாத வாய்ப்பாக 10 முதல் 14 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு, அமெரிக்காவில் நடைபெற உள்ள 2026ம் ஆண்டு உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ போடிட்யில், வீரர்களுடன் களத்திற்கு செல்ல கியா அனுமதி அளிக்க உள்ளது. மூன்றாம் தரப்பு பங்குதாரர் மூலம் குலுக்கல் முறையில் அந்த அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். குறிப்பாக இன்ஜின் எடிஷன் காரென்ஸ் க்ளாவிஸ் கார் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கும், மின்சார எடிஷன் காரென்ஸ் க்ளாவிஸ் கார் வாடிக்கையாளர்களில் ஒருவருக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதி வரையில் மேற்குறிப்பிட்ட கார் மாடல்களை வாங்குவோர், கியா வழங்கும் வழிமுறைகளை பின்பற்றி பதிவு செய்தால் அதிர்ஷ்டசாலிகளுக்கு அமெரிக்கா செல்லா வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நட்சத்திர வீரர்களுடன் களத்திற்கு செல்லலாம். அவர்களுடன் பெற்றோரில் யாரேனும் ஒருவர் அல்லது பாதுகாவலர் அனுமதிக்கப்படுவர். விசா, தங்குமிடம் என அனைத்து செலவுகளையும் கியா நிறுவனமே ஏற்க உள்ளது.

4 பேருக்கு போட்டிக்கான டிக்கெட்
”Kia Drive to FIFA World Cup 2026” முன்னெடுப்பின் மூலம் நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 4 அதிர்ஷ்டசாலிகளுக்கு, 2026ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை போட்டியை நேரில் காண வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து செலவுகளையும் கியாவே ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட கால கட்டத்தில் ப்ராண்டின் செல்டோஸ், சோனெட், சைரோஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸ் (ICE/EV) ஏதேனும் ஒரு காரை வாங்கி அதிர்ஷ்ட குலுக்கலுக்கு முன்பதிவு செய்பவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. செல்டோஸ், சோனெட், சைரோஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸ் என ஒவ்வொரு கார் மாடல்களுக்கான வாடிக்கையாளர்களில் இருந்தும் ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளார். அதிர்ஷ்டசாலிகள் தங்களுடன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அல்லது நண்பர் யாரேனும் ஒருவரை உடன் அழைத்துச் செல்லலாம்.

பயனர்கள் கவனிக்க வேண்டியவை..
பிப்ரவரி 12 முதல் மார்ச் 10, 2026 வரை செய்யப்படும் முன்பதிவுகளை மேற்கொளவ்தோடு, அதிர்ஷ்டக் குலுக்கலைப் பெறுவதற்கான இறுதித் தகுதி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வாகன வாங்குதலை முடிப்பது மற்றும் விதிமுறைகள் & நிபந்தனைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றுக்கு உட்பட்டது ஆகும். வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்வதற்காக அனைத்து வெற்றியாளர்களும், அதிர்ஷ்டக் குலுக்கல் செயல்முறை மூலம் தீர்மானிக்கப்படுவார்கள்.
கியா கார் மாடல்களின் விலை விவரங்கள்:
- செல்டோஸ் விலை வரம்பு - ரூ.10.99 - ரூ.19.99 லட்சம்
- சோனெட் விலை வரம்பு - ரூ.7.30 லட்சம் - ரூ.14.10 லட்சம்
- சைரோஸ் விலை வரம்பு - ரூ.8.67 லட்சம் - ரூ.15.94 லட்சம்
- காரென்ஸ் விலை வரம்பு - ரூ.11.08 லட்சம் - ரூ.20.71 லட்சம்
- காரென்ஸ் க்ளாவிஸ் EV - ரூ. 17.99 லட்சம் - ரூ.24.49 லட்சம்
கால்பந்து உலகக் கோப்பை 2026
கால்பந்தாட்ட உலகக் கோப்பையானது வரும் ஜுன் மாதம் 11ம் தேதி தொடங்கி ஜுலை மாதம் தேதி வரை நடைபெற உள்ளது. அமெரிக்கா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் 16 நகரங்களில் நடைபெற உள்ள போட்டியில், 48 அணிகள் பங்கேற்கின்றன.
Frequently Asked Questions
கியா நிறுவனம் இந்தியாவில் எதற்காக இரண்டு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது?
'Kia Walk with Champions' சலுகை மூலம் குழந்தைகளுக்கு என்ன வாய்ப்பு கிடைக்கும்?
10 முதல் 14 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு, 2026 அமெரிக்க உலகக் கோப்பையில் வீரர்களுடன் களத்திற்குச் செல்லும் வாழ்நாள் வாய்ப்பு வழங்கப்படும்.
'Kia Drive to FIFA World Cup 2026' சலுகை மூலம் எத்தனை பேர் உலகக் கோப்பையை நேரில் காணலாம்?
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் 4 அதிர்ஷ்டசாலிகள் 2026 உலகக் கோப்பையை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள். இதற்கான அனைத்து செலவுகளையும் கியா ஏற்கும்.
இந்த சிறப்பு சலுகைகளுக்கு எந்தெந்த கார் மாடல்கள் தகுதியானவை?
செல்டோஸ், சோனெட், சைரோஸ் மற்றும் காரென்ஸ் க்ளாவிஸ் (ICE/EV) ஆகிய கார் மாடல்களை வாங்குபவர்கள் இந்த சிறப்பு சலுகைகளுக்கு தகுதியானவர்கள்.
























