Kia Inspiring December Discount 2026: கியா நிறுவனத்தின் செல்டோஸ் தொடங்கி கார்னிவல் வரையிலான மாடல்களுக்கு, டிசம்பர் மாத தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

கியா கார் மாடல்களுக்கு சலுகை:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆண்டின் இறுதியில் சலுகைகளை அள்ளி வீசி, வாடிக்கையாளர்களை கவரும் விதமாக டிசம்பர் மாதத்திற்கான தள்ளுபடிகளை கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இன்ஸ்பையர்ட் டிசம்பர் என்ற பெயரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட மாடல்கள் மீது டிசம்பர் மாத இறுதி வரை ரூ.3.65 லட்சத்திற்கான சலுகைகள் வழங்கப்படுகிறது. புத்தாண்டுக்குள் கார் வாங்க விரும்புவோரை, தங்கள் பக்கம் இழுக்கும் நோக்கில் கியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Continues below advertisement

அனைத்து மாடல்களுக்கும் ரூ.3.65 லட்சம் சலுகை

வழக்கமாக வழங்கப்படும் ஒற்றை மாடலுக்கான சலுகையாக இல்லாமல், இந்திய சந்தையில் உள்ள ப்ராண்டின் ஒட்டுமொத்த லைன் - அப்பிற்கும் இந்த சலுகை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காம்பேக்ட் பிரிவில் உள்ள சோனெட் மற்றும் சைரோஸ் தொடங்கி, மிட்சைஸ் மற்றும் ப்ரீமியம் வாகனங்களான செல்டோஸ், காரென்ஸ் க்ளாவிஸின் இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன்கள் மற்றும் கார்னிவல் மாடல்கள் வரையிலும் சலுகைகள் பொருந்தும். ஒட்டுமொத்த மாடல்களுக்கு சலுகைகளை வழங்கி இருப்பதன் மூலம், பல்வேறு பிரிவுகளில் உள்ள தேவைகளையும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள கியா திட்டமிட்டுள்ளது.

கியா கார்களுக்கு சலுகைகள் எப்படி?

பயனர்களுக்கான சலுகைகள் என்பது நேரடி பண தள்ளுபடி, எக்சேஞ்ச் தொடர்பான பலன்கள், கியா கார்களை கொண்டிருப்பவர்களுக்கான லாயல்டி ரிவார்ட்ஸ், கார்ப்ரேட் ஸ்கீம்  மற்றும் பிற டீலர்ஷிப் அளவிலான திட்டங்கள் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக நீங்கள் பெறக்கூடிய சலுகையானது தேர்வு செய்த வேரியண்ட், எரிபொருள் வகை டீலர்களிடம் உள்ள கையிருப்பு ஆகியவற்றை பொறுத்து மாறுபடும்.

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு

அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் கையிருப்பில் இருக்கும் தன்மையைப் பொறுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என கியா அறிவுறுத்தியுள்ளது. மாடல் மற்றும் டிரிம் அடிப்படையில் நன்மைகள் மாறுபடும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. கார் வாங்க விருப்பமுள்ளவர்கள் மாதத்தின் இறுதி நாட்கள் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே கியா இணையதளம் அல்லது டீலர்ஷிப் அலுவலகத்தை அணுகி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என கியா வலியுறுத்தியுள்ளது. முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு கியாவின் கட்டணமில்லா வாடிக்கையாளர் உதவி எண்களான 1800-108-5000 அல்லது 1800-108-5005. மூலமாகவும் ஆலோசனைகளை பெறலாம்.

கியா கார் மாடலின் விலை வரம்புகள்:

  • கியா செல்டோஸ் - ரூ.10.49 லட்சம் தொடங்கி ரூ.19.81 லட்சம் வரை
  • கியா சோனெட் - ரூ.7.30 லட்சம் தொடங்கி ரூ.14.09 லட்சம் வரை
  • கியா சைரோஸ் - ரூ.8.67 லட்சம் தொடங்கி ரூ.15.94 லட்சம் வரை
  • கியா காரென்ஸ் க்ளாவிஸ் -ரூ.11.08 லட்சம் தொடங்கி ரூ.20.71 லட்சம் வரை 
  • கியா காரென்ஸ் க்ளாவிஸ் EV -ரூ.17.99 லட்சம் தொடங்கி ரூ.24.49 லட்சம் வரை
  • கியா கார்னிவெல் -ரூ.59.42 லட்சம்

மேற்குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்துமே எக்ஸ் - ஷோரூம் விலைகளாகும். இதிலிருந்தே அதிகபட்சமாக ரூ.3.65 லட்சம் வரை சலுகைகளை கியா அறிவித்துள்ளது.


Car loan Information:

Calculate Car Loan EMI