KiaEV9: EV9 மாடல் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின், விலையுயர்ந்த கார் மடலாக இருக்கும் என கூறப்படுகிரது.


கியா EV9 அறிமுகம்:


கியா நிறுவனம் தனது கார்னிவல் மற்றும் EV9 ஆகிய இரண்டு மாடல்களையும்,  அக்டோபர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை முன்னிட்டு EV9 மாடலின் விவரக்குறிப்புகள், இருக்கை, அம்சங்கள் என,  இந்த எலெக்ட்ரிக் SUV பற்றிய அனைத்து விவரங்களையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.


EV9 பேட்டரி விவரங்கள்:


இந்தியாவிற்கான EV9, அதன் பெரிய 99.8kWh பேட்டரி பேக் மற்றும் ஆல்-வீல் டிரைவ் கான்ஃப்கரேஷனுக்கான,  இரட்டை மின்சார மோட்டார்கள் ஆகியவற்றுடன் கிடைக்கும். இரண்டு மோட்டார்கள் இணைந்து, 384hp மற்றும் 700Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது. SUV ஆனது 5.3 வினாடிகளில், 0-100kph வேகத்தை எட்டும் திறன் கொண்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால்,  561கிமீ தூரம் பயணிக்கலாம் என கூறப்படுகிறது. DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் பேட்டரியை 24 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும்.


EV9 வடிவமைப்பு விவரங்கள்:


EV9 எஸ்யுவி ஆனது 5,015mm நீளம், 1,980mm அகலம், 1,780mm உயரம் மற்றும் 3,100mm வீல்பேஸ் கொண்டுள்ளது. இது இந்தியாவில் நிலையான 6 சீட்டர் அமைப்புடன் முழுமையாக ஏற்றப்பட்ட GT-லைன் டிரிமில் வழங்கப்படும். அதாவது, இரண்டாவது வரிசை இருக்கைகள் கேப்டன் நாற்காலிகளாக இருக்கும். கியா EV9 ஆனது ஸ்னோ ஒயிட் பேர்ல், ஓஷன் ப்ளூ, பெப்பிள் கிரே, பாந்தெரா மெட்டல் மற்றும் அரோரா பிளாக் பேர்ல் ஆகிய ஐந்து வெளிப்புற வண்ண விருப்பங்களில் கிடைக்கும். வெள்ளை & கருப்பு மற்றும் பிரவுன் & பிளாக் ஆகிய இரண்டு டூயல்-டோன் இன்டீரியர் தீம்கள் வழங்கப்படுகிறது. SUV 20-இன்ச் அலாய் வீல்களை ஸ்டேண்டர்டாக கொண்டிருக்கும்.


கியா EV9 தொழில்நுட்ப அம்சங்கள், பாதுகாப்பு


அம்சங்களைப் பொறுத்தவரையில், EV9 ஆனது 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் அதே அளவிலான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கொண்ட இரட்டை-டிஸ்ப்ளே அமைப்பைப் பெறும். இது ஒளிரும் ஸ்டீயரிங் எம்பலம், இரட்டை மின்சார சன்ரூஃப்கள், ஹெட்-அப் டிஸ்ப்ளே, லெக் சப்போர்ட் கொண்ட இரண்டாவது வரிசை கேப்டன் இருக்கைகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட்மெண்ட், மசாஜ் செயல்பாடு, டிஜிட்டல் IRVM, V2L 14-ஸ்பீக்கர் மெரிடியன் ஆடியோ சிஸ்டம்,  டிஜிட்டல் சாவி, OTA புதுப்பிப்புகள், எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்டபள் ஸ்டீயரிங் வீல், ஆறு USB டைப்-சி சார்ஜிங் போர்ட்கள், மூன்று மண்டல காலநிலை கட்டுப்பாடு என பல்வேறு அம்சங்கள் உள்ளன.


கியா EV9 பாதுகாப்பு அம்சங்கள்


EV9 இன் பாதுகாப்புத் தொகுப்பில் 10 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்சி, டவுன்ஹில் பிரேக் கண்ட்ரோல், விஎஸ்எம், முன், பக்க மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS லெவல் 2 அம்சங்களான முன்னோக்கி மோதல் எச்சரிக்கை போன்றவை இருக்கும். மற்றும் அவாய்டன்ஸ் அசிஸ்ட், லேன் புறப்படும் எச்சரிக்கை, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட், லேன் கீப் அசிஸ்ட் என பாதுகாப்பு அம்சங்களும் அடுக்கப்பட்டுள்ளன.


Kia EV9 எதிர்பார்க்கப்படும் விலை, போட்டியாளர்கள்


EV9 ஒரு நேரடி இறக்குமதியாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் மற்றும் இங்கு பிராண்டின் முதன்மையான மாடலாக நிலைநிறுத்தப்படும் என கூறப்படுகிறது. இதன் விலை ரூ. 1 கோடிக்கு மேல் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை என்றாலும், EV9 ஆடம்பர மின்சார SUVகளான Mercedes EQE SUV, BMW iX மற்றும் Audi Q8 e-tron போன்றவற்றுக்கு போட்டியாக அமையும்.


Car loan Information:

Calculate Car Loan EMI