kia Carens Clavis Price: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலின் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கியா காரென்ஸ் கிளாவிஸ் விலை அறிவிப்பு:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் காரென்ஸ் கிளாவிஸ் மாடல் கார், அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இந்த கார் மாடலின் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காரென்ஸ் கிளாவிஸ் மாடலின் தொடக்க விலை 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.  கடந்த மே 9ம் தேதி முதல், 25 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் இந்த காரை முன்பதிவு செய்துகொள்ளும் ஆப்ஷன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. பிரீமியம் அம்சங்களுடன் கூடிய கிளாவிஸ் சந்தைக்கு வந்தாலும், பழைய காரென்ஸ் மாடலும் தொடர்ந்து விறபனை செய்யப்படும் என காரென்ஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காரென்ஸ் கிளாவிஸ் விலை விவரங்கள்:

மாடல் HTE விலை (ரூ.) HTE (O) விலை (ரூ.) HTK விலை (ரூ.) HTK+ விலை (ரூ.) HTK+(O) விலை (ரூ.) HTX விலை (ரூ.) HTX+ விலை (ரூ.)
1.5L NA பெட்ரோல் (7 சீட்டர்) 11.50 லட்சம் 12.50 13.50 - - - -
1.5L டர்போ பெட்ரோல் (6 சீட்டர்) - - - - - - 19.40 - 21.50 லட்சம்
1.5L டர்போ பெட்ரோல் (7 சீட்டர்) - 13.40 லட்சம் 14.40 லட்சம் 15.40 - 16.90 லட்சம் 16.20 - 17.70 லட்சம் 18.40 - 18.70 லட்சம் 19.40 - 21.50 லட்சம்
1.5L டீசல் (7 சீட்டர்) 13.50 லட்சம் 14.55 லட்சம் 15.52 லட்சம் 16.50 லட்சம் 17.30 லட்சம் 19.50 லட்சம் 18 லட்சம்

காரென்ஸ் கிளாவிஸ் பவர் ட்ரெயின் மைலேஜ்:

இன்ஜின் 1.5L டர்போ பெட்ரோல் 1.5L டீசல் 1.5L  பெட்ரோல்
பவர் (hp) 160 116 115
டார்க் (Nm) 253 250 144
ட்ரான்ஸ்மிஷன் 6MT/ 6iMT/7DCT 6MT/ 6AT 6MT
மைலேஜ் விவரம் (கிமீ/லி) 15.95 (6MT/ 6iMT) / 16.66 (7DCT) 19.54 (6MT) / 17.50 (6AT) 15.34

கிளாவிஸ் காரென்ஸில் டீசல் எடிஷன் அதிகபட்சமாக 19.4 கிமீ மைலேஜ் வழங்குகிறது. முந்தைய காரென்ஸ் கார் மாடல் 16 முதல் 21 கிமீ மைலேஜ் வழங்கி வந்தது. ஆனால், புதிய காரென்ஸ் கிளாவிஸில் இந்த மைலேஜ் ரேஞ்சானது 15.34 முதல் 19.54 கிமீ ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: Kia Carens Clavis: புக் பண்ணிடலாமா..! வெளியானது கியா கிளாவிஸ் - 7 ட்ரிம்கள், 1.5L இன்ஜின், தாராளமான அம்சங்கள்

கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்பு:

எம்பிவி மற்றும் எஸ்யுவிக்கான இணைப்பு பாலமாக, இந்திய குடும்பங்களுக்கு ஏற்றவாறு காரென்ஸ் கிளாவிஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தனித்துவமான வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய உட்புறம், அதிகபட்ச பாதுகாப்பு வசதிகள் ஆகியவை இந்த காரை தேர்வு செய்வதற்கான முக்கிய காரணங்களாகும். மொத்தம் 7 வேரியண்ட்களில், புதியதாக ஐவோரி சில்வர் கிளாஸ் உட்பட 8 வண்ணங்களில் கிடைக்கிறது. 

முதன்மையான அம்சங்கள்:

  • 20 தன்னாட்சி அம்சங்களுடன் கூடிய லெவல் 2 ADAS
  • ஒன் டச் எலெக்ட்ரிக் டம்பள் &  வால்க் இன் பாஸ் மோட்
  • வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ், 4-வே பவர்ட் ட்ரைவர் சீட்
  • போஸ் 8 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம்
  • ஸ்மார்ட் ப்யூர் ஆர் ப்யூரிஃபையர், ரூஃப் மவுண்டட் ஏசி வெண்ட்ஸ் ஆகிய அம்சங்களை இந்த செக்மெண்டில் கொண்டுள்ள முதல் கார் காரென்ஸ் கிளாவிஸ் ஆகும்.

பாதுகாப்பு அம்சங்கள்:

ADAS அம்சத்தை கடந்து பல நிலையான பாதுகாப்பு அம்சங்களையும் காரென்ஸ் கிளாவிஸ் கொண்டுள்ளது. அதில்,

  • 6 ஏர் பேக்குகள்
  • ESC,HAC,DBC
  • ரியர் ஆக்குபண்ட் அலெர்ட்
  • டயர் ப்ரெஷர் மானிட்டரிங் சிஸ்டம்

ஆகிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள் எப்படி?

மல்டி பேசஞ்சர் வெஹைகிள் ஆன காரென்ஸ் கிளாவிஸ் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பரவலான போட்டியாளர்களை கொண்டுள்ளது. தொடக்க மற்றும் மிட் ஸ்பெக்கில் கியா செல்டோஸ், ஹுண்டாய் கிரேட்டா, ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா ஹைரைடர் ஆகியவை போட்டியாளர்களாக உள்ளன. டாப் ஸ்பெக்கில் எண்ட்ரி லெவல் வெர்ஷன்களான ஹுண்டாய் அல்கசார், எம்ஜி ஹெக்டர் பிளஸ் மற்றும் மஹிந்திரா XUV 700 ஆகிய கார் மாடல்களின் போட்டியை எதிர்கொள்கிறது.


Car loan Information:

Calculate Car Loan EMI